புதன், ஜூன் 21, 2017

ஆயுர்வேதத்தில் யோக கலை

ஆயுர்வேதத்தில் யோக கலை

டாக்டர். அ.முகமது சலீம் ( cure sure ) .,BAMS.,M.Sc.,MBA
டாக்டர். ஜீவா ., BAMS

   
                                       
ஜூன் 21 - உலக யோகா தினம் 



குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இன்று யோகா கற்க செல்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். யோகா பயிற்சி செய்தால் ஆரோக்கியமாக வாழலாம், மன அமைதி கிடைக்கும் என அறிந்த மக்களுக்கு யோக கலையானது ஆயுர்வேத மருத்துவத்தின் ஒரு பிரிவாகும் என்பது தெரியாதது தான் விந்தை.



யோகா என்றால் என்னவென்று தெரியாமலேயே பல பேர் யோகா என்ற பெயரில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.



உண்மையில் யோகா என்றால் என்ன.? அதன் குறிக்கோள் என்ன.? என்ற கேள்விகளுக்கு மட்டுமல்லாமல் யோக கலையை பற்றி அறியாத பல உண்மைகளை பற்றி பார்க்க போகிறோம்.



யோகா என்றால் என்ன.?


சமஸ்கிருதத்தில் யோகா என்றால் ஒன்றிணைப்பது என்று அர்த்தம். உடலையும், மனதையம் ஒன்று சேர்க்க பயன்படும் கருவிதான் யோகா.



ஆயுர்வேத பிரிவில் யோகா :-

ஆயுர்வேதத்தில் ஸ்வஸ்த விருத்த என்ற பிரிவில் யோகா பற்றிய பல குறிப்பேடுகள் காணப்படுகின்றன. நோயற்ற ஆரோக்கிய வாழ்வினை பேணிக்காப்பது தான் ஸ்வஸ்த விருத்தம். யோகா மட்டும் இல்லாமல் நம் நடைமுறை வாழ்க்கையில் நாம் பின்பற்ற வேண்டியவை மற்றும்  தவிர்க்க வேண்டியவைகள் பற்றியும் இச்சாஸ்திரத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.



ஸ்வஸ்த விருத்தத்தில் ஆரோக்கிய வாழ்வு.


வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டியவை :-

1. சத்விருத்தம் -     நற்குணங்களை கடைபிடித்தல்.


சத்விருத்த முறைகள் :-

எப்பொழுதும் உண்மையினை பேசுதல்.
சுய கட்டுப்பாட்டுடன் வாழுதல்.
இனிமையான வார்த்தைகளை பேசுங்கள்.
இடத்திற்கு ஏற்றாற்போல் பேச வேண்டும்.
உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும்.
பெரியோர்களை மதிக்க வேண்டும்.
ஆசிரியர் மற்றும்  பெற்றோர்களை மதிக்க வேண்டும்.
எந்த உயிர்க்கும் தீங்கு விளைவிக்க கூடாது.
தர்மம் செய்ய வேண்டும்.
சுத்தமான உடைகளை அணிய வேண்டும்.
கருணை உள்ளம் வேண்டும்.
நல்லவர்களோடு பழக வேண்டும்.
கோபம், பொறாமை, ஆசைகளை கைவிட வேண்டும்.



2. ஆச்சார்ய ரசாயன முறை:- 

கடவுள் நம்பிக்கை வேண்டும்.
மதுப்பழக்கம் கூடாது.
முதியவர்கள், பெற்றோர்களை மதிக்க வேண்டும்.
கோபத்தினை தவிர்க்க வேண்டும்.
கடின உழைப்பு மற்றும்  அதிக உடலுறவினை தவிர்க்க வேண்டும்.
மனதினை அமைதியாக வைத்திருத்தல்.
இனிமையான வார்த்தைகளை பேச வேண்டும்.
நல்ல உறக்கம் வேண்டும்.
தியானம் செய்ய வேண்டும்.
நல்ல உணவுகளை தேர்ந்தெடுத்து உன்ன வேண்டும்.
இந்திரியங்களை அடக்கி ஆள வேண்டும்.



யோகத்தின் 8 அங்கங்கள் :-
1. யம
2. நியம
3. ஆசனம்
4. பிராணாயாமம்
5. பிரத்தியாகாரம்
6. தாரண
7. தியான
8. சமாதி



1. யமம் :-

அகிம்சையை கடைபிடித்தால்.
உண்மையாக நடந்துகொள்வது.
திருடக்கூடாது.
பிரம்மச்சர்யத்தை கடைபிடித்தல்.
கடவுளை தொழ வேண்டும்.


2. நியமம் :-

உடலையும், மனதையும் தூய்மையாக வைக்க வேண்டும்.
மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.
அகிம்சை, பிரம்மச்சர்யம்.
கடவுளை தோழ வேண்டும்.
ஆன்மீக புத்தகத்தை படிக்க வேண்டும்.
ஆன்மீகத்தில் நம்பிக்கை வேண்டும்.



3. ஆசனம் :-

யோகத்தின் மூன்றாவது அங்கமாக ஆசனம் விவரிக்கப்பட்டுள்ளது.மனதினை கட்டுப்படுத்த வேண்டுமெனில் முதலில் உடலினை கட்டுப்படுத்த வேண்டும். அவ்வாறு உடம்பினை கட்டுக்குள் வைத்துக்கொள்வதற்கு தான் ஆசனம் உதவுகிறது.


