வியாழன், ஜனவரி 19, 2012

உணவு விஷமானதால் ஏற்படும் -காய்ச்சல் மற்றும் வாந்தி பேதிக்கு - ஸஞ்சீவினீ வடி -Sanjeevani vati


உணவு விஷமானதால் ஏற்படும் -காய்ச்சல் மற்றும் வாந்தி பேதிக்கு -
ஸஞ்சீவினீ வடி -Sanjeevani vati
(ஸாரங்கதரஸம்ஹிதா - மத்யமகண்ட)

தேவையான மருந்துகள்:

1.            வாயுவிடங்கம் விடங்க                         10 கிராம்
2.            சுக்கு சுந்தீ                                     10 கிராம்
3.            திப்பிலி பிப்பலீ                                  10          
4.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீ பலத்வக்       10          
5.            தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) பிபீதகீ பலத்வக்     10          
6.            நெல்லிமுள்ளி ஆமலகீ பலத்வக்                 10          
7.            வசம்பு வச்சா                                  10          
8.            சீந்தில் கொடி குடூசீ                             10          
9.            சேராங்கொட்டை (சுத்தி செய்தது) ஷோதித பல்லாதக   10          
10.          நாபி (சுத்தி செய்தது) ஷோதித வத்ஸநாப              10          

செய்முறை:     

 இவைகளைச் சேராங்கொட்டை, நாபி நீங்கலாகப் பொடித்துச் சலித்துக் கல்வத்திலிட்டு பசுவின் மூத்திரம் (கோமூத்திர) கொண்டு அரைக்கவும். சேராங்கொட்டை, நாபி இவைகளைத் தனியே சிறிது கோமூத்திரத்தில் ஊறவைத்து நன்கு அரைத்துச் சேர்த்து எல்லாவற்றையும் பசுவின் மூத்திரம் விட்டரைத்து 50 மில்லி கிராம் மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி பத்திரப்படுத்தவும்

.
தீரும் நோய்கள்:  



செரியாமை (அஜீர்ண), குன்மம் (குல்ம), வாந்திபேதி (விஷுஸிகா), காய்ச்சல் (ஜ்வர), பாம்புக்கடி (ஸர்ப்பதம்ஷ்ட்ட).

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. புட் பாய்சன் என்னும் உணவு நஞ்சாகி போதலால் ஏற்படும் காய்ச்சல் ,வாந்தி பேதி போன்றவற்றை சரி செய்யும்
  2. நாள்பட்ட காய்ச்சலுக்கும் இந்த மருந்து நன்றாக வேலை செய்யும்
  3. சேராங்கொட்டை இருப்பதால் இந்த மருந்து -கட்டிகளை குறைக்க -இன்பெக்டட் காயங்கள் இந்த மருந்தால் மாறும்
  4. ஆண்டி பயாடிக் போல இந்த மருந்து பயன்படும்

Post Comment

1 comments:

sakthi சொன்னது…

'' நாள்பட்ட காய்ச்சலுக்கும் இந்த மருந்து நன்றாக வேலை செய்யும் ''

நன்றி நண்பரே

கருத்துரையிடுக