வியாழன், ஜனவரி 12, 2012

விந்து முந்துதலுக்கு மருந்தாகும் (மூலம் ,மார்பக கட்டியையும் சரி செய்யும்) -பல்லாதகவடீ-Bhallathaka vati


விந்து முந்துதலுக்கு மருந்தாகும் (மூலம் ,மார்பக கட்டியையும் சரி செய்யும்)
-பல்லாதகவடீ-Bhallathaka vati
 (பைஷஜ்ய ரத்னாவளி - அர்சோரோகாதிகாரம்)

தேவையான மருந்துகள்:

1. சுத்தி செய்த சேராங்கொட்டை ஷோதித பல்லாதக      50 கிராம்
2.  தோல் போக்கிய எள்ளு தில பீஜ                        50          
3. கடுக்காய் (கொட்டை நீக்கிப் பொடித்துச் சலித்தது) ஹரீதகீ    50      
4.            வெல்லம் குட                                  50           “\

செய்முறை:     

 சேராங்கொட்டையை நன்கு அரைத்து விழுதாக்கி ஓடு நீகியபின் மற்றவைகளை சேர்த்து அரைத்து 200 மில்லி கிராம் மாத்திரைகளாக உருட்டவும். மாத்திரை உருட்டும்போது சேராங்கொட்டை ஓடு விரல்களில் தென்பட்டால் அவைகளை நீக்கி உருட்டவும்.

அளவும் அனுபானமும்:      

ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை பாலுடன் இரு வேளைகள் நோயாளியின் தாக்குப்பிடிக்கும் தன்மைக்கு ஏற்ப, பொதுவாக சிறு அளவிலே தொடங்கி பின்னர் அளவைக் கூட்டிக் கொள்வதே நடைமுறை வழக்கு.

தீரும் நோய்கள்:  

பரங்கிப்புண் (பிரங்கஜ வ்ரண), குஷ்டம் (தோல் நோய்கள்), கீல்வாயு (சந்திவாத), தானே விந்து வெளிப்படல் (சுக்ரமேஹ).

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. வாத கப மூலத்திற்கு அதாவது இரத்தம் வராத காய்ந்த மூலத்தை சுருக்க உதவும் ..மூலம் இந்த மருந்தால் தீரும்
  2. சேராங்கொட்டை ஒரு காய கல்ப மூலிகை -நல்ல காமம் பெருக்கியாக உதவும் என்கிறது சாரங்கதர சம்ஹிதை
  3. ஆசார்யர் சுஸ்ர்ததர் -ஸ்தன்ய சோதன மூலிகை என்கிறார் ..தாய்ப்பாலை சுத்தம் செய்யும் எனக்கொள்ளலாம் ..அனால் எனது அனுபவத்தில் கர்ப்பிணிகளுக்கு உபயோகிப்பதை தவிர்ப்பது நல்லது ...ஆனால்  மார்பக கட்டிகள் ,மார்பக புற்று நோய்க்கும் இந்த மருந்து நன்றாக வேலை செய்யும்
  4. சேராங்கொட்டை சுத்தம் செய்யாமல் பயன்படுத்தினால் அது ஆபத்தாக முடியும்
  5. சீக்கிரம் விந்து நழுவுதல் என்னும் -விந்து முந்துதலுக்கு -இந்த மருந்தை தக்க துணை மருந்தோடு -படித்த ஆயர்வேத மருத்துவரின் துணையோடு சாப்பிட -நல்ல பலன் கிடைக்கும்
  6. வாத நீர் சம்பதமான வலிகளை போக்கும் ஆற்றல் உடையது
  7. எலும்பில் வாதம் தாக்கினாலும் (அஸ்தி வக ஸ்ரோதஸ் ) அதை பக்குவமாக விடுபட செய்ய முடியும்
  8. சற்றே உஷ்ண வீர்யம் என்பதால் தக்க கவனம் தேவை
  9. தோல் நோய்க்கும் ,ஆறாத புண்ணுக்கும் ,கேன்சருக்கும் இந்த மருந்து நன்றாக வேலை செய்யும்

Post Comment

1 comments:

கருத்துரையிடுக