யோகாவும் இஸ்லாமும்
டாக்டர்.அ.முகமது சலீம் (cure sure)
.,BAMS.,M.Sc.,M.Sc(Yoga).,MBA
யோகா
சமயங்களுக்கு அப்பாற்பட்டது உண்மைதான் .ஆயுர்வேதத்தின் ஒரு கூறாக இருக்கும் யோகா
என்கிற கலை நோயில் இருந்து மட்டும் விடுபட வைக்காமல் உடல் மனம் ஆத்மா போன்றவற்றை
ஆரோக்யமாக வைக்க உதவுகிறது என்பதில் எள் அளவுக்கும் சந்தேகம் இல்லை . யோகாவும்
ஆயுர்வேதம் போலவே வாழ்க்கை அறிவியல் .
ஒரு ஆயுர்வேத
மருத்துவனாய் , யோகாவில் முதுநிலை பட்டதாரியாக ,ஒரு இஸ்லாமியனாக மூன்று நிலைகளில்
இருந்தும் எனது கண்ணோட்டம் சில தெளிவுகளை தெரிவிக்க விரும்புகிறேன் .
யோகாவை பற்றி
ஏற்கனவே ஆயுர்வேதத்தில் யோகா என்கிற கட்டுரை
படித்தால் யோகா பற்றிய ஆயுர்வேத ,யோகாவின் அடிப்படை பற்றி ஓரளவுக்கு
புரிந்து கொள்ள முடியும். அந்த கட்டுரை படிக்க இங்கே கிளிக் செய்யவும் .
யோகா –இஸ்லாம்
ஒரு கண்ணோட்டம்
அஷ்டாங்க யோகா –
வாழ்க்கை இப்படி தான் வாழ வேண்டும் ,இறை நிலை என்கிற சமாதியை –முக்தியை இப்படிதான்
அணுக வேண்டும் என்கிற அணுகு முறையில் யோகா சமயங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு நிலையை
நாம் உணர முடியும் .
வள்ளலார் ,பதஞ்சலி
,திருமூலர் ,இன்னும் பல யோக குருமார்களின் யோக சூத்திரங்கள் நமக்கு இறை நிலையை
அடைய வழியாகத்தான் யோக நிலை பயன்பட்டிருப்பதை ஒரு நேர் கோட்டில் உணர முடிகிறது
பல்வேறு யோகா
ஸ்கூல் தனி தனி வழியை தேர்ந்தெடுத்து தனது
தனி வழியில் பயணிக்கிறார்கள் ..உதாரணத்திற்கு இன்றைய கார்பரேட் யோகா குருக்கள் Art
of living ,Ramdev –pathanjali yoga , Isha yoga ,போன்றவர்களும் மேலும் வள்ளாலார்
யோகா ,ஹட யோகம் ,பிரம்ம குமாரி யோகா, மகரிஷி யோகா ,வேதாத்ரி யோகா என்று இன்னும் பல பல யோக பிரிந்து கிடக்கிறது
..ஆனால் இவை யாவும் ஹிந்து சமய கொள்கைகளை அடிப்படையாக கொண்டே இருக்கிறது என்பது
யாரும் மறுக்கவே முடியாத உண்மை .
இஸ்லாமிய கொள்கை –ஓர்
இறை கொள்கை என்ற அடிப்படையில் அமைந்தது. ஏக இறைவனை தவிர எந்த படைப்பையும் வணங்க கூடாது
என்பதை இஸ்லாம் வலியுறுத்தி சொல்கிறது . இணை வைக்கும் எந்த ஒரு செயலையும் எந்த ஒரு
நிலையிலும் ஒரு உண்மையான இஸ்லாமியன் செய்யவே மாட்டான் .
யோகாவில்
இஸ்லாமியன் தவிர்க்க வேண்டிவைகள்
- சூர்ய நமஸ்காரம் என்கிற –சூரியனை நோக்கி வழி படுகிற 12 நிலைகள் கொண்ட ஆசனங்கள் – இதற்க்கு சூர்யாசனம் என்று பெயர் மாற்றி வைத்து சூரியனை வணங்க கூடிய ஸ்லோக்கங்களை சொல்லாமல் தவிர்த்து ஒரு ஆசன பயிற்சியாக மட்டுமே வேண்டுமானால் செய்யலாம்
- நமஸ்கார முத்திரை –கை கூப்பி தொழுதல் ,வணங்குதல் –போன்றவை முற்றிலுமாக தவிர்க்க படல் வேண்டும்
- குரு பூஜை என்று –யோக குருமார்களின் படத்தை வைத்து வழிபடும் எந்த ஒரு யோகா வகுப்பிலும் இஸ்லாமியன் பங்கேற்க கூடாது
- ஓம் என்கிற ஓங்காரம் இந்து சமய மந்திரமாகவே பார்க்கபடுவதால் –ஓம் என்கிற வார்த்தை இணை வைப்பை நோக்கி பயணிப்பதால் தவிர்த்தல் நல்லது . அ உ ம் என்று சொல்வதும் கூட தவிர்த்தல் நல்லது
- விக்ரஹங்கள் ,சிலை வழிபாடு உள்ள எந்த ஒரு யோக வகுப்பையும் புறக்கணிப்பது நல்லது
யோகா இஸ்லாமியன்
எந்த சூழ்நிலையில் கலந்து கொள்ளலாம்
- யோகாசன பயிற்சி –உடல் ஆரோக்கியம் மேம்பட –இணை வைப்பு பெயர் இல்லாத ஆசனங்கள் கற்று செய்யலாம்
- பிராணாயம பயிற்சி –ஓங்கார உச்சரிப்பு இல்லாமல் மூச்சு பயிற்சிகளாக செய்யலாம் .
