புதன், ஜூன் 14, 2017

நோன்பின் மருத்துவ பலன்கள் –அறிவியல் பார்வை

நோன்பின் மருத்துவ பலன்கள் –அறிவியல் பார்வை 

டாக்டர்.அ.முகமது சலீம் ( cure sure ).,BAMS.,M.Sc.MBA
டாக்டர் .வர்தினி .,BHMS.,




லங்கணம் பரம ஔஷதம் –உண்ணா நோன்பே மிக சிறந்த மருத்துவம் என்கிறது ஆயுர்வேதம். இது காய்ச்சல் என்ற முதல் நோய்க்கு சொல்லபட்டாலும் -இந்த நோன்பே எல்லா விதமான நோய்க்கும் மருந்தில்லா தீர்வாக அமைகிறது . லங்கனம் ,ப்ரும்ஹனம்  என்று சிகிச்சையின் இரு மிக பெரிய முறைகளில் –லங்கன சிகிச்சை பல நோய்களை வெல்ல உதவுகிறது




"இறை நம்பிக்கை கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு கடமை ஆக்கப்பட்டது போல உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்"  இது புனித குர்ரான் வசனம் இரண்டாவது அத்தியாயம் -183 வசனம் .
மனித வாழ்க்கையில் அகமும், புறமும் தூய்மையடைய ஒரு பயிற்சிதான் நோன்பு.



உபவாசம்-விரதம்  பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் உள்ளது. இதனால் உடல் எடையை மட்டுமே இழக்காமல் ஆரோக்கியமான வாழ்வினையும் பெறலாம். மேலும் உண்ணவிரதமானது நம்ப முடியாத பல்வேறு நன்மைகளை வழங்க வள்ளது.



விரதமானது ஆரோக்கியமானதா?


ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உபவாசம் நடைமுறையில் இருந்தபோதிலும், இந்த உபவாசம்  இன்னமும் தீவிரமான மருத்துவ விவாதத்திற்கு உட்பட்டுள்ளது. கடைசியில் அறிவியல் ஆராய்ச்சியில் உண்ணா நோன்பு பல நன்மைகளை கொண்டுள்ளது என்பது முடிவாக இருக்கிறது .




ஆன்மீக மற்றும் மத உபவாசம்  (Religious Fasting) 



இஸ்லாம் கூறும் நோன்பு –மனிதனை உள்ளும் புறமும் சுத்தமாக்க ,இறை அச்சத்தை அதிகரிக்க பயன்படுகிறது .உபவாசம் என்பது அனைத்து மதங்களாலும் செயல்படுத்தப்படுகிறது. நூற்றாண்டுகளாக மத மற்றும் ஆன்மீக சுத்திகரிப்புக்காக விரதம் பயன்படுத்தப்படுகிறது. பைபிளின் பழைய மட்டும் புதிய ஏற்பாடுகளிலிருந்தும், குர்ஆனுக்கும் மற்றும் உபநிஷத்துக்கும் வரையான ஒவ்வொரு மத நூலிலும், விரதத்தின் தன்மையை போற்றப்படுகிறது.




நோன்புக்கான மருத்துவ காரணங்கள் :-

 மருத்துவ ரீதியாகவும்  விரதம் பயன்படுகிறது. அதாவது அறுவை சிகிச்சைக்கு முன் கண்டிப்பாக விரதம் இருத்தல் வேண்டும்.
சில மருத்துவ சோதனைகளுக்கும் துல்லியமான அளவீடுகளைப் பெற வேண்டியது அவசியம். அதற்கு அந்த சோதனையை காலை உபவாசத்தில் எடுப்பது நல்லது. மேலும், கொழுப்பு மற்றும் ரத்த சர்க்கரை அளவுகளுக்கான சோதனைகள் முன் குறுகிய கால உபவாசத்தில் எடுத்தல் அவசியம். அவ்வாறு எடுப்பதன் மூலம் ஒரு துல்லியமான அடிப்படை எண்ணிக்கையை அடைய உதவுகிறது.