பல்வேறு வகையான ஆசனங்கள் ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. ஆயுர்வேத மருத்துவத்தில் ஆசனம் என்பது சிறிதும் கடினம் இல்லாமல் உடலினை ஒருநிலை படுத்தும் நிலையாகும்.




4. பிராணாயாமம் :-

பிராணம்-மூச்சு;  ஆயம-நீண்ட அல்லது  அடக்கிவைத்தல்.
மூச்சினை கட்டுப்படுத்தி செய்யும் பயிற்சிகள்.
யோககலையில் பிராணாயாமம் முக்கிய பங்கு வகிக்கின்றது.



5. பிரத்தியாகாரம் :-

இந்திரியங்களிடம் இருந்து மனதினை பிரித்து கட்டுக்குள் அடக்கி ஆள வேண்டும்.



6. தாரண :-

மனதினை ஒரு நிலை படுத்துதல்.



7. தியான :-

தியான நிலையில் தன்னிலை மறக்க வேண்டும்.



8. சமாதி :-
மேற்கொண்ட ஏழு அங்கங்களையும் சரியாக கடைபிடித்தால் மட்டுமே யோகத்தின் குறிக்கோளான மோட்ச நிலையை அடைய முடியும்.



ஆயுர்வேத சிகிச்சை முறையில் யோகா :-

1. தைவவியாபாஸ்ரய சிகிச்சை.
2. யுக்திவியாபாஸ்ரய சிகிச்சை.
3. சத்வ அவஜய சிகிச்சை.

சத்வ அவஜய சிகிச்சையில் உடலையும் மனதையும் நோயிலிருந்து விலக்கி ஆரோக்கியம் அளிப்பதற்கு யோக சிகிச்சை முக்கிய பங்கு வகிக்கின்றது.





ஆயுர்வேதத்தில் பல இடங்களில் யோகா பற்றிய குறிப்பேடுகள் காணப்படுகின்றன. ஆயுர்வேதமும் யோகவும் உடலும் உயிரும் போன்றது. எந்நாளும் இதனை ஒன்றிலிருந்து ஒன்றினை பிரிக்க முடியாது.


இதனை அறியாத பல போலி நிறுவனங்கள் யோகாவை மட்டும் பயன்படுத்தி உங்களுக்கு ஆரோக்கியம் அளிக்கின்றோம் என மக்களிடம் ஏமாற்று வேலை செய்கிறார்கள்.


யோகா பயில வரும் மக்களுக்கு தெரியாமலேயே பல ஆயுர்வேத மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. மக்களும் என்னவென்று தெரியாமல் வாங்கி உட்கொள்கின்றனர். நோய்கள் குணப்படுத்தப்பட்டு அவர்கள் திரும்பி செல்லும் போது ஆயுர்வேதம் மறைக்கப்பட்டு யோகா கண் கண் முன்  நிற்கிறது.


ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ள சத்விருதம் போன்ற நற்குணங்களையும், யம ,நியமங்களை கடைபிடிக்காமல் ,ஆயுர்வேத மருந்துகளையும் கடைபிடிக்காமல் வெறும் ஆசனம் செய்வதால் நோய்கள் குணமாகாது.


ஆசனம் என்பது யோகா ஆகாது அது வெறும் உடற்பயிற்சி அஷ்ட அங்க யோகத்தினை பின்பற்றுவதுதான் முழுமையான யோக கலை.


ஆயுர்வேதம் இல்லாமல் யோகா இல்லை என்பதனை மனதில் நிலைநிறுத்துங்கள்.


போலி நிறுவனங்களின் சொற்பொழிவில் விழுந்து பணத்தினை வீணாக பறிக்கொடுக்காதீர்கள்.


குறிப்பு –சித்த மருத்துவத்தின் ஒரு கூறாக கூட யோகாவை கூற முடியும்


கார்பரேட் யோகா சாமியார்கள் –யோகாவை தங்களது பிராண்ட் ஆக மாற்றி வருகிறார்கள் . கார்பரேட் சாமியார்கள் விரிக்கும் யோகா என்ற வலையில் வீழ்ந்து மடிக்கிற மன அழுத்தமுள்ள இந்த கால மனிதர்களுக்கு என்ன சொன்னலும் காதில் விழ போவதில்லை ...யோகாவை காசாக்கும் வித்தை தெரிந்த சாமியார்கள் , ஆசிரமங்கள்  விரிக்கும் நம்மை ஆன்மீகத்தில் அழைத்து செல்லுமா ? செம்மறியாட்டு கூட்ட மக்கள் மாற போவதில்லை ...
ஆயுர்வேதமே யோகாவின் தாய் என்பதை உணர்த்த இந்த சர்வதேச யோக தினத்தில் ஒரு சிறிய கட்டுரை ..



ஆயுஷ் மருத்துவ சிகிச்சை மூலம் நோய்களில் இருந்து விடுதலை பெறுவோம் . யோகாவை வாழ்கை முறையாக வாழ –யோகாவை சரியாக கற்போம் .யோக மற்றும் ஆயுர்வேத மருத்துவ ஆலோசனைக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 90 4222 5333
திருநெல்வேலி 90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888
சென்னை 90 4333 6000 ( ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை-கீழ்கட்டளை )

Post Comment

0 comments:

கருத்துரையிடுக