உங்கள் நோய்களுக்கு ஐந்து நிமிட ஆசனங்களும்
ஆயுர்வேத மருத்துவத்தில் யோகா
Chapters
0:01 Yoga for Lungs
0:12 Yoga for Liver
0:17 Yoga for Ano Rectal Disease
0:25 Yoga for Asthma
0:33 Yoga for Insomnia
0:41 Yoga for Flatulance -Gas
0:58 Yoga to Calm the Mind
1:11 Yoga for Back Pain
1:21 Yoga for Kidney Diseases
1:28 Yoga for Throat
1:47 Yoga for Hypertension
1:59 Yoga for Headache
2:10 Yoga to Improve Digestion
2:20 Yoga for Obesity
2:34 Yoga for Hair
2:41 Yoga for Spleen
#யோகா #நோய்களுக்கானயோகா ##ஆரோக்கியமும்ஆயுர்வேதமும் #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம் #learwithrafi
#அல்ஷிபாஆயுஷ்மருத்துவமனை
#Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips #bestayurvedadr #tipsintamilhealth #yoga #yoga4differentailments
#subscribeourchannelalshifayush
யோகா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
யோகா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், ஜூன் 23, 2021
உங்கள் நோய்களுக்கு ஐந்து நிமிட ஆசனங்களும் - ஆயுர்வேத மருத்துவத்தில் யோ...
செவ்வாய், ஜூன் 22, 2021
ஆண்மைக்கான ஆசனங்கள் | நோய்களும் ஆசனங்களும் ஐந்தே நிமிடத்தில் | Asana for...
நோய்களும் ஆசனங்களும் ஐந்தே நிமிடத்தில்- Part 1
ஆண்மைக்கான ஆசனங்கள்
Asana for Ejaculation & diff Ailments
இந்த ஆசனங்களை உங்களால் செய்ய முடியுமா ?
Chapters
0:00 Yoga for Diabetes
0:14 Yoga for Diseases of Stomach
0:29 Yoga for Extremites
0:36 Yoga for Ejaculation
0:44 Yoga for Neck
0:53 Yoga for Eyes
1:02 Yoga for Gout
1:14 Yoga for Naval
1:21 Yoga for Uterus
1:30 Yoga for Back and Spine
#யோகா #நோய்களுக்கானயோகா #ஆண்மைக்கானயோகா #ஆரோக்கியமும்ஆயுர்வேதமும் #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம்
#அல்ஷிபாஆயுஷ்மருத்துவமனை
#Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips #bestayurvedadr #tipsintamilhealth #yoga #yoga4differentailments
#subscribeourchannelalshifayush
Post Comment
வெள்ளி, ஜூன் 23, 2017
யோகாவும் இஸ்லாமும்
யோகாவும் இஸ்லாமும்
டாக்டர்.அ.முகமது சலீம் (cure sure)
.,BAMS.,M.Sc.,M.Sc(Yoga).,MBA
யோகா
சமயங்களுக்கு அப்பாற்பட்டது உண்மைதான் .ஆயுர்வேதத்தின் ஒரு கூறாக இருக்கும் யோகா
என்கிற கலை நோயில் இருந்து மட்டும் விடுபட வைக்காமல் உடல் மனம் ஆத்மா போன்றவற்றை
ஆரோக்யமாக வைக்க உதவுகிறது என்பதில் எள் அளவுக்கும் சந்தேகம் இல்லை . யோகாவும்
ஆயுர்வேதம் போலவே வாழ்க்கை அறிவியல் .
ஒரு ஆயுர்வேத
மருத்துவனாய் , யோகாவில் முதுநிலை பட்டதாரியாக ,ஒரு இஸ்லாமியனாக மூன்று நிலைகளில்
இருந்தும் எனது கண்ணோட்டம் சில தெளிவுகளை தெரிவிக்க விரும்புகிறேன் .
யோகாவை பற்றி
ஏற்கனவே ஆயுர்வேதத்தில் யோகா என்கிற கட்டுரை
படித்தால் யோகா பற்றிய ஆயுர்வேத ,யோகாவின் அடிப்படை பற்றி ஓரளவுக்கு
புரிந்து கொள்ள முடியும். அந்த கட்டுரை படிக்க இங்கே கிளிக் செய்யவும் .
யோகா –இஸ்லாம்
ஒரு கண்ணோட்டம்
அஷ்டாங்க யோகா –
வாழ்க்கை இப்படி தான் வாழ வேண்டும் ,இறை நிலை என்கிற சமாதியை –முக்தியை இப்படிதான்
அணுக வேண்டும் என்கிற அணுகு முறையில் யோகா சமயங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு நிலையை
நாம் உணர முடியும் .
