கல் அடைப்பு நீங்கிட லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல் அடைப்பு நீங்கிட லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஜனவரி 12, 2013

சிறுநீர் கழிப்பதில் சிரமத்தை போக்கும் -கோக்ஷுராதி குக்குலு (GOKSHURADHI GUGGULU )


சிறு நீர் கழிப்பதில் சிரமத்தை போக்கும் -கோக்ஷுராதி குக்குலு  (GOKSHURADHI GUGGULU )                                                                          
(ref-ஸாரங்கதர ஸம்ஹிதா - மத்யமகண்டம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:


1.            நெருஞ்சில் கஷாயம்
 – கோக்ஷுர கஷாய    4.200 கிலோவில் (4.2 கிலோ நெருஞ்சில் + 8.4 லிட்டர் தண்ணீர் 4.2 லிட்டர் கஷாயம் விட்டுக் கொதிக்கவைத்து எடுக்கவும்)
2.            சுத்தி செய்த குக்குலு
– ஷோதித குக்குலு 350 கிராமைக் கரைத்துக் கொதிக்க வைத்துப் பதத்தில்
3.            திரிகடு சூர்ணம் – த்ரிகடுசூர்ண    150 கிராம்
4.            திரிபலா சூர்ணம் – த்ரிபலா சூர்ணம்     150         “
5.            கோரைக்கிழங்கு சூர்ணம் – முஸ்தா     50           “

இவைகளைக் கலந்து திரிபலா கஷாயத்தால் நன்கு அரைத்து உலர்த்தி ரவைகளாக்கி 500 மி.கி. எடையுள்ள மாத்திரைகளாக்கவும்.

அளவு:          

ஒன்று முதல் நான்கு மாத்திரைகள் வரை கோரைக்கிழங்குச் சூரணம், சிறுபீளை (பாஷாணபேத) சூரணம் அல்லது வெட்டிவேர்ச் சூரணத்துடன் கொடுக்கவும்.

தீரும் நோய்கள்: 



பிரமேகம் (ப்ரமேஹ), நீர்ச்சுருக்கு (மூத்திரக்ரிச்சர), மூத்திரம் தடைபடுதல் (மூத்ராகாத), கல்லடைப்பு (அஸ்மரீ), வெள்ளை (ப்ரதர), குதிகால் வாதம் (வாத ரக்த), சுக்கிலம் சீர்கேடடைந்த நிலை (சுக்ரதோஷ).

தெரிந்து கொள்ள வேண்டியவை -
  1. நீர் கடுப்பு ,நீர் தாரை எரிச்சல் ,உஷ்ண  கடுப்பு போன்ற பிரச்சனைக்கு -கோக்ஷுராதி கஷாயம் என்னும் நெருஞ்சில் கஷாயத்தில் சாப்பிட அதிசய குணம் தரும் 
  2. நீர் பிரிவதில் சிரமத்தால் உண்டாகும் கால் வீக்கத்திற்கு சந்திர பிரபா வடி போன்ற மருந்துகளுடன் சாபிடலாம் 
  3. கல் அடைப்பிற்கு -சிறுகண் பீளை கஷாயத்தில் (வீர தராதி கசாயத்தில் கூட ) கொடுக்க நல்ல பலன் தெரியும் ..
  4. விந்து வந்த பின் வரகிற எரிச்சலுக்கு தக்க துணை மருந்துடன் தர  நல்ல பலன் தரும் 

Post Comment

சனி, மார்ச் 12, 2011

மூத்திர எரிச்சலை குணபடுத்தும் -கோஷுராதி சூர்ணம்-Goshuradhi choornam


மூத்திர எரிச்சலை குணபடுத்தும் -கோஷுராதி சூர்ணம்-Goshuradhi choornam
                                                                               

தேவையான மருந்துகள்:

