இரிடபல் பவல் சின்ட்ரோம் என்னும் கிராணி கழிச்சளுக்கு-
சித்ரக குடிகா Chitraka gutika
(tef-பைஷஜ்ய ரத்னாவளி - கிரஹண்யதிகாரம்)
தேவையான
மருந்துகள்:
1. கொடிவேலி – சித்ரக 100 கிராம்
2. திப்பிலி மூலம் – பிப்பலீ மூல 100 “
3. ஸர்ஜ க்ஷாரம் – ஸர்ஜக்ஷார 100 “
4. யவக்ஷாரம் – யவக்ஷார 100 “
5. இந்துப்பு – ஸைந்தவலவண 100 “
6. கல்லுப்பு – ஸ்வர்ச்சலவண 100 “
7. சோற்றுப்பு – சமூத்ரலவண 100 “
8. கரி உப்பு – பிடலவண 100 “
9. வளையலுப்பு – காச்சலவண 100 “
10. சுக்கு – சுந்தீ 100 “
11. மிளகு – மரீச்ச 100 “
12. திப்பிலி – பிப்பலீ 100 “
13. பெருங்காயம் (பொரித்தது) – ஹிங்கு 100 “
14. ஓமம் – அஜமோதா 100 “
15. செவ்வியம் – சவ்ய 100 “
16. துருஞ்சி அல்லது எலுமிச்சை சாறு – மாதுலங்கரஸ
(அ) ஜம்பீர ரஸ போதுமான அளவு
செய்முறை:
பழச்சாறு நீங்கலாக மற்றவைகளை முறைப்படி
பொடித்துச் சலித்துக் கல்வத்திலிட்டு பழச்சாறு கொண்டு நன்கு அரைத்துப் பதத்தில் 500 மி.கி. எடையுள்ள மாத்திரைகளாக்கவும்.
அளவும்
அனுபானமும்:
ஒன்று முதல் நான்கு
மாத்திரைகள் வெந்நீர் அல்லது மோருடன்.
தீரும் நோய்கள்:
பசிக்குறைவு (அக்னிமாந்த்ய), செரியாமை தோஷக்கோளாறுகள் (ஆமதோஷ), பெருங்கழிச்சல் (க்ரஹணீ), குன்மம் (குல்ம), வயிற்று வலி (குக்ஷி சூல).
1 comments:
தகவலுக்கு நன்றி
நன்றி நண்பரே ,
நட்புடன் ,
கோவை சக்தி
கருத்துரையிடுக