வள்ளலார் ,பதஞ்சலி
,திருமூலர் ,இன்னும் பல யோக குருமார்களின் யோக சூத்திரங்கள் நமக்கு இறை நிலையை
அடைய வழியாகத்தான் யோக நிலை பயன்பட்டிருப்பதை ஒரு நேர் கோட்டில் உணர முடிகிறது
பல்வேறு யோகா
ஸ்கூல் தனி தனி வழியை தேர்ந்தெடுத்து தனது
தனி வழியில் பயணிக்கிறார்கள் ..உதாரணத்திற்கு இன்றைய கார்பரேட் யோகா குருக்கள் Art
of living ,Ramdev –pathanjali yoga , Isha yoga ,போன்றவர்களும் மேலும் வள்ளாலார்
யோகா ,ஹட யோகம் ,பிரம்ம குமாரி யோகா, மகரிஷி யோகா ,வேதாத்ரி யோகா என்று இன்னும் பல பல யோக பிரிந்து கிடக்கிறது
..ஆனால் இவை யாவும் ஹிந்து சமய கொள்கைகளை அடிப்படையாக கொண்டே இருக்கிறது என்பது
யாரும் மறுக்கவே முடியாத உண்மை .
இஸ்லாமிய கொள்கை –ஓர்
இறை கொள்கை என்ற அடிப்படையில் அமைந்தது. ஏக இறைவனை தவிர எந்த படைப்பையும் வணங்க கூடாது
என்பதை இஸ்லாம் வலியுறுத்தி சொல்கிறது . இணை வைக்கும் எந்த ஒரு செயலையும் எந்த ஒரு
நிலையிலும் ஒரு உண்மையான இஸ்லாமியன் செய்யவே மாட்டான் .
யோகாவில்
இஸ்லாமியன் தவிர்க்க வேண்டிவைகள்
- சூர்ய நமஸ்காரம் என்கிற –சூரியனை நோக்கி வழி படுகிற 12 நிலைகள் கொண்ட ஆசனங்கள் – இதற்க்கு சூர்யாசனம் என்று பெயர் மாற்றி வைத்து சூரியனை வணங்க கூடிய ஸ்லோக்கங்களை சொல்லாமல் தவிர்த்து ஒரு ஆசன பயிற்சியாக மட்டுமே வேண்டுமானால் செய்யலாம்
- நமஸ்கார முத்திரை –கை கூப்பி தொழுதல் ,வணங்குதல் –போன்றவை முற்றிலுமாக தவிர்க்க படல் வேண்டும்
- குரு பூஜை என்று –யோக குருமார்களின் படத்தை வைத்து வழிபடும் எந்த ஒரு யோகா வகுப்பிலும் இஸ்லாமியன் பங்கேற்க கூடாது
- ஓம் என்கிற ஓங்காரம் இந்து சமய மந்திரமாகவே பார்க்கபடுவதால் –ஓம் என்கிற வார்த்தை இணை வைப்பை நோக்கி பயணிப்பதால் தவிர்த்தல் நல்லது . அ உ ம் என்று சொல்வதும் கூட தவிர்த்தல் நல்லது
- விக்ரஹங்கள் ,சிலை வழிபாடு உள்ள எந்த ஒரு யோக வகுப்பையும் புறக்கணிப்பது நல்லது
யோகா இஸ்லாமியன்
எந்த சூழ்நிலையில் கலந்து கொள்ளலாம்
- யோகாசன பயிற்சி –உடல் ஆரோக்கியம் மேம்பட –இணை வைப்பு பெயர் இல்லாத ஆசனங்கள் கற்று செய்யலாம்
- பிராணாயம பயிற்சி –ஓங்கார உச்சரிப்பு இல்லாமல் மூச்சு பயிற்சிகளாக செய்யலாம் .
- த்யான பயிற்சி –எந்த வகையிலும் ஒரு சிறிதும் இணை வைப்பு கொள்கை இல்லாதிருந்தால் செய்யலாம்
- எல்லை கோட்டை உங்களால் உணர முடிந்தால் –ஏக இறைவனுக்கு இணை வைக்காமல் எந்த யோகா வகுப்பிலும் தாரளாமாக ஒரு நோய் நிவாரணமாக செய்யலாம்
இஸ்லாமிய
தொழுகையும் –யோகா ஆசனங்களும்
தொழுகையே பல
யோகாசனங்களை உள்ளடக்கியுள்ளது என்பதை எளிதாக உணர முடியும் . ஒவ்வொரு இஸ்லாமியனும்
தினம் ஐவேளை ஏக இறைவனை தொழுகிறான் .
