விஷ கடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விஷ கடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், மார்ச் 13, 2013

கிருமிகளை ஓட விரட்டும் -க்ருமிமுத்கர ரஸ (Kirumi mudhagara Rasa)


கிருமிகளை ஓட விரட்டும் -க்ருமிமுத்கர ரஸ (Kirumi mudhagara Rasa)                                                                              
(Ref-வைத்ய சிந்தாமணி - கிருமிப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            சுத்தி செய்த ரஸம் – ஷோதித ரஸ                10 கிராம்
2.            சுத்தி செய்த கந்தகம் – ஷோதித கந்தக         20           “

இவைகளை நன்கு அறைத்துக் கறுத்த கஜ்ஜிளி செய்து கொண்டு அத்துடன்
   
3.            ஓமம் – அஜமோதா                        30 கிராம்
4.            வாயுவிடங்கம் – விடாங்க        40           “

இவற்றை நன்கு பொடித்துச் சலித்துச் சேர்த்துப் பிறகு அத்துடன்,
5.            சுத்தி செய்த எட்டிக்கொட்டை – ஷோதித விஷமுட்டி     50 கிராம்
6.            புரசம் விதை (போதுமான அளவு
 தண்ணீரில் ஊறவைத்து மேல் தோல் நீங்கியது) – பலாஸ பீஜ 60     கிராம்


                இவ்விரண்டையும் தனித்தனியே கீழே குறிப்பிட்டுள்ள கஷாய வகைகளில் ஒன்றை உபயோகித்து நன்கு அரைத்து விழுதாக்கிச் சேர்த்து எல்லாவற்றையும் கல்வத்திலிட்டு 

1. வாயுவிடங்கம் 2. புரசம் விதை 3. ஓமம் இவற்றின் கஷாயம் கொண்டு தனித்தனியே மூன்று நாட்கள் நன்கு அரைத்து உலர்ந்தபின் பொடித்துச் சலித்து பத்திரப்படுத்தவும்.

                
குறிப்பு:    

சில குறிப்பிட்ட கஷாயங்களை உபயோகித்து அரைத்து இதைத் தயாரிப்பது சம்பிரதாயம். இவற்றுடன் சிலர் சுத்தி செய்த எட்டிக்கொட்டை கஷாயத்தையும் உபயோகித்து அரைப்பர்.

அளவும் அனுபானமும்:     

200 முதல் 300 மில்லி கிராம் 2 முதல் 3 வேளைகள்  தேன் அல்லது கோரைக்கிழங்கு கஷாயத்துடன்.

தீரும் நோய்கள்: 

பசியின்மை (அக்னிமாந்த்ய), ஜீரணக்குறைவு (அஜீர்ண), உருண்டைப்புழு, தட்டைப் புழு, நாடாப்புழு, கொக்கிப்புழு போன்ற வயிற்றுலுள்ள குடற்பூச்சிகள் (கண்டூபாதக்ருமி).

தெரிந்து கொள்ள வேண்டியவை 






  • 1.  எல்லாவகையான கிருமிகளுக்கும் இந்த மாத்திரை சிறந்த மருந்து 
  • 2.      பொதுவாக பேதியாவதில்லை ..கிருமிகளை மட்டும் அழித்து மலத்தில் வெளியேற்றும் 
  • 3.      பெரியவர்களுக்கு காலை மாலை தினம் ஒரு மாத்திரை வீதம் ஒரு வாரத்திற்கும் 
  • 4.      குழந்தைகளுக்கு (கவனத்துடன் ) இரவு மட்டும் ஒரு மாத்திரை வீதம் ஒரு வாரத்திற்கும் 
  • 5.      அனுபானமாக ..பொதுவாக குப்பை மேனி வேர் கஷாயத்துடனும் ,வாய்விடங்கம் தேனுடன் தருவது நல்லது ..
  • 6.      ஆங்கில மருந்தில் வெளிவராத பெரிய பெரிய நாக்கு பூச்சிகள் முதல் சிறிய சிறிய கொக்கி புழு ,கீரிப்பூச்சிக்கும்  நல்லது ..
  • 7.      இந்த மருந்து கிருமிக்கு மட்டுமல்லாது கிருமியினால் வரும் பல தொந்தரவுகளையும் மாற்றும் எனபது திண்ணம்




Post Comment

ஞாயிறு, ஏப்ரல் 15, 2012

தோல் நோய்க்கு எளிய பற்று -துவரக லேபம்-Thuvarak Lepam


தோல் நோய்க்கு எளிய பற்று -துவரக லேபம்-Thuvarak Lepam
(ref-அஷ்டாங்க ஹ்ருதயம் - உத்தரஸ்தானம்)

தேவையான மருந்தும் செய்முறையும்:

                ஓடு நீக்கிய நீரடிமுத்துப் பருப்பை (துவரக பீஜ) சிறிது தேங்காய் எண்ணெய்யுடன் (நாரிகேள தைல) கலந்து நன்கு அறைத்துக் களிம்பு போல் ஆனவுடன் பத்திரப்படுத்தவும். இது நடைமுறையில் உள்ள முறை. ஆனால் மூல நூலில் நீரடிமுத்து பருப்பை மட்டும் அப்படியே அரைத்துக் களிம்பாக்கி பயன்படுத்தும்படி கூறப்பட்டுள்ளது.

