மர்மம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மர்மம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, அக்டோபர் 13, 2013

க்ஷிப்ர மர்மம் -கைகளில் உள்ள மர்ம புள்ளி

ரச வஹ ,பிராண வஹ ஸ்ரோதசையும்,அவலம்பக கபத்தையும் காப்பாற்றும் -சதை நாரினால் ஆன க்ஷிப்ர மர்மம்


Post Comment

தல ஹ்ருதய மர்மம் – கைகளில் உள்ள மர்ம புள்ளி ..

இந்த மர்ம புள்ளி –பிராண வஹ ஸ்ரோதஸ் உடன் தொடர்புடையது ...

Post Comment

சனி, அக்டோபர் 12, 2013

கைகளில் உள்ள மர்மங்கள் (இருகரங்கள்)

கைகளில் உள்ள வர்மங்கள் (இருகரங்கள்)

(Varmas in Upper Extremities)



  1. அடிக்குழி (தலஹிர்தயா) – Plantar Aponeurosis                              2
  2. சிப்பிரம் (ஷீப்ரா) – Firtst inter metacarpal ligament                                2
  3. கூர்ச்சம் (கூர்ச்சா) – Carpometacarpal and intercarpal ligament           2
  4. கூர்ச்சசிரம் (கூர்ச்சசிரா) – Lateral ligament of wrist joint                 2
  5. மணி பந்தம் (மணிபந்தா) – Wrist joint                                            2
  6. இந்திரவதி (இந்திரபஸ்தி) – Cubital fossa                                      2
  7. கூர்ப்பரம் (கூர்ப்பரா) – Elbow joint                                                    2
  8. ஆணி (ஆனி) – Tendon of biceps brachii muscle                                    2
  9. ஊர் (ஊர்வி) – Brachial artery                                                                  2
  10. உலோகிதை (லோகிதாக்ஷா) – Axillary vessel                                 2
  11. கட்சியாதரம் (கக்ஷீதாரா) – Brachial plexus                                         2


                                                                                                        மொத்தம்           22

Post Comment

வியாழன், அக்டோபர் 10, 2013

மர்ம வகைப்பாடு - உடற்கூறுபாட்டியல் வகைப்பாடு

     உடற்கூறுபாட்டியல் வகைப்பாடு (Regional Classification)

                இவ்வகைப்பாட்டியல் உடலை பாகங்களாக்கி அவைகளில் செறிந்துள்ள வர்மங்களை வகைப்படுத்தி கூறப்படுகின்றன. ஆயுர்வேத முறைப்படி உடலின் பாகங்களை ஐந்துவிதமாக பிரித்து மர்மங்கள் விளக்கப்படுகின்றன. அவைகள் பின் வருமாறு.

                கைகளில் உள்ள மர்மங்கள்                                                                  22
                கால்களில் உள்ள மர்மங்கள்                                                               22
                கழுத்து முதல் மூலம் வரை முன்பகுதி மர்மங்கள்                   12
       கழுத்து முதல் பின்பகுதியில் உள்ள மர்மங்கள்                         14
       தலை கழுத்து இவைகளிலுள்ள மர்மங்கள்                                37

                    மொத்தம்                      107

Post Comment

சனி, அக்டோபர் 05, 2013

மர்ம வகைப்பாடுகள்

மர்ம வகைப்பாடுகள்
           இந்தியாவில் மர்மம் என்ற அறிவியலானது மிக தொன்று தொட்டே மருத்துவத்தோடும், வாழ்க்கையோடும் பின்னி பிணைந்தே வளர்ந்துள்ளது. உலகிலேயே முதன்முதலில் அறுவை சிகிச்சை செய்த பெருமை பெற்ற சுஸ்ருதர் என்ற மருத்துவ மேதை தன் நூலில் உடலில் பிராண ஆற்றல் செறிவு மிக்க நூற்றியேழு தானங்களை மிகத் தெளிவாக குறிப்பிடுகிறார். அந்த தானங்களில் அறுவை சிகிச்சை செய்யக்கூடாது என்றும், தவிர்க்க முடியாமல் செய்ய நேரிடின் மிக கவனமாகவே கையாள வேண்டும் என்றும் தெளிவுபட விளக்குகிறார்.
                மேலும் ஆயுர்வேத வல்லுநர்கள் தங்கள் நூல்கள் அனைத்திலும் மர்மம் என்ற சொல்லையே இத்தலங்களை குறிப்பிட பயன்படுத்தி உள்ளனர். மர்ம தானங்களை அவர்கள் நான்கு வகைப்பாடுகளாக விவரிக்கின்றனர்.
                மர்ம தானங்களின் பரிணாம அளவுகளை வைத்து ஒரு விரலளவு, இரு விரலளவு, மூன்று விரலளவு, நான்கு விரலளவு அல்லது கைமுட்டளவு உள்ள வர்மங்கள் அரைவிரல் அளவு உள்ள வர்மங்கள் அளவியல் வகைப்பாடுகளையும் அமைத்துள்ளனர்.
வகைப்பாடுகளின் விவரம்
  1. உடற்கூறுபாட்டியல் வகைப்பாடு (Regional Classification)
  2. அமைப்பியல் வகைப்பாடு (Structural Classification)
  3. குறி குண வகைப்பாடு (Prognostic Classification)
  4. அளவியல் வகைப்பாடு (Metrical Classification)



  
          

Post Comment

வெள்ளி, அக்டோபர் 04, 2013

மர்மம் & மர்ம சிகிச்சைகள்

மர்மம் – வர்மம் – என்பது உயிர்சக்தி தடம்புரியும் புள்ளிகள். 

உயிர்நிலைப் புள்ளிகளடங்கிய சக்தி ஓட்டங்களில் அடியோ, தாக்குதலோ ஏற்படும்போது உடலில் உலாவும் உயிர்வேகம் அதனை தொழிலை செய்யாமல் பிறழ்ந்து மரணத்தையோ, உடல் ஊனத்தையோ, தொடர்ந்த வலிகளையோ ஏற்படுத்தும். 

அவை தசைகளிலோ, தசை நார்களிலோ, நரம்புகளிலோ இரத்தக் குழாய்களிலோ, எலும்புகளிலோ, மூட்டுகளிலோ அமைந்திருக்கும் 

இந்த புள்ளிகளில் 3 தோஷங்களும், 5 பூதங்களும், ஓஜஸ் எனும் ஏழு தாதுக்களின் சாரங்களும், சத்வ, ரஜ, தம குணங்களும் அதனதன் விகிதாச்சார அடிப்படையில் புதைந்து கிடக்கின்றன. 

இவை உடலில் உள் உறுப்புகளையும், பிரபஞ்சத்தையும் 13 ஸ்ரோதஸ் எனும் Channels எனும் வழிகளும், பாஹ்ய அந்தர் எனும் உள் வெளி மார்கங்களையும் 6 சக்கரங்களையும் இணைத்து வைக்கும் மாயப் புள்ளிகள். 


Post Comment