எனது யோகா ஆராய்ச்சி
முது கலை பட்டய படிப்பில் யோகா மற்றும் இஸ்லாம் பற்றியே இருந்தது –அந்த முழு
ப்ராஜெக்ட் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
எல்லாரும்
சொல்கிறார்கள் யோகாசனம் மிக சிறந்தது?
.
யோகாவை உலகமே
கொண்டாடுகிறது !!!அப்படி என்ன இருக்கிறது இஸ்லாத்தில் இல்லாத ஒன்று .?
இங்கே
இணைக்கப்பட்டுள்ள படத்தை பாருங்கள் ..என்ன
தெரிகிறது ?.
நமது தொழுகை
நிலையில் உள்ளதை தான் அவர்கள் சம்ஸ்க்ருதத்தில் பெயர் வைத்திருக்கிறார்கள் .
தலாசனம்
,வஜ்ராசனம் ,அர்த உத்தானசனம் ,அர்த பாத ஹஸ்தாசனம் ,பலாசனம் ,ஷஷாங்காசனம், யோக
முத்திரை ,பல முத்திரைகள் ,வக்ராசனம் இன்னும் பல ஆசனங்களை இஸ்லாமிய தொழுகை
உள்ளடக்கியுள்ளது
- · இறை அச்சத்துடன் தொழும் தொழுகை -இம்மையிலும் ,மறுமையிலும் நல்ல கூலியை ஏக இறைவனிடம் பெற்று தரும்
- · மன ஓர்மையுடன் தொழும் தொழுகை -மன நிம்மதியை தரும்
- · தொழுகை நிலைகள் -யோகாவில் உள்ள ஆசனங்களை விட பல மடங்கு சிறந்து .
- · நபிகள் நாயகம் சொன்ன படி நாம் தொழும் தொழுகை -பல்லாயிரம் ஆசனங்களை விட சிறந்து .
இஸ்லாமும் –அஷ்டாங்க
யோகாவும்
இங்கே
இணைக்கப்பட்டுள்ள படம் –இஸ்லாம் மற்றும் யோகா வுக்கு உள்ள ஒற்றுமையை எடுத்து
காட்டுகிறது
இஸ்லாம் சொல்லாத
புதிதாக ஒன்றை கூட அஷ்டாங்க யோகாவில் நாம் பார்க்க முடியாது
மாற்று மத
சகோதர்களுக்கு –ஓர் ஒப்பீடு ஆய்வு தான் தவிர –இது யார் மனதையும் புண் பட
எழுதவில்லை என்று சொல்ல விரும்புகிறேன்
அஸ்தஹ்பிருல்லா –ஏக
இறைவனிடம் நான் பாவ மன்னிப்பும் ,பிழை பொறுக்க வேண்டுகிறேன் .
இஸ்லாம் என்ற
சொல்லுக்கு அமைதி என்று பொருள் . மனித நேயம் காப்பது இஸ்லாமியனின் கடமை .நோய்
அழிக்க ,நோய் குணமாக எது நமக்கு பயன்படுமோ அதையே நாம் பயன்படுத்துவோம்
யோகா மற்றும்
ஆயுஷ் மருத்துவ ஆலோசனைக்கு
அல் ஷிபா ஆயுஷ்
மருத்துவமனை
கடையநல்லூர் 90
4222 5333
திருநெல்வேலி 90
4222 5999
ராஜபாளையம் 90
4333 6888
சென்னை 90
4333 6000 ( ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை-கீழ்கட்டளை )
Post Comment
வியாழன், ஜூன் 22, 2017
யோகாவும் ஹோமியோபதி மருத்துவமும்
யோகாவும்
ஹோமியோபதி மருத்துவமும்
டாக்டர்.அ.முகமது
சலீம் ( cure sure ) .,BAMS.,M.Sc.,MBA
டாக்டர் .வர்தினி
.,BHMS.,
அடிப்படை தத்துவங்கள் ஒன்றே
ஹோமியோபதி
மற்றும் யோகாவில் பல அடிப்படை கோட்பாடுகள் ஒன்று சேர அமைந்திருக்கின்றன. இரண்டுமே
அதிக அளவிலான சுகாதாரம், நல்லிணக்கம்
மற்றும் நல்வாழ்வு வளர்ப்பதற்கு பயனுள்ள பல நுட்பங்கள் உள்ளன.