விரதம் மற்றும் எடை இழப்பு :-


பெரும்பாலான மருத்துவ நிபுணர்கள் ஒரு விஷயத்தை ஏற்றுக்கொள்வது நீங்கள் காணலாம். "விரதம் ஆரோக்கியமான எடை இழப்புக்கான கருவி அல்ல". உண்ணாவிரதம் மிக வேகமாக வேலை செய்யும், இதனை மேற்கொள்வதனால் உடலில் உள்ள திரவங்கள் விரைவாக குறையலாம். ஆனால், இது ஒரு கணிசமான எடை இழப்பு  இல்லை.
அது எளிதானது என்றால், நாம் சாதாரணமான உணவை மீண்டும்  சாப்பிட ஆரம்பித்தவுடன் நம்முடைய பழைய எடையை அடைந்துவிடுவோம்.



ஆரோக்கியமான உடல் இழப்பு என்பது நீங்கள் ஆரோக்கியமான உணவுகளை முன்பு சாப்பிட்டவராயின் நீங்கள் நோன்பு மேற்கொள்ளும்போது  உடலில் இருக்கும் சர்க்கரை மட்டும் கார்போஹைட்ரேட்டுகள் மற்ற உறுப்புகளுக்கு சக்தியை வழங்கி உடல் எடையை இழக்க நேரிடலாம்.
உண்மையான உடல் இழப்பு என்பது ஆரோக்கியமான உணவுகளை உண்டு உடற்பயிற்சி செய்து மட்டும் இடைப்பட்ட விரதம் இருத்தல் நல்லது.
"உண்ணாவிரதம் ஒரு எடை இழப்பு கருவி இல்லை உண்ணாவிரதம் உங்கள் மெட்டபோலீஸ் விதத்தை குறைக்கிறது”.




உடலில் இருக்கும் நச்சுத்தன்மையை வெளியேற்ற விரதம் உதவுகிறதா :-


நீங்கள் இரண்டு அல்ல மூன்று நாட்களுக்கு மேல் சாப்பிடாமல் இருக்கும் பொது, உடலில் கெட்டோசிஸிஸ் (Ketosis) நுழைகிறது. உடலில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் வெளியேறும் பொழுது (Ketosis) ஏற்படுகிறது. எனவே அது கொழுப்பை  எரிகிறது.


மேலும் கொழுப்பு என்பது சுற்றுச்சூழலில் இருந்து அதிகப்படியான நச்சுக்க உடல் உறிஞ்சும் போது ஏற்படுகிறது. மேலும் உண்ணாவிரதத்தின் போது உடலில் இருக்கும் கழிவுகள் அகற்றபடுகின்றன.  நமக்கு தெரியாமலே ஒவ்வொரு நாள் இரவும் நாம் நோன்பு மேற்கொள்கிறோம்.



நோய் சிகிச்சைக்கு உபவாசம் :-

நோன்பு மேற்கொள்வதன் மூலம் உபாதைகள், பெருங்குடல் நோய்கள், இதய நோய் மற்றும் மனத்தளர்ச்சி ஆகியவற்றிர்க்கு பலன் உள்ளது.
ஆய்வில் கண்டறிந்தது யாதெனின், விரதத்தில் இருப்பவர்களுக்கு கீல்வாதம், தடுப்பு தோல் அழற்சி (Psoriasis) மற்றும் எக்சீமா   போன்ற நாள்பட்ட தோல் நிலைமைகளை அகற்றியுள்ளனர், மேலும் மைகிரேன் நோய், பெருங்குடல் பாதிப்பு, குறைந்து ரத்த அழுத்தம் ஆகியவையும்  குணமடைந்திருக்கிறது.ஹார்மோன் கோளாறுகளுக்கு சிறந்த தீர்வை தரவல்லது .



உபவாசம் என்பது உளவியல் ரீதியிலான நன்மைகளை  அளிக்கவல்லது.