1.            நெருஞ்சில் – கோக்ஷுர                            - 10 கிராம்
2.            மூக்கரட்டை வேர் – புனர்னவமூல                   - 10       “
3.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) – ஹரீதகீபலத்வக்   - 10       “
4.            வால் மிளகு – கங்கோல                            - 10       “
5.            ரேவல் சீனிக்கட்டை – ரேவல் சினி                   - 10       “
6.            வெள்ளை வெங்காரம் – ஸ்வேத டங்கண             - 10       “
7.            எண்ணெய் வெங்காரம் – க்ருஷ்ண டங்கண         - 10       “
8.            ஸர்ஜக்ஷாரம் – ஸர்ஜக்ஷார                         - 10       “
9.            யவக்ஷாரம் – யவக்ஷார                            - 10       “
10.          வெடியுப்பு – ஸோரக (அ) ஸூராக்ஷார           - 10       “


செய்முறை:      

சரக்குகளைத் தனித் தனியே பொடித்துச் சலிக்கவும். வெங்காரங்களைப் பொரித்த பின்னர் பொடித்துச் சலித்து மற்ற சூர்ணங்களுடன் கலந்து பத்திரப்படுத்தவும்.


அளவு:           

1 கிராம் முதல் 3 கிராம் வரை ஒரு நாளைக்கு 2-3 வேளைகள்.


அனுபானம்:     

 தண்ணீர்


தீரும் நோய்கள்:  




சீழ்மேகம் (பூயமேஹ), மூத்திரக் கட்டு (மூத்ராகாத (அ) மூத்ராசங்க), நீர்ச்சுருக்கு (மூத்ரகிரிச்சர), குன்மம் (குல்ம), வீக்கம் (ஸோப), பெருவயிறு (மஹோதர), பசியின்மை (அக்னிமாந்த்ய), கல்லீரல் மண்ணீரல் வீக்கம் (யக்ருத்ப்லீஹ வ்ருத்தி), காமாலை (காமால). நல்லதொரு நீர்பெருக்கி. பொதுவாக சிறுநீர் சம்பந்தமான நோய்களுக்கு நல்லதொரு மருந்து.


Post Comment

ஞாயிறு, பிப்ரவரி 21, 2010

கல்லை கரைக்கும் மூலிகைகள் (விரைவாக -மூன்றே நாளில் )-படங்களுடன்


மூன்று நாளில் சிறு நீரக கற்கள் கரைந்திட ..
முடியுமா சார் -மூன்று நாளில் கல் கரையுமா ?.நிச்சயமாக கல் கரைந்திடும் .ஆனால் கல்லின் அளவு எட்டு மிலி மீட்டருக்குள் இருக்க வேண்டும்.
மிக விரைவாக எவ்வளவு பெரிய கல்லே ஆனாலும் கரைந்திடும் என்பதற்கு கீழ் உள்ள போட்டோ தான் ஒரு சிறிய உதாரணம்.இரண்டே நாளில் இந்த பெரிய சிறுநீரக கல்(18 mm) வெளியே வந்து விட்டது.
நான் வெளிப்படையாக இந்த மூலிகைகளை உங்களுக்கு கூறுகிறேன்.
மூலிகைகளை பார்த்து ,படித்து பயன்பெறுங்கள்.
மருந்துகளில் கீழ் கண்டவற்றை கொடுக்கலாம் .
ஆயுர்வேத மருந்துகளில் 
வருனாதி கசாயம் 
வீரதவாதி கஷாயம் 
கோக்ஷுராதி குக்குலு 
புனர்ணவாதி குக்கலு ,
சந்திர பிரபா வடி ,
அஷ்மரீ சூர்ணம் 
சிலாஜித் பஸ்ம
சித்தா மருந்துகளில் 
சிருகன்பீளை சூரணம் 
நெருஞ்சில் குடிநீர் 
நண்டுக்கல் பஸ்மம்
கல்நார் பற்பம் 
வெடியுப்பு சுண்ணம் 
யுனானி மருந்துகளில் -ஹயரூல் யூத் பஸ்மம் 
ஹோமியோ மருந்துகளில் 
பெர்பெரிஸ் வல்காரிஸ் ,ஹைட்ராஞ்ஜி யா ,லைகோ,சைலீசியா -





கொள்ளு -macrotyloma uniforum

கொள்ளு -
இளைத்தவனுக்கு எள்ளு -கொழுத்தவனுக்கு கொள்ளு -
கொள்ளு -கருப்பு கானபயிரை -இரவில் ஊறவைத்து 
காலையில் காஷாயம் வைத்து குடிக்க சிறுநீரக கல் சீக்கிரமாக கரையும் .