உயிர் ஆற்றலை வலுபடுத்துகிறது –யோகாவும்
ஹோமியோவும்
ஆற்றல் மற்றும்
சக்தியை பயன்படுத்துவதன் மூலம் ஆற்றல் ஓட்டத்தை அதிகரிக்கவும் தடுக்கவும். இவை
இரண்டுமே செய்கின்றது. ஹோமியோபதி சிகிச்சையில் இந்த சக்தியை உயிர் ஆற்றல் எனவும்,
யோகாவில் பிராண (Prana)
என்று அழைக்கிறோம் ஆனால்
அடிப்படையில் அதன் தத்துவங்கள் ஒன்றே.! பெயர்கள் மட்டும் வேறு.
பிராணன் என்பது ஹோமியோவின் LIFE –VITAL FORCE ஒன்று
தான்
யோகாவில் Asana,
Pranyama, Bandas ஆகியவை மூலம்
உடல் ஆற்றல் சமன் செய்யவும், அதிகப்படுத்தவும்
குறைக்கவும் முடியும். அதேபோல் ஹோமியோபதியில் மனிதனின் இயல்பு மற்றும் உடலின்
தன்மை மூலம் உயிர் ஆற்றலை அதிகப்படுத்தவும் குறைக்கவும் முடியும். இது அந்த நபரின்
இயல்பு, மற்றும் பழக்க
வழக்கங்கள் மூலம் மருந்துகளை தேர்வு செய்கிறோம்.
ஆக நமது உயிர்
ஆற்றல் குறைந்தால், நம்மை நோய்
பற்றிக்கொள்கிறது. அது அவனை உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும், மனநிலை ரீதியாகவும் பாதிக்கும். அதனை சமநிலை
செய்ய யோகாவும் ஹோமியோபதியும் முதன்மை நிலையில் இருக்கிறது. மேலும் நோய் தடுப்பு
சக்தியாகவும் மாறுகின்றது.
மனம் உடல் ஆத்மா ஒருங்கிணைத்தலில் –யோகாவும்
ஹோமியோவும் ஒன்று
ஹோமியோபதி
மற்றும் யோகாவினால் உடல், மனம் மற்றும்
ஆத்மா ஆகியவை ஒன்று சேர அல்லது ஒருங்கிணைப்பு அடைய நடைமுறையில் வழிகள் உள்ளன. இதன்
இரண்டுமே ஒன்று சேர எடுப்பதனால் உங்கள் நோயை மட்டும் குணப்படுத்தாமல் நோயில்லா
வாழ்க்கையை வாழவும் வழிவகுக்கும்.
யோகாவும் –ஹோமியோவும் -பலன் விரைவானது –எளிமையானது
-
ஹோமியோபதியில்
மருந்தின் அளவு :-
ஹோமியோபதியில்
மிக குறைவான அளவு மருந்துகளை பயன்படுத்துகின்றனர். இது நாக்கில் வைத்தவுடன்
வளர்சிதை மாற்றமடையாமல் நரம்புகள் வழியே
மற்ற உறுப்புகளுக்கு சென்று நோயை தடுக்கிறது. இதனால் இதனுள் எந்த மருத்துவம்
எடுத்தாலும் அது தடை செய்வதில்லை. அனைத்து
மருத்துவத்தில் கூடவும் ஹோமியோபதியில் பயன் பெறலாம்.
அதேபோல், யோகாவில் மற்ற மருத்துவத்துடன் தொடர்ந்து
எடுத்துக்கொள்ளலாம். இந்த வழிமுறைகளால் உடலுக்கு சமாதானத்தை ஏற்படுத்துகிறது.
மேலும், யோகாவும்,
ஹோமியோபதியும் ஒன்றுடன்
ஒன்று இணையும் போது அதன் ஆற்றல் பல மடங்கு பெருகுகின்றது.
யோகாவும் –ஹோமியோவும்
பக்க விளைவுகள் இல்லாத மருத்துவங்கள்
ஹோமியோபதியில்
எந்த பக்கவிளைவுகளும் கிடையாது. ஆனால் மற்ற மருத்துவத்தை எடுப்பதன் மூலம் மருந்து
உட்கொள்ளும் போது எந்த வித பிரச்சனைகளும் இல்லை, ஆனால் மருந்தை நிறுத்தி விட்டால் அனைத்து
பிரச்சனைகளும் திரும்ப வந்துவிடும். ஆனால், ஹோமியோபதியில் முதலில் மனது அமைதியாகிவிடும்
பின்னர் உடல் நிலையும் குணமாகி நோய் தடுப்பாகவும் மாறுகிறது.
