சனி, ஜூன் 03, 2017

கல்லீரல் கொழுப்பு படிவு என்கிற அபாயகரமான நோய்க்கு ஆயுஷ் தீர்வு

கல்லீரல் கொழுப்பு என்கிற அபாயகரமான நோய்க்கு ஆயுஷ் தீர்வு

டாக்டர்.அ.முகமது சலீம் ( cure sure ).,BAMS.,M.Sc.,MBA
டாக்டர். வர்தினி .,BHMS.

Non  Alcoholic Fatty liver என்கிற மதுப்பழக்கம் இல்லாதவர்களுக்கும் ஏற்படுகிற கல்லீரலின் கொழுப்பு பதிவு என்பது இப்போது 70 % சதவீத மக்களுக்கு உள்ளதாக கண்டு பிடிக்கபடுகிறது .மாஸ்டர் ஹெல்த் செக்அப் அல்லது எதேச்சயையாக Ultra Sound ஸ்கேன் மூலம் கண்டுபிடிக்கப்படும் இந்த நோய்க்கு பல மருத்துவர்களும் ,பல நோயாளிகளும் ஒரு முக்கியத்துவம் கொடுக்க தவறி விடுகிறார்கள் . ஆனால் இது  மோசமான பல நோய்களை உண்டாக்கும் ஆராய்ச்சிகளின் தெரிய வருகிறது .கிட்டத்தட்ட எல்லா நீரழிவு நோயாளிக்கும் இந்த கல்லீரலில் கொழுப்பு படித்தல் நோய் உள்ளது

காலம் மாறிவிட்டது நமது உணவு முறைகளும் முற்றிலும் மாறிவிட்டான சிறு தலைவலி வந்தாலே கவலைப்படும் மக்கள் ஏனோ கல்லீரலில் (LIVER) பாதிப்பு ஏற்பட்டால் அதை கண்டுக்கொள்வது இல்லை.


நம்முடைய உடலில் மிகவும் முக்கியமான உறுப்பு கல்லீரல் ஆகும். அந்த கல்லீரலில் என்ன வேலை செய்கிறது என்று தெரியுமா.?


தெரிந்து கொள்ளுங்கள்.

ஒவ்வொரு நாளும், உங்கள் கல்லீரல் மற்ற உறுப்புகளுக்கு சக்தியை வழங்குகிறது. தொற்று நோய்களையும், நஞ்சுகளை எதிர்க்கிறது. இரத்தத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. ஹார்மோன்களை சீராக்குவதற்கும் பயன்படுகிறது. மேலும் கெட்ட கொழுப்புகளை நல்ல கொழுப்பாக மாற்றி மற்ற உறுப்புகளுக்கும் பயனுள்ளதாக மாற்றுகிறது.


இப்பேற்பட்ட நல்குணங்களை கொண்ட கல்லீரலை நாம் எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.?


ஆனால் நாம் என்ன செய்கிறோம்.?


இப்போதெல்லாம் 70% மேல் நம்முடைய மக்களுக்கு Fatty Liver Enlarge இருக்கிறது (கல்லீரல் வீக்கம்) ஆனால் அது தெரிந்தும், நாம் அதற்கான சிகிச்சை எதுவும் எடுத்துக்கொள்வது இல்லை. Fatty Liver என்ன செய்ய போகிறது என்று அலட்சியம்.


அது Fatty Liver இல் இருந்து Non-Alcholic Stotohepatitis (NASH), மற்றும் cirrhosis liver  (கல்லீரல் வடு) ஆக மாறுகிறது.


கல்லீரல் வீக்கத்தின் போது, ஒவ்வொரு கல்லீரல் செல்களிலும் கொழுப்பு குவிக்கப்படுகிறது. அதனால், சோர்வு, மேல் வலது வயிற்றில் மந்தமான வலி போன்றவை ஏற்படும். ஆரம்ப கட்டங்களில் எந்த அறிகுறிகளும், கல்லீரல் வீக்கத்தின் போது தெரியாது. இது மிகவும் துரதிர்ஷ்டமானது, ஏன்னெனில் கல்லீரல் வீக்கம் நோய் ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்டால், அது தலைகீழாக மாறும் இருப்பினும், அதற்கு சரியான சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை என்றால் கல்லீரலுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படக்கூடும்.


யார் யார் அதிகம் பாதிக்கபடுகிறார்கள் ?