மாவிலங்கு -creteva magna 

மாவிலங்கு -
மாவிலங்க பட்டை -ஆயுர்வேதத்தில் வருண இன்று அழைக்க படுகிறது.

மாவிலங்கப் பட்டையினால் வாதமொடு சன்னிகளும் 
பாவுகின்ற கல்லடைப்பும் பாருமே -அகத்தியர் குண பாடம் 

சீறுநீரக கல் ,பித்தப்பை கல்லும் கூட -மாவிலங்க பட்டை யினால் கரையும்.

ஆயுர்வேத மருதுக்கடைகளில் வருனாதி கசாயமாக இது எளிதாக கிடைக்கும்

நெருஞ்சில் முள் -tribulus terrestris

நெருஞ்சில் முள் ஆயுர்வேதத்தில் கோக்ஷுர என்றழைக்கபடுகிறது 

சொல்லண்ணா நீர்க்கட்டு துன்மா மிசமருகல் 
கல்லடைப்பெனும் பிணிகள் கண்டக்கால்-வல்லக்
..............................அகத்தியர் குணபாடம்..

எவ்வளவு பெரிய கல்லானாலும் நெருஞ்சில் முள்ளுக்கு முன்னே -பயந்தோடும் 


சிறு பீளை 


சிறு பீளை -
சிறு பீளை ஆயுர்வேதத்தில் பாஷாண பேதம் என்று அழைக்கப்படுகிறது -
பொங்கலுக்கு இதனை மண் பானையோடு வைத்து கட்டுவது வழக்கம்-
இது கன்னுபுள்ளை செடி என்றும் கூறுவார்.

 
நீரடைப்பு கல்லடைப்பு நீங்காகக் குடற்சூலை
பொரடரி ரக்த கணம் போக்குங் காண்-வாரிறுக்கும்
பூண் முலையே ! கேளாய் பெருந்துஞ் சிறுபீளை 
யாமிதுகற் பேதி யறி..

இலைசாற்றால்-அல்லது சமூலக்கஷாயதால் கல் கரைந்து வெளியேறும் .

சிறு நீரகக் கல் மருத்துவம்

“சுக்கும் சிறுபீளை கானெரிஞ்சி மாவிலங்கை
விக்கும் பேராமுட்டி வேரதனில் வொக்கவே
கூட்டிக் கியாழமிட்டுக் கொள்ளவே கல்லடைப்பு
காட்டிற் கழன்றோடுங்காண் “
( தேரையர் அருளிச்செய்த குணவாகடத்திரட்டு.)

சிறு கண் பீளை(AERVA LANATA) சமூலம்
” நீரடைப்பு கல்லடைப்பு நீங்காக் குடற்சூலை
பேதிட ரிரந்தகணம் போக்குங்காண் வாரிருக்கும்
பூண்முலையே கேளாய் பொருந்துஞ் சிறு பீளை
யாமிது கற்பேதி யறி.” (பதார்த்த குணபாடம் 291
சிறுபீளையால் அசிர்க்கர நோய்வாதம்,மூத்திர கிரிசம்,
முத்தோடம்,மூத்திரச்சிக்கல் பித்தவாதம் ஆகிய நோய்கள் குணமாகும்.

சிறு நெருஞ்சில் (TRIBULUS TERRESTRIS)
இது மிகச்சிறந்த சிறு நீர் பெருக்கி ஆகும். கரைக்கப்பட்ட கல்லை வெளியேற்ற
தனது சிறுநீர் பெருக்கும் செயலால் இம் மூலிகை முதலிடம் பெறுகிறது.
” சொல்லவொண்ணா நீர்க்கட்டு துன்ப மாமிச மருகல்
கல்லடைப்பெனும் பிணிகள் கண்டாக்கால் வல்லக்
கருஞ்சிமவேற் கன்மதே காசினிற் தோன்று
நெருஞ்சின்றும் வித்தே நினை.” (பதார்த்த குணபாடம் _ 876 )
பொருள் : நெருஞ்சி வித்திற்கு மூத்திரக்கட்டு , சதையடைப்பு, மூத்திர எரிச்சல்,
துர் மாமிச அடைப்பு கல்லடைப்பு ஆகியவற்றை நீக்கும் வல்லமை உண்டு.