அளப்பரிய நோய் குணமாக்கும் ஆற்றல்
இங்கே குணமடைவது
என்பது மேலே இருந்து கீழே, வெளிப்புறத்தில்
இருந்து உட்புறம், மிக முக்கிய
உறுப்பு முதல் குறைந்த முக்கிய உறுப்பு, அறிகுறிகளின் தலைகீழ் வரிசையில் குணமாகிவிடும்.
யோகாவில் இதுவே
நடக்கிறது.
யோகாவும் நமது
அறிவாற்றலை அதிகப்படுத்தவும் தொற்று நோய்களுக்கு எதிராக போராடுவது, வெவ்வேறு சூழ்நிலைக்கு ஏற்ப நம் உடலை
தயார்படுத்துவது, மனதினை அமைதியடைய
செய்வதிலும் மற்றும் சமநிலை படுத்தவும் யோகா உதவுகிறது.
யோகாவும் –ஹோமியோவும் இணைந்தால் பலன் மிக மிக அதிகம்
இதன் மூலம்
யோகாவும், ஹோமியோபதியும்
ஒரே வேலையை வெவ்வேறு பெயர் கொண்டு செய்கிறது என்று தெரிய வருகிறது.
யோகாவும் சுய
சிகிச்சைக்குள் உள்ளடக்கியது யோகாவின் அனைத்து வழிகளும் வாழ்க்கையில் வரும்
வலிகளின் விளைவுகளை தணிக்கும் திறனை குணப்படுத்துகின்றன.
யோகா –ஹோமியோ
மருத்துவங்கள் –புரிதல்
யோகா எல்லா
மனிதருக்கும் பொதுவானது .
ஹோமியோ
மருத்துவமும் எல்லா மனிதருக்கும் அவசியமானது ..
யோகா ஆயுர்வேத
சித்த மருத்துவத்தின் கூறாக முழுமையாக அறியபட்டாலும் –யோகா வாழ்க்கை தத்துவங்கள்
எந்த மருத்துவத்தோடும் பொருந்தி கொள்ள கூடிய அற்புத ஆற்றலை உடையது ..
ஆங்கில மருந்தோடு
கை கோர்க்கும் யோகா –ஹோமியோவோடு இணைவதில் என்ன தவறு
மற்ற பாரம்பரிய
,இந்திய மருத்துவ முறைகளை ஏற்க மறுக்கும் பல ஆங்கில மருத்துவர்களும் யோகாவை
தங்களோடு இணைத்து கொள்ள ஆசைப்படுகிறார்கள் .ஆங்கில மருத்துவம் தன்னால் இந்த நோயை
குணப்படுத்த இயலாத எல்லை கோட்டை தாண்டிய பல நோய்களுக்கும் யோகாவை தன்னோடு சேர்ந்து
பயணிக்க சொல்கிறது .யோகாவின் எந்த ஒரு கோட்பாடுகளோடு
ஒரு சிறிதும் பொருந்தாத ஆங்கில மருத்துவம் யோகாவை தன் வயப்படுத்த முயல்வதில் பெரிய
மகிழ்ச்சி புதைந்துள்ளது என்றால் –ஹோமியோவின் எல்லா கோட்பாடுகளோடும் பொருந்த கூடிய
யோகாவை –ஹோமியோ யோகாவை வரவேற்பதில் எந்த ஒரு நெருடலும் யாருக்கும் இருக்கவே முடியாது
.
ஹோமியோகா என்ற
முறை
இந்தியர்
என்பதில் பெருமிதம் கொள்வோம் ..
பாரம்பரிய
மருத்துவத்தால் நலம் பெறுவோம் ..
ஆயுஷ் என்பது
ஒருங்கிணைந்த மருத்துவமே –நோய் இல்லாமல் வாழ வைக்கும் வாழ்க்கை அறிவியல்.
மருத்துவத்தின் பலன்
முழுமையாக கிடைக்க யோகாவோடு இணைவோம் ..ஏனென்றால் யோகா என்றாலே ஒன்று இணைதல் ,
தன்
வயமாதல் என்றே பொருள் .
ஆயுஷ் மருத்துவ
ஆலோசனைக்கு
அல் ஷிபா ஆயுஷ்
மருத்துவமனை
கடையநல்லூர் 90
4222 5333
திருநெல்வேலி 90
4222 5999
ராஜபாளையம் 90
4333 6888
சென்னை 90
4333 6000 ( ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை-கீழ்கட்டளை )
Post Comment
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)















