பெரு வயிறில் பெரும்பங்கு வகிக்கும் -பனை விரலாதி
க்ஷாரம் Panavirladhi Ksharam
(ref-ஸஹஸ்ரயோகம்)
தேவையான
மருந்துகள்:
1. பனம்பூச்சாம்பல் – தாளபுஷ்ப க்ஷார 1 கிலோ கிராம்
2. நாயுருவிச்சாம்பல் – அபமார்க க்ஷார 1 “
3. நீர் முள்ளிச்சாம்பல் – கோகிலாக்ஷ க்ஷார 1 “
4. வாழைக்கிழங்குச் சாம்பல் – ரம்பா க்ஷார 1 “
செய்முறை:
இவற்றை நான்கு பங்கு தண்ணீரில் கரைத்துத்
தெளியவைக்கவும். பின்னர் கலங்காது தெளிவை இறுத்துக் கொதிக்க வைத்துத் தண்ணீர்
வற்றியபின் தங்கிய க்ஷாரத்தை ஆறியபின்னர் பொடித்துச் சலித்துக் காற்று புகாத கொள்
கலன்களில் பத்திரப்படுத்தவும்.
அளவும்
அனுபானமும்:
அரை முதல் ஒரு கிராம் வரை
நெய்யுடன் இரு வேளைகள். குழந்தைகளுக்கு பாதியளவு கொடுக்கவும்.
தீரும் நோய்கள்:
பெருவயிறு (மஹோதரம்), வீக்கம் (ஸோப), சிறுநீர் தடைபடல் (மூத்ராசங்க), வியர்வையின்மை, நாளங்கள்
தடைபடுதல், செரிமானக்
கோளாறுகள் (அஜீர்ண).
தெரிந்து கொள்ள வேண்டியவை
தெரிந்து கொள்ள வேண்டியவை
- வாசா குலூச்யாதி கஷாயம் ,திராக்ஷாதி கஷாயத்துடன் -இந்த மருந்தை தேவை கருதி -சரியாக உபயோகிக்க அசிட்டீஸ் என்னும் பெரு வயிறுக்கு நல்ல மருந்தாக அமையும் ..
- பசியை தூண்டும்
- மூத்திரத்தை பெருக்கும்
0 comments:
கருத்துரையிடுக