வியாழன், ஜனவரி 05, 2012

அடைப்பை நீக்கும் -கல்யாணக க்ஷாரம் -Kalayana Ksharam


அடைப்பை நீக்கும் -கல்யாணக க்ஷாரம் -Kalayana Ksharam
 (ref-அஷ்டாங்கஹ்ருதயம் - அர்சோரோகசிகித்ஸா)

தேவையான மருந்துகள்:

1.            சுக்கு சுந்தீ                                50 கிராம்
2.            மிளகு மரீச்ச                             50           “ 
3.            திப்பிலி பிப்பலீ                            50           “ 
4.            இந்துப்பு ஸைந்தவலவண                  50           “ 
5.            கல்லுப்பு ஸ்வர்ச்சலவண                  50           “ 
6.            கருப்பு உப்பு பிடாலவண                   50           “ 
7.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீ பலத்வக்  50           “ 
8.            தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) பிபீதகீ பலத்வக்     50           “ 
9.            நெல்லிமுள்ளி ஆமலகீ பலத்வக்                 50           “ 
10.          நாகதந்தி வேர் (நேர்வாள வேர்) தந்தீ மூல        50           “ 
11.          சுத்தி செய்த சேராங்கொட்டை ஷோதித பல்லாதக 50           “ 
12.          கொடிவேலிவேர் சித்ரக                          50           “  

செய்முறை:     

 இவைகளைச் சிறு துண்டுகளாக்கிச் சிறிது நசுக்கிப் போதுமான அளவு பசுவின் நெய், பசுவின் மூத்திரம் இவைகள் சேர்த்துப்பிசறி மண்பானையிலிட்டு அகலால் பானையின் வாயை மூடிச் சீலைமண் செய்து காய்ந்தபின் சரக்குகள் கருகும்வரை எரித்தெடுத்துப்பொடி செய்து சலித்துக் காற்றுப்புகாத கலங்களில் பத்திரப்படுத்தவும்.

அளவும் அனுபானமும்:      

அரை முதல் ஒரு கிராம் வரை நெய்யுடன் இரு வேளைகள் கொடுக்கவும்.


தீரும் நோய்கள்:  மலச்சிக்கல் (விபந்த), வயிற்று உப்புசம் (ஆத்மான), குன்மம் (குல்ம), மலமும் மூத்திரமும் பந்தப்படுவதாலேற்படும் நெஞ்சுவலியும் வாந்தியும் (உதாவர்த்த), மூலம் (அர்ஷ), பெருவயிறு (மஹோதரம்), பசியின்மை (அக்னி மாந்த்ய), செரியாமை (அஜீர்ண), நாளங்கள் அடை படுதல் அல்லது தடைபடுதல். நச்சுகளை உடலிலிருந்து வெளியேற்றுகிறது.


தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. க்ஷாரங்கள் -உப்புக்களில் இந்த கல்யாண க்ஷாரம் மிக எளிதாதாக கிடக்க  கூடியது ,செய்ய எளிதானது  ..
  2. மூலத்தில் இந்த மருந்தை நத்தை பஸ்பத்துடன் சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்
  3. ஆண்களுக்கு -விந்து குழாயில் ஏற்படும் அடைப்பை -வெரிகோசீல் அடிப்பினால் ஏற்படும் எசூசோசெப்ர்மியா -உயிர் அணுக்களே இல்லாத குறைக்கு -இந்த மருந்தை ஷட் பல கிருதம் போன்ற அடைப்பை நீக்க பயன்படும் மருந்தோடு கொடுத்து பார்த்ததில் -அடைப்பு நீங்கு உயிர் அணுக்கள் பெருகிய நோயாளிகள் பல உள்ளனர் ( பொதுவாக க்ஷாரத்தை ஆண்களுக்கு பயன் படுத்தும் போது-எச்சரிக்கை தேவை -உரிய ஆலோசனை இல்லாமல் -இந்த மருந்தை பயன்படுத்த வேண்டாம் )
  4. பெண்களின் கருக்குழாய் அடைப்புக்கு -இந்த மருந்தை -மாத விலக்கு வரும் நாட்களில் -தக்க துணை மருந்தோடு (சித்த மருந்துகளில் உள்ள மலை வேம்பாதி தைலம் ..இன்னும் பல மருந்துகள் )கொடுத்து வர சீக்கிரம் பலன் தெரியும் ..
  5. இதய இரத்த குழாய் அடைப்புக்கும் -வரானாதி கஷாயத்துடன் பயன்படுத்தலாம்

Post Comment

1 comments:

கருத்துரையிடுக