இது அதிகமாக மது அருந்துபவர்களுக்கு, உடல் பருமன், High Cholestral, நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டவருக்கு கல்லீரல் விரைவாக பாதிப்படையும்.


முன்பெல்லாம் மது அதிகம் அருந்துபவர்களுக்கு மட்டுமே வந்த கல்லீரல் வீக்கம், இப்போது மது அருந்ததவர்க்கும் வருகிறது. அதன் காரணம் நமது உணவு முறைகளின் மாற்றமே ..மேற்கத்திய கலாசார உணவு முறைகளும் முறை தவறிய உணவு பழக்கமும் இதற்கு ஒரு முக்கிய காரணம்


அதை தவிர்த்து பல்வேறு காரணங்களும் சில ஆங்கில மருந்துகள். Acetaminophen அதனின் கலவை மருந்துகளான விக்கோட்டின் , நோர்கோ மற்றும் ஸ்டேடினஸ் போன்றவையால் கல்லீரல் வீக்கம் ஏற்படுகிறது.


குறிப்பாக ஆண்களை விட இந்த கல்லீரல் வீக்கம் பெண்களை மிகவும் பாதிக்கின்றது என்று ஆய்வு சொல்கிறது, அப்படியானால் பெண்கள் மது அருந்துகிறார்கள் என்று இல்லை. மது அருந்ததவர்க்கும் வருகிறது என்பதே உண்மை.


ஆக Fatty Liver, Cirrhosis (கல்லீரல் வடு) ஆவதற்கு முன்பு சிகிச்சை எடுப்பது நன்று. கல்லீரல் சுருக்கம் மரணத்தில் முடித்து விடும்


ஐக்கிய மாநிலங்களில் பெரும்பாலும் குழந்தைகளுக்கும் மற்றும் 20 வயதிற்கு இருப்போருக்கும் கல்லீரல் மிகவும் பாதிக்கிறது. மேலும் அந்நாடுகளில் 12வது முக்கிய காரணமாக Cirrhosis  மரணத்திற்கு வழி வகுக்கிறது.


ஆக ஆரம்ப காலத்தில் Fatty Liver கண்டறிந்தவரும், வேறு ஏதேனும் உடல் உபாதைகள் பரிசோதிக்கும் போது Fatty Liver என்று இருந்தால், அதை பெரிய விஷயமாக கருதி உடனே சிகிச்சை எடுத்து கொள்வது நல்லது.


மேலும் எந்த பக்கவிளைவு இல்லாமல் கிடைக்கும் நம்முடைய பாரம்பரிய AYUSH  மருத்துவத்தை எடுத்துக்கொண்டு ஆரோக்கியமான கல்லீரல்லோடு வாழுங்கள்.


சிகிச்சை முறை :

வாசா குளூச்யாதி கஷாயம், புனர்நவாதி கஷாயம், ஆரோக்ய வர்தினிவடி ,சித்த மருந்துகளில் மன்டூரதி அடை குடிநீர் ,கரிசாலை கற்ப சூர்ணம் ,திரிபலா கற்ப சூர்ணம் ,கரிசாலை லேஹ்யம்  முதலிய மருந்துகள் கல்லீரலின் செயல்பாடுகளை சரிசெய்பவை ஆகும்.


எப்படிப்பட்ட கல்லீரல் நோயாக இருந்தாலும் ஆயுர்வேதத்தில் வர்த்தமான பிப்பலி என்கிற சிகிச்சை முறைகள், புட பாக சுரச சிகிச்சைகள் ,பஞ்ச கர்ம சிகிச்சை முறையில் விரேசன சிகிச்சை முறைகள் போன்ற சிறப்பு சிகிச்சைகள் பல உண்டு .

கல்லீரல் கொழுப்பு –உணவு முறைகள் மற்றும் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை முறைகளை பின்பற்றி சிகிச்சை அளிக்கிறோம் எங்கள் மருத்துவ மையத்தில் பல ஆண்டுகள் கல்லீரல் கோளாறுகளை சரிசெய்து, மக்களுக்கு சேவை செய்து வருகிறோம் . பக்கவிளைவுகள் கிடையாது  நோயிலிருந்து முழு நிவாரணம் பெறலாம். மேலும் விவரங்களுக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர்  9042225333
திருநெல்வேலி  9042225999
ராஜபாளையம்  9043336888
சென்னை  9043336000( ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை-கீழ்கட்டளை )Post Comment

0 comments:

கருத்துரையிடுக