வெள்ளி, டிசம்பர் 09, 2011

பித்த மயக்கத்தை போக்கி -தோல் நோய்க்கும் பயன்படும் -மஞ்சிஷ்டாதி தைலம்-Manjistadhi thailam


பித்த மயக்கத்தை போக்கி -தோல் நோய்க்கும் பயன்படும்
-மஞ்சிஷ்டாதி தைலம்-Manjistadhi thailam
 (ref-ஸஹஸ்ரயோகம் - தைலப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            கத்தாழைச்சாறு குமாரீஸ்வரஸ  8.960 கிலோ கிராம்
2.            தண்ணீர் ஜல             8.960 லிட்டர்
3.            நல்லெண்ணெய் திலதைல      2.240 கிலோ கிராம்
4.            பசுவின் பால் கோக்ஷீர          8.960           

                இவைகளை ஒன்றாகக் கலந்து அத்துடன்

1.            மஞ்சட்டி மஞ்ஜிஷ்டா                      10 கிராம்
2.            நன்னாரி ஸாரிவா                              10     
3.            கோரைக்கிழங்கு முஸ்தா                        10     
4.            கடுகரோஹிணீ கடுகீ                      10     
5.            தக்கோலம் தக்கோல                      10     
6.            ஜாதிக்காய் ஜாதீபல                             10     
7.            கண்டி வெண்ணெய்                              10     
8.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீ பலத்வக்       10     
9.            தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) பிபீதகீ பலத்வக்     10     
10.          நெல்லிமுள்ளி ஆமலகீ பலத்வக்                 10     
11.          சடாமாஞ்சில் ஜடமாம்ஸீ                        10     
12.          கிரந்திதகரம் தகர                               10     
13.          கோஷ்டம் கோஷ்ட                             10     
14.          அதிமதுரம் யஷ்டீ                              10     
15.          இலவங்கப்பட்டை லவங்கத்வக்                  10     
16.          ஏலக்காய் ஏலா                            10     
17.          இலவங்கப்பத்திரி லவங்கபத்ரி                   10     
18.          சிறுநாகப்பூ நாககேஸர                          10     
19.          விளாமிச்ச வேர் உசீர                      10     
20.          அகில்கட்டை அகரு                             10      
21.          கிச்சிலிக்கிழங்கு ஸட்டீ                         10     
22.          கஸ்தூரி மஞ்சள் வனஹரீத்ரா                   10     
23.          ஆம்பல்கிழங்கு உத்பல                          10     
24.          குருவேர் ஹ்ரிவேர                             10     
25.          தாமரைத்தண்டு பத்ம (அ) கமல                 10     

                இவைகளை அரைத்துக் கல்கமாகச் சேர்த்துக் காய்ச்சி மத்யம பாகத்தில் இறக்கி வடிக்கட்டவும். அஞ்சனக்கல் (அஞ்ஜன) 10 கிராம் பொடித்துப் பாத்திர பாகமாகவும்,” பச்சை கற்பூரம் (கற்பூர) 10 கிராம், கஸ்தூரி 10 கிராம் இவைகளை ஆறியபின் அரைத்தும் சேர்க்கவும்.

குறிப்பு:    தைலத்திற்கு சம அளவு பாலும், சம அளவு கத்தாழைச்சாறும் சேர்த்துத் தயாரிப்பதும் உண்டு.

பயன்படுத்தும் முறை:       
மேற்பூச்சாக (அப்யங்க) வெளி உபயோகத்திற்கு மட்டும்.

தீரும் நோய்கள்:  

ஒற்றைத்தலைவலி (அர்த்தாவ பேதகம்), தலைவலி (சிரோருஜா), கிறுகிறுப்பு எனப்படும் பிரமை (ப்ரம) போன்ற தலைசார்ந்த நோய்கள், கண்வலி (நேத்ரருஜா) போன்ற கண் சார்ந்த நோய்கள்.

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. மஞ்சிஷ்டம் என்ற அற்புத மூலிகை பொருள் தோல் வியாதிக்கும் ,நிறம் சார்ந்த நோய்க்கும் உதவுவதால் ..இந்த மருந்தை நிறம் மாற கறுப்பாக்கி உள்ள தோல் நோய்க்கும் பயன்படும்
  2. பித்த மயக்கத்துக்கு தேய்த்து குளித்தால் -மயக்கம் சரியாகும்
  3. தலை சார்ந்த நோய்க்கு இந்த மருந்தை பயன்படுத்தலாம்
  4. பித்த வாத நோய்க்கும் இந்த மருந்து சிறந்த தீர்வு
  5. அஞ்சனக்கல் ,பசும்பால் -போன்றவை இந்த மருந்தின் சிறப்பம்சம்Post Comment

1 comments:

கருத்துரையிடுக