வியாழன், டிசம்பர் 15, 2011

ஆயுர்வேத சிகிச்சையில் வாழ் நாள் சாதனையாளர்கள் விருது

ஆயுர்வேத சிகிச்சையில் வாழ் நாள் சாதனையாளர்கள் விருது

பாராட்டுக்கள் -வாழ்த்துக்கள்

எனது மானசீக குருக்களில் ஒருவரும் ,நல்ல ஆத்மார்த்த நண்பருமான ,மரியாதைக்கும் உரிய டாக்டர் .எஸ். ஹரிஹரன் .,பி ,ஏ,எம் ,எஸ் (Dr.S.HARIHARAN .,B.A.M.S.,)அவர்களுக்கு கடந்த 12 .12 .11  அன்று அஸ்வினி -2011  என்ற சாய்ராம் மருத்துவ கல்லூரி நடத்திய -இன்டர்நேஷனல் ஆயுர்வேத கருத்தரங்கில் அவருக்கு ஆயுர்வேத சிகிச்சையில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கபட்டது ..இது அவரது சேவைக்கு கிடைத்த அங்கீகாரம் ..அவரை மனம் உவந்து மென் மேலும் விருதுகள் பெற வாழ்த்துகிறோம் ..


அவர் இந்த ஆண்டிலே பெறக்கூடிய இரண்டாவது விருது இது ..இதற்க்கு முன் ஆயுர்வேத சித்த மருந்து தயாரிப்பு நிறுவனமான எஸ் .கே .எம்(S.K.M)  தனது எஸ்.கே .எம் -கேர் (S.K.M-CARE AWARD)விருதுகளில் ஒன்றான -ஆயுர்வேத சிகிச்சா திலகம் என்ற ஒரு சிறந்த விருதினை அவருக்கு  09.10.2011 தந்து கௌரவ படுத்தியது .. 

அவரை பற்றி ..  1. டாக்டர் .எஸ். ஹரிஹரன் .,பி ,ஏ,எம் ,எஸ் அவர்கள் வைத்திய பாரம்பரியம் உள்ளவர்கள் ..அவர்களது தந்தை மதிப்பிற்குரிய வைத்தியர் விஸ்வநாத அய்யர் ..
  2. அனைத்திந்திய ஆயுர்வேத காங்கிரஸ் என்னும் கூட்டமைப்பின் -தமிழ்நாட்டின் கிளையில் -சீனியர் செயலாளராகவும் ,மற்றும் பல்வேறு பொறுப்புகளிலும் இருந்தவர் ,இருப்பவர் -அவரது மேலான ஆலோசனை கொண்டே இந்த அமைப்பு வளர்ந்து கொண்டே இருக்கிறது .
  3. இருபது வருடத்திற்கும் மேலாக ஆயுர்வேத மருத்துவ ஆலோசனை செய்து தொண்டு செய்து கொண்டிருப்பவர் ..
  4. பழகுவதற்கு என்றும் இனிமையானவர் ,காழ்ப்புணர்ச்சியே  இல்லாத எல்லோரிடமும் பழுகுபவர்..எல்லோருக்கும் நண்பர் -என்னக்கும் ஆத்ம நண்பர்
  5. பல கருத்தரங்குகளில் கலந்து கொண்டு -ஆயுர்வேத சித்த டாக்டர்களுக்கு வகுப்பு எடுத்தவர் .
  6. பல இலவச ஆயுர்வேத கண்காட்சிகளையும் ,இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்களையும் நடத்துபவர் .
  7. செங்கோட்டை அரசு ஆயர்வேத மருந்தகத்தில் -உதவி மருத்துவ அலுவலராக பணியாற்றி வருபவர் ..
  8. விஸ்வநாத் ஆயுர்வேத பஞ்சகர்ம சிகிச்சை மையமும் -அவரது மேற்பார்வையின் கீழ் ஆயுர்வேத மருத்துவர்களை கொண்டும் -செங்கோட்டையில் நடத்தி கொண்டு இருப்பவர் ..
  9. ஆயுர்வேதத்தில் எழும் எனக்கும் ,என்னை போன்ற வர்களுக்கும் எழும் சந்தேகங்களுக்கும் -சரியான -தெளிவான விடை சொல்லி வழி நடத்துபவர் ..
  10. அவரது சேவையை பாராட்டும் இந்த விருது பெருமை பட வேண்டும் என்றும் -உளமார வாழ்த்தியவனாக-வாழ்க பல்லாண்டு..

ஆயுர்வேத சிகிச்சையில் வாழ்நாள் சாதனையாளர் விருது ..எனது சீனியரும் ..நல்ல நண்பரும் -அனைவரையும் எளிதில் கவரக்கூடிய ஆயுர்வேத காங்கிரஸ் புகழ் ,மதுரை தன்வந்தரி நிலைய தலைமை மருத்துவர் -டாக்டர் தன்வந்தரி ப்ரேம்வேல் சார் அவர்களுக்கு கிடைத்து பற்றி பெரு மகிழ்ச்சி அடைகிறோம் ..

அவரையும் மேன் மேலும் விருதுகள் பெற்று சேவைகள் தொடர மனமார வாழ்த்துகிறோம் ..அவரை பற்றி வாழ்த்தி சொல்வதற்கு இன்னொரு பதிவு தேவைப்படும் ..

Post Comment

4 comments:

கருத்துரையிடுக