வெள்ளி, ஜனவரி 13, 2012

காணாக்கடிக்கும் விஷ கடிக்கும் நல்ல மருந்து பில்வாதி குடிகா- Bilwadhi Gutika


காணாக்கடிக்கும் விஷ கடிக்கும் நல்ல மருந்து
பில்வாதி குடிகா- Bilwadhi Gutika
(அஷ்டாங்க ஹ்ருதயம், உத்தரஸ்தானம் ஸர்ப்பவிஷ சிகித்ஸா)

தேவையான மருந்துகள்:

1.            வில்வவேர் பில்வமூல                        50 கிராம்
2.            துளசிப்பூ துளசி புஷ்ப                          50          
3.            புங்கம் பருப்பு கரஞ்ஜபீஜ மஜ்ஜ                  50          
4.            கிரந்தி தகரம் தகர                              50          
5.            தேவதாரு தேவதாரு                            50          
6.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீ பலத்வக்       50          
7.            தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) பிபீதகீ பலத்வக்     50          
8.            நெல்லிமுள்ளி ஆமலகீ பலத்வக்                 50          
9.            சுக்கு சுந்தீ                                     50          
10.          மிளகு மரீச்ச                                   50          
11.          திப்பிலி பிப்பலீ                                50          
12.          மஞ்சள் ஹரித்ரா                               50          
13.          மரமஞ்சள் தாரு ஹரித்ரா                       50          

செய்முறை:     

 இவைகளை நன்கு பொடித்துச் சலித்துக் கல்வத்திலிட்டு வெள்ளாட்டின் மூத்திரம் (அஜமூத்ர) விட்டரைத்து 500 மில்லி கிராம் மாத்திரைகளாகச் செய்யவும்.

அளவும் அனுபானமும்:      

ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை, இரண்டு முதல் நான்கு வேளைகள் தேன் அல்லது தண்ணீருடன் கொடுக்கவும்.


தீரும் நோய்கள்:  





சிலந்தி, தேள், பாம்பு, எலி ஆகியவற்றின் கடி விஷம் (லூத, வ்ருஷிக, ஸர்ப்ப, ஆகு விஷ), வாந்திபேதி (விஷூஸிகா), செரியாமை (அஜீர்ண), அஜீர்ண பேதி, இடு விஷம் (அ) மருந்தீடு (கரவிஷ (அ) கரதோஷ), காய்ச்சல் (ஜ்வர).
                 
விஷக்கடிகளில் இதனைத் தண்ணீருடன் உரைத்துக் கடிவாயின் மேல் பூசலாம்.

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. விஷ கடிக்கு இந்த மருந்து மிக சிறந்தது
  2. தொடர்ந்து சாப்பிட அரிப்பு ,தோல் வியாதிக்கும் நல்ல மருந்து
  3. வில்வ வேர் சேர்த்ததால் மட்டுமே பலன் கிடைக்கும் ,வில்வ இலை சேர்த்து பல கம்பெனிகள் தயாரிப்பதாய் அறிகிறோம் ..வில்வ இலை சேர்ந்தால் எந்த பலனும் இல்லை
  4. ஆட்டு மூத்திரம்  பயன்படுவதால் ..மருந்து சற்றே அந்த வாசனை தெரியும் ..ஆனால் இம்மருந்தே நன்றாக வேலை செய்யும் ..பல கம்பெனிகள் ..பிலிம் கோட்டெட் மாத்திரைகளை வெளிவிடுகின்றன ..ஆனால் அம்மாத்திரைகளால் எந்த பலனும் இல்லை
  5. கடிகள் எதுவானாலும் இந்த மருந்தை சாப்பிட்டால் பின்னால் பயப்படவே வேண்டாம்

Post Comment

1 comments:

sakthi சொன்னது…

நண்பரே ,மிக மிக அவசியமான எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய மருந்து .படிப்போர் அவசியம் பெயர் குறித்து கொள்ளவும்

நட்புடன் ,
கோவை சக்தி

கருத்துரையிடுக