மாவிலங்கப்பட்டை (CRATEVA MAGNA )
” 
மாவிலங்கப் பட்டையினால் வாத மொடு
சந்நிகலும் பாவுகின்ற கல்லடைப்பும் மாறுமே. “
பதார்த்த குணபாடம் _ 550.

பேராமுட்டி வேர் (PAVONIA ODORATA )கல் கரையும்போது ஏற்படுகின்ற வலி காய்ச்சல் போன்ற துயர்களை நீக்க வல்லது.
பேராமுட்டி வேரினால் வாதசுரம் , தாக நோய்கள் , மாந்த கணம், குளிர்ச்சுரம் பித்த நோய்கள்
ஆகியவை குணமாகும்.
” வாத சுரந் தாகம் மதலைக் கணமாந்தஞ்
சீத சுரம் பித்தமெனச் செப்பணங்கு மோது நம்மாற்
சேரா முட்டிக்கேகுஞ் செய்ய மட மயிலே
பேரா முட்டித் தூரைப் பேசு. “
(பதார்த்த குணபாடம் _51 )

எலுமிச்சன் துளசி -ocimum grattissiumum

எலுமிச்சன் துளசி -it  is having lithotriptic properties
அட துளசி கல்லை கரைக்கும் என்கிறீர்களா ?.நிச்சயமாக மூத்திரப்பை யில் உள்ள கல்லை கரைப்பதாக பல சான்றுகள் உள்ளது 

கமேல -கம்பில்லக -mallotus phillippinesis

இது ஒரு வகை மரத்தின் பழங்களின் மீது படிந்திருக்கும் சிவந்த பொடி.இது பேதியுண்டக்கும் எனவே கவனத்துடன் கொடுப்பது நல்லது.

பெருங்களர்வா-salvdora indica 

பெருங்களர்வா-
இது பெரிய மரமாகும்.இந்த மரத்தின் பழம் சிறுநீரக கல்லை கரைக்கும் தன்மையுடையது .


வாழை தண்டு -musa paradisiaca-


வாழை தண்டு -
வாழை தண்டின் சாறு கல்லை கரைக்கும் .இது மிக சிறந்த மூத்திர பெருக்கி .தயவு செய்து மூன்று நாட்களுக்கு மேல் வாழைதண்டு சாறை குடிக்காதீர்கள்.அவ்வாறு குடித்தால் எலும்பின் பலமும் குறைவதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன.
வாழை தண்டும்-தண்டங்கீரையும் யானைக்கு தொடர்ந்து கொடுத்தால் யானையும் படுத்துக் கொள்ளும் என்பது தென் நாட்டு பழ மொழி .
கல்லை கரைக்க வாழை தண்டை விட பல மூலிகைகள் உள்ளன.எனவே வாழை தண்டை மட்டும் தொடர்ந்து சாப்பிட்டா தீர்கள் 


முருங்கை இலை சாறு குடித்தாலும் கல் கரைகிறது .

கல்லுருக்கி இலை - கல்லை கரைக்கிறது -இந்த செடி கண்டறிவதில் சில முரண்பாடுகள் உள்ளது.இருந்தாலும் இந்த புகைப்படம் சரி என்றே கருதுகிறேன்.எனது ஊருக்கு மிக அருகாமையில் உள்ள ஒரு அணைக்கட்டின் அருகிலுள்ள மலையில் இந்த மூலிகை கிடைக்கிறது இது carcara sargada வை  ஒத்துள்ளது 
தென்னம்பூவில் ஒரு மருந்து செய்வதுண்டு -அதுவும் கல்லை கரைத்து வெளியேற்றும்.
உங்களது கேள்விகளுக்கு கருத்துரையில் உடன் பதில் பெறலாம் 


Post Comment