நோன்பு மேற்கொள்வதால் மன அழுத்தத்தை சமாளிக்க முடியும்.
மேலும், நோன்பு மேற்கொள்ளவதால் எந்த வித நோய்களும் குணமடைய போவதில்லை என்று சில மருத்துவர்கள் சொன்னாலும், ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பண்பாடும் அயிரக்கணக்கான ஆண்டுகளாக உண்ணாவிரதப் போக்கை கடைப்பிடுத்து ஆரோக்கியமாக வாழ்ந்துள்ளனர்.
உபவாசம் அனைவருக்கும் நல்லது அல்ல, ஆனால் மருத்துவ சிகிசைகள் பலனளிக்காத போது, சில நேரங்களில் ஒரு மாதம் நான்கு முதல் ஐந்து நாட்கள் வரை விரதம் இருந்தால் அவர்களுக்கு அடுத்தடுத்து வரும் நோய் எதிர்ப்பு திறனை உடைக்க உதவும்.


யார் எல்லாம் நோன்பு எடுக்க தகுதி ஆனவர் அல்ல :-

கர்ப்பிணி  பெண்கள்.
ஊட்டசத்துக்குக் குறைபெற்றவர்கள்.
இதய நோய்கள்  உடையவர்கள்.
ஹெபேடிக் அல்லது சிறுநீரக குறைபாடு உள்ளவர்கள்.




நீண்ட ஆயுளுக்கு நோன்பு :-

நூற்றுக்கணக்கான ஆய்வு படி குறைந்த கலோரிகளை எடுப்பவர்கள் நீண்ட காலம் வாழ்கின்றனர்.



நோன்பின் மருத்துவக் குணங்கள்.

1. நோன்பு நோய்களை மட்டும் குணப்படுத்துவது அல்லாமல் நோய் வராமலும் தடுக்கிறது.
2. அதிக இரத்த அPத்தம் (B.P) குறைகிறது.
3. இரத்தத்தில் கொழுப்புகளையும், கொலஸ்ட்ராலையும் குறைக்கிறது.
4. இதய அடைப்பு ஏற்படுவதை தடுக்கிறது.
5. உடலில் இரத்த ஓட்ட சுழற்சியைச் சீராக்குகிறது.
6. இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
7. மூட்டுவலி ஆஸ்த்துமா குறைகிறது.
8. மூச்சுக்குழல் அடைப்பு, உடல் எடை,செரிமானக் கோளாறுகள், மைக்ரோன் என்னும் தீராத தலைவலி,மலச்சிக்கல்,தோல் வியாதிகள் ஆகியவை குணமடைகின்றன.
9. உடல் நோய் எதிர்ப்பு சக்தி பெறுவதால் நோயின்றி நம்மைப் பாதுகாக்கிறது.
10. உடலில் ஏற்படும் காயங்கள், அறுவை சிகிட்சை காயங்கள், உடைந்த தசைகள் ஆகிவை துரிதமாகக் குணடடைகின்றன.
11. வளர் சிதை மாற்ற நோய்கள் ,மெட்டபாலிக் சின்ட்ரோம் நோய்களில் மிக சிறந்த பலனை தரவல்லது
12. மனம் சார்ந்த நோய்களுக்கு தீர்வை தரவல்லது
 13 . ஆட்டோ இம்யூன் நோய்களில் நோன்பு மிக சிறந்த பலனை தரவல்லது 


இத்தனை மகத்துவம் மிக்க  குணமிக்க நோன்பு மனிதனுக்கு நோயின்றி வாழ இறைவனால் அருளப்பட்ட நோய் நிவாரணியாகும். ஆயுளை அதிகரிக்கச் செய்ய நோன்பு அறிவியல் பூர்வமான ஓர் இயற்கை மருத்துவமாகத் திகழ்கிறது. நோன்பின் பலன் தெரிந்து இயற்கை மருத்துவ சிகிச்சை பெற சிறந்த ஆயுஷ் மருத்துவ ஆலோசனைக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 90 4222 5333
திருநெல்வேலி 90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888
சென்னை 90 4333 6000 ( ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை-கீழ்கட்டளை )


Post Comment

0 comments:

கருத்துரையிடுக