- த்யான பயிற்சி –எந்த வகையிலும் ஒரு சிறிதும் இணை வைப்பு கொள்கை இல்லாதிருந்தால் செய்யலாம்
- எல்லை கோட்டை உங்களால் உணர முடிந்தால் –ஏக இறைவனுக்கு இணை வைக்காமல் எந்த யோகா வகுப்பிலும் தாரளாமாக ஒரு நோய் நிவாரணமாக செய்யலாம்
இஸ்லாமிய
தொழுகையும் –யோகா ஆசனங்களும்
தொழுகையே பல
யோகாசனங்களை உள்ளடக்கியுள்ளது என்பதை எளிதாக உணர முடியும் . ஒவ்வொரு இஸ்லாமியனும்
தினம் ஐவேளை ஏக இறைவனை தொழுகிறான் .
எனது யோகா ஆராய்ச்சி
முது கலை பட்டய படிப்பில் யோகா மற்றும் இஸ்லாம் பற்றியே இருந்தது –அந்த முழு
ப்ராஜெக்ட் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
எல்லாரும்
சொல்கிறார்கள் யோகாசனம் மிக சிறந்தது?
.
யோகாவை உலகமே
கொண்டாடுகிறது !!!அப்படி என்ன இருக்கிறது இஸ்லாத்தில் இல்லாத ஒன்று .?
இங்கே
இணைக்கப்பட்டுள்ள படத்தை பாருங்கள் ..என்ன
தெரிகிறது ?.
நமது தொழுகை
நிலையில் உள்ளதை தான் அவர்கள் சம்ஸ்க்ருதத்தில் பெயர் வைத்திருக்கிறார்கள் .
தலாசனம்
,வஜ்ராசனம் ,அர்த உத்தானசனம் ,அர்த பாத ஹஸ்தாசனம் ,பலாசனம் ,ஷஷாங்காசனம், யோக
முத்திரை ,பல முத்திரைகள் ,வக்ராசனம் இன்னும் பல ஆசனங்களை இஸ்லாமிய தொழுகை
உள்ளடக்கியுள்ளது
- · இறை அச்சத்துடன் தொழும் தொழுகை -இம்மையிலும் ,மறுமையிலும் நல்ல கூலியை ஏக இறைவனிடம் பெற்று தரும்
- · மன ஓர்மையுடன் தொழும் தொழுகை -மன நிம்மதியை தரும்
- · தொழுகை நிலைகள் -யோகாவில் உள்ள ஆசனங்களை விட பல மடங்கு சிறந்து .
- · நபிகள் நாயகம் சொன்ன படி நாம் தொழும் தொழுகை -பல்லாயிரம் ஆசனங்களை விட சிறந்து .
இஸ்லாமும் –அஷ்டாங்க
யோகாவும்
இங்கே
இணைக்கப்பட்டுள்ள படம் –இஸ்லாம் மற்றும் யோகா வுக்கு உள்ள ஒற்றுமையை எடுத்து
காட்டுகிறது
இஸ்லாம் சொல்லாத
புதிதாக ஒன்றை கூட அஷ்டாங்க யோகாவில் நாம் பார்க்க முடியாது
மாற்று மத
சகோதர்களுக்கு –ஓர் ஒப்பீடு ஆய்வு தான் தவிர –இது யார் மனதையும் புண் பட
எழுதவில்லை என்று சொல்ல விரும்புகிறேன்
அஸ்தஹ்பிருல்லா –ஏக
இறைவனிடம் நான் பாவ மன்னிப்பும் ,பிழை பொறுக்க வேண்டுகிறேன் .
இஸ்லாம் என்ற
சொல்லுக்கு அமைதி என்று பொருள் . மனித நேயம் காப்பது இஸ்லாமியனின் கடமை .நோய்
அழிக்க ,நோய் குணமாக எது நமக்கு பயன்படுமோ அதையே நாம் பயன்படுத்துவோம்
யோகா மற்றும்
ஆயுஷ் மருத்துவ ஆலோசனைக்கு
அல் ஷிபா ஆயுஷ்
மருத்துவமனை
கடையநல்லூர் 90
4222 5333
திருநெல்வேலி 90
4222 5999
ராஜபாளையம் 90
4333 6888
சென்னை 90
4333 6000 ( ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை-கீழ்கட்டளை )
0 comments:
கருத்துரையிடுக