பயன்படுத்தும் முறை:  

மேற்பூச்சாக (அப்யங்க) வெளி உபயோகத்திற்கு மட்டும்.

தீரும் நோய்கள்:  

அரிப்பு (கண்டூ), சொறி (கட்ச்சு), சிரங்கு (பாமா), தோல் வெடிப்பு (விபாடிகா), சிலர் இதனை கார்போக அரிசியை (பாகுசீ) அரைத்த விழுதுடன் கலந்து வெண்குட்டத்தில் (ஸ்வித்ர) பூசுவதுண்டு.

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. ஒரே மூலிகை விதை -இந்த மருந்தில்  எல்லா விதமானதோல் நோய்க்கும் சிறந்த தீர்வாக விளங்குகிறது
  2. அரிப்பு ,கரப்பான் -அலர்ஜி தோல் நோய்க்கும் இந்த மருந்தை பயன்படுத்தலாம்
  3. வெண் புள்ளிகளுக்கு -கார்போகி அரிசி அல்லது அவல் குஜாதி லேப சூரணத்துடன் பற்றிட நல்ல பலன் தரும்



Post Comment

வெள்ளி, ஜனவரி 13, 2012

காணாக்கடிக்கும் விஷ கடிக்கும் நல்ல மருந்து பில்வாதி குடிகா- Bilwadhi Gutika


காணாக்கடிக்கும் விஷ கடிக்கும் நல்ல மருந்து
பில்வாதி குடிகா- Bilwadhi Gutika
(அஷ்டாங்க ஹ்ருதயம், உத்தரஸ்தானம் – ஸர்ப்பவிஷ சிகித்ஸா)

தேவையான மருந்துகள்:

1.            வில்வவேர் – பில்வமூல                        50 கிராம்
2.            துளசிப்பூ – துளசி புஷ்ப                          50           “
3.            புங்கம் பருப்பு – கரஞ்ஜபீஜ மஜ்ஜ                  50           “
4.            கிரந்தி தகரம் – தகர                              50           “
5.            தேவதாரு – தேவதாரு                            50           “
6.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) – ஹரீதகீ பலத்வக்       50           “
7.            தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) – பிபீதகீ பலத்வக்     50           “
8.            நெல்லிமுள்ளி – ஆமலகீ பலத்வக்                 50           “
9.            சுக்கு – சுந்தீ                                     50           “
10.          மிளகு – மரீச்ச                                   50           “
11.          திப்பிலி – பிப்பலீ                                50           “
12.          மஞ்சள் – ஹரித்ரா                               50           “
13.          மரமஞ்சள் – தாரு ஹரித்ரா                       50           “

செய்முறை:     

 இவைகளை நன்கு பொடித்துச் சலித்துக் கல்வத்திலிட்டு வெள்ளாட்டின் மூத்திரம் (அஜமூத்ர) விட்டரைத்து 500 மில்லி கிராம் மாத்திரைகளாகச் செய்யவும்.

அளவும் அனுபானமும்:      

ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை, இரண்டு முதல் நான்கு வேளைகள் தேன் அல்லது தண்ணீருடன் கொடுக்கவும்.


தீரும் நோய்கள்:  





சிலந்தி, தேள், பாம்பு, எலி ஆகியவற்றின் கடி விஷம் (லூத, வ்ருஷிக, ஸர்ப்ப, ஆகு விஷ), வாந்திபேதி (விஷூஸிகா), செரியாமை (அஜீர்ண), அஜீர்ண பேதி, இடு விஷம் (அ) மருந்தீடு (கரவிஷ (அ) கரதோஷ), காய்ச்சல் (ஜ்வர).
                 
விஷக்கடிகளில் இதனைத் தண்ணீருடன் உரைத்துக் கடிவாயின் மேல் பூசலாம்.

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. விஷ கடிக்கு இந்த மருந்து மிக சிறந்தது
  2. தொடர்ந்து சாப்பிட அரிப்பு ,தோல் வியாதிக்கும் நல்ல மருந்து
  3. வில்வ வேர் சேர்த்ததால் மட்டுமே பலன் கிடைக்கும் ,வில்வ இலை சேர்த்து பல கம்பெனிகள் தயாரிப்பதாய் அறிகிறோம் ..வில்வ இலை சேர்ந்தால் எந்த பலனும் இல்லை
  4. ஆட்டு மூத்திரம்  பயன்படுவதால் ..மருந்து சற்றே அந்த வாசனை தெரியும் ..ஆனால் இம்மருந்தே நன்றாக வேலை செய்யும் ..பல கம்பெனிகள் ..பிலிம் கோட்டெட் மாத்திரைகளை வெளிவிடுகின்றன ..ஆனால் அம்மாத்திரைகளால் எந்த பலனும் இல்லை
  5. கடிகள் எதுவானாலும் இந்த மருந்தை சாப்பிட்டால் பின்னால் பயப்படவே வேண்டாம்

Post Comment