திங்கள், ஜூன் 26, 2017

நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்

இஸ்லாமிய சொந்தங்களுக்கும் மாற்று மத சகோதர்களுக்கும் நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்


டாக்டர்.அ.முகமது சலீம் ( cure sure) .,BAMS.,M.Sc.,MBA
டாக்டர். I. ஜவாஹிரா பானு .,BHMS.,
🌙 இஸ்லாம் என்றால் அமைதி, சமாதானம்

🌙 ஒரு ஆத்மாவை வாழ வைத்தவர் -உலக மக்கள் அனைவரையும் வாழ வைத்தவர் போலாவார். (அல் குர்ரான் 5:32)  என்று உலக மக்கள் அனைவரையும் மனித நேயத்தோடு வாழ வைக்க சொல்கிறது இஸ்லாம் மார்க்கம்...அன்பு அமைதிக்கான மார்க்கம் இஸ்லாம்.


🌙 உங்கள் மார்க்கம் உங்களுக்கு ..எங்கள் மார்க்கம் எங்களுக்கு ( அல் குர்ரான் 109 :6)   என்று மற்ற சகோதரர்கள் மதத்தை மதிக்க சொல்கிறது இஸ்லாம்.


🌙 கப்பலோட்டிய தமிழன வ உ சி யின்  கப்பலுக்கான விலையை  97 % ஐ நன்கொடையாக கொடுத்தவர் வள்ளல் ஹபிபுர் ரஹ்மான்..ஏழை எளியவர்களை ஜக்காத் மூலம் உதவ சொல்லும் , தியாகத்தை  சொல்வது இஸ்லாம் மார்க்கம்


🌙 அல்லாஹ் என்ற அரபி வார்த்தைக்கு பொருள் ஒரே இறைவன் , அவனது சக்தி சமமாக , அவனது சக்திக்கு மேலே  யாரும் இல்லாதவன். என்று பொருள் –,இதைத்தான் வள்ளுவன் கூட தனக்குவமை இல்லாதான் ...என்று சொல்கிறார்...அந்த ஒரு பேராற்றல் மிக்க கருணை மிக்கவனிடம் ,நம்மை படைத்து ,உணவளிக்கும் ஏக இறைவனே நமக்கு எல்லாவற்றிற்கும் போதுமானவன் .


🌙 மறுமையே சிறந்ததும் நிலையானதும் ஆகும் (அல் குர்ரான் 87:17)  - இறப்புக்கு பின் சுவர்க்க வாழ்க்கைக்கு இந்த இம்மை வாழ்கையை வீணும் விளையாட்டும் இன்றி வேறில்லை (  அல் குர்ரான்  6:32) – இறை பொருத்தமான வாழ்கையே நல்லது என்கிறது இஸ்லாம்


🌙 யூதர்களின் பிடியில் உள்ள எல்லா  மீடியாக்களும் –இஸ்லாம் என்றாலே தீவிர வாதம் என்கிறது –அரிதாய் எங்கோ நடப்பதை எல்லா இடத்தில நடப்பது போன்று மிகை படுத்தி வெளி விடும் இந்த மீடியாக்ளுக்கு இஸ்லாமிய தண்டனை சட்டம் பற்றி தெரியவில்லை . ஆனால் மனித நேயத்தில் இஸ்லாமியனை வெள்ளம் வந்த போது , சுனாமி வந்த போது,லண்டனில் தீ வந்த போது,சாக்கடையை அள்ள புறப்பட்ட போது ,இரத்த தானத்தில் –இன்னும் பல நிகழ்வுகள் அடையாளம் காட்டத்தான் செய்கிறது .

.
🌙 இறைவன் நாடியவனுக்கு ஆட்சியை கொடுப்பவன் . எந்த சோதனைகள் வந்தாலும் இறை பொறுத்தத்தை நாடியே வாழ்பவன் இஸ்லாமியன் . பொறுமையை கொண்டும் ,தொழுகையை கொண்டும் எப்போதும் ஏக இறைவனிடம் உதவி கேட்போம் .கடுகை விட மிக சிறிய பொருள் வானத்தில் இருந்தாலும் ,பூமியில் இருந்தாலும் அவனுக்கு தெரியாமல் ஒன்று இல்லை என்பதை உணர்ந்து வாழ்வோம்


🌙 பிறப்பால் இந்தியன் ,உணர்வால் தமிழன் ,வாழ்க்கை முறையில் இஸ்லாமியன் என்று நாட்டுப்பற்று உள்ளவன் இஸ்லாமியன் .வெறும் கிரிக்கெட்டில் மட்டுமல்ல வெளிப்படுவது நாட்டுப்பற்று எங்கள் இரத்தத்தில் உள்ளது தேசியப்பற்று

🌙 இறை அச்சத்தை அதிகபடுத்திய இந்த ரமலான் மாதத்தில் –நோன்பு இன்னும் இறை நெருக்கத்தை அதிபடுத்தி இருக்கும் என்று உணர்வோடு உலக மக்கள் அனைவருக்காகவும் பிரார்தித்து , ஏக இறைவனிடம் உங்களுக்கும் ,உங்களது குடும்ப உறுப்பினர்களுக்கும்  எனக்கும் அமைதி ,சந்தோசம் ,வளம் ,நிம்மதி ,உடல் நலம் ,பொருள் நலம் ,நிறைவுத்தன்மை பெற பிரார்தித்தவனாக இனிய ரமலான் வாழ்த்துக்களை  தெரிவித்து கொள்கிறேன்

. 🌙  ஒற்றுமையே பலம் –வேற்றுமையில் ஒற்றுமையுடன் அமைதியுடன் ஆனந்தமாய் வாழ வாழ்த்தும்

அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 90 4222 5333
திருநெல்வேலி 90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888
சென்னை 90 4333 6000 ( ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை-கீழ்கட்டளை )
Post Comment

1 comments:

கருத்துரையிடுக