திங்கள், டிசம்பர் 12, 2011

கப பித்த தோல் நோய்களில் சிறந்த மருந்து -நால்பாமராதி தைலம்-Nalpamaradhi thailam


கப பித்த தோல் நோய்களில் சிறந்த மருந்து -நால்பாமராதி தைலம்-Nalpamaradhi thailam
(ref-ஸஹஸ்ரயோகம் - தைலப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            மஞ்சள் ஹரீத்ரா          260 கிராம்
2.            பர்ப்பாடகம் பர்பாடக  260        
3.            தண்ணீர் ஜல        8.320 லிட்டர்

இவைகளைக் கொதிக்க வைத்து 2.080 லிட்டர் ஆகக் குறுக்கி வடிகட்டி அத்துடன்

1.            நல்லெண்ணெய் திலதைல            260 கிராம்
2.            தேங்காய் எண்ணெய் நாரிகேள தைல  260        

ஆகியவைகளைச் சேர்த்து

1.            ஆலம்பட்டை வாதத்வக்                         10 கிராம்
2.            அரசம்பட்டை அஸ்வத்தாத்வக்                   10          
3.            அத்திப்பட்டை உதும்பரத்வக்                     10          
4.            இத்திப்பட்டை ப்ளக்ஷத்வக்                      10          
5.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீ பலத்வக்       10          
6.            தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) பிபீதகீ பலத்வக்     10          
7.            நெல்லிமுள்ளி ஆமலகீ பலத்வக்                     10          
8.            சந்தனம் சந்தன                           10          
9.            விளாமிச்சம் வேர் உசீர                         10          
10.          கோஷ்டம் கோஷ்ட                             10          
11.          மஞ்சட்டி மஞ்ஜிஷ்டா                      10          
12.          கிச்சிலிக்கிழங்கு ஸட்டீ                         10          
13.          அகில்கட்டை அகரு                             10          

இவைகளை அரைத்துக் கல்கமாகச் சேர்த்துக் காய்ச்சிக் கரபாகத்தில் இறக்கி வடிக்கட்டவும்.

குறிப்பு:    

 ½ பங்கு சரக்குடன் 16 பங்கு தண்ணீர் சேர்த்து 4 பங்காகக் குறுக்கி வடிக்கட்டிய கஷாயத்துடன் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் வகைக்கு 4 பங்கும், கல்க சாமான்கள் வகைக்கு 40ல் ஒரு பங்கும் சேர்த்துத் தயாரிப்பதும் உண்டு.
                பச்சை மஞ்சள், பசும் பர்ப்பாடகம் இவற்றின் சாறு பிழிந்து தயாரிப்பதும் உத்தமம்.

பயன்படுத்தும் முறை:     

மேற்பூச்சாக (அப்யங்க) வெளி உபயோகத்திற்கு மட்டும்.

தீரும் நோய்கள்:  


சொறி (கண்டூ), சிரங்கு (பாமா), அக்கி (விஸர்ப்ப), படை (விஸர்ச்சிகா), சிறு தோல் நோய்கள் (ஸூத்ர குஷ்டம்) போன்ற பலவித தோல் நோய்கள் (த்வக்ரோக).

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. தோல் நோய்களில் இந்த மருந்து நன்றாக வேலை செய்கிறது
  2. ஆலமரம்,அரசமரம்-போன்ற அற்புத மூலிகைகள் அடங்கிய இந்த துவர்ப்பு சுவை அதிகமுள்ள மருத்துகள் அடங்கிய இந்த மருந்து -தோல் நோய்களில் முக்கியமாக கப பித்த தோல் நோய்களில் நல்ல பலன் தரும் ..
  3. கரப்பானுக்கு இந்த மருந்து சிறந்த மருந்து

Post Comment

0 comments:

கருத்துரையிடுக