வெள்ளி, ஜூன் 16, 2017

க்ஷார சூத்திரம்


க்ஷார   சூத்ரம்

டாக்டர்.அ.முகமது சலீம் (cure sure ).,BAMS.,M.Sc.MBA
டாக்டர்.ஜீவா.,BAMS.

ஆயுர்வேத அறுவை சிகிச்சை முறைகளில் க்ஷார சூத்ரமானது இன்றைய காலகட்டத்தில் ஆசன வாய் நோய்களை பக்க விளைவுகளின்றி முழுமையாக தீர்வு தருவதில்  முக்கிய பங்கு வகிக்கின்றது. நவீன அறுவை சிகிச்சையின் தந்தையாக அழைக்கப்படும் ஆயுர்வேத ஆச்சார்யர் சுஸ்ருதர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே க்ஷார சூத்ரத்தை பயன்படுத்தி மூல நோய், பௌத்திரம் (ம) பல ஆசனவாய் நோய்களை குணமாக்குவது    பற்றி விளக்கமாக தனது சுஸ்ருத சம்ஹிதையில்  தெளிவாக எழுதி இருக்கிறார்.

ஆயுர்வேத ஆச்சர்யக்களான சக்ரபானி தத்தா மற்றும் பாவ மிஷ்ரா அகியோரினால் எழுதப்பட்ட புத்தகங்களில் க்ஷார சூத்ரம் பற்றிய குறிப்பேடுகள் காணப்படுகின்றன.

*க்ஷார சூத்ரம் என்றால் என்ன.?

க்ஷாரம்  - ஆல்களின்-கார உப்பு , சூத்ரம் - நூல்.

க்ஷார சூத்ரம் தயாரிக்க தேவைப்படும் பொருட்கள்

☘ அறுவை சிகிச்சை லைனன் நூல்.

☘ இலைக்கள்ளி பால்.

☘ மஞ்சள் பொடி.

☘ நாயுருவி க்ஷாரம் .

சூத்திரத்தினை தயாரிக்கும் முறை :-

☘லைனன் நூலினை ஒரு இடத்தில் இறுக்கமாக கட்டி விட வேண்டும். முதலில் இலைக்கள்ளியின் பாலினை நூலில் பூச வேண்டும், காய்ந்த பின் மீண்டும் பூச வேண்டும். இதுபோன்று 11 முறை இலைக்கள்ளி பாலினை பூச வேண்டும்.

☘அடுத்து இலைக்கள்ளி பாலுடன் நாயுருவியின் க்ஷாரத்தை சேர்த்து ஏழு முறை பூசி காய வைக்க வேண்டும்.

☘இறுதியாக இலைக்கள்ளியின் பாலுடன் மஞ்சள் சேர்த்து மூன்று முறை பூசி காய வைக்க வேண்டும்.

☘தயாரித்த பின் சுத்தமான பாக்கெட் (அ) கண்ணாடி குடுவையில் சேகரித்து வைக்க வேண்டும்.

க்ஷர   சூத்திரத்தின் மருத்துவ பயன்கள் :-

பவுந்திர நோயாளியை உனக்கு பிடிக்காத மருத்துவரிடம் அனுப்பு என்கிறது என்கிறது மருத்துவர்களிடையே நிலவும் ஒரு மருத்துவ சிரிப்பு துணுக்கு..அந்த அளவுக்கு Fistula in ano என்கிற பவுந்திர நோய்க்கு அறுவை சிகிச்சை கூட பலனை கொடுக்காமல் இந்த நோயாளிகள் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்படுகிற நிலைக்கு ஆயுர்வேதத்தின் க்ஷார கர்ம என்கிற சிகிச்சை மிகப்பெரிய வரமாய் உள்ளது.

பௌத்திர நோயில் க்ஷார சூத்திரத்தின் பங்கு :-

சரியான தூய்மையினை கடைபிடிக்காததால், உடல் உஷ்ணம் போன்ற இன்னும் பல்வேறு காரணங்களால் ஆசனவாயின் அருகில் செயற்க்கையான துளைகள் வருவது பௌத்திர நோயாகும்.

க்ஷார சூத்திரத்தினை இயந்திரத்தின் உதவியை கொண்டு இரு துளைகளையும் இணைக்குமாறு கட்டி விட வேண்டும். தினமும் நூலினை மாற்றி இறுக்கமாக கட்ட வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் செயற்கையான துளைக்கும் ஆசனவாய்க்கும் இடையில் இருக்கும் இடைவெளி மறைந்து பௌத்திர நோயும் முழுமையாக குணமடைகிறது.

மூல நோயில் க்க்ஷார சூத்திரத்தின் பங்கு :-

☘ வெளி புற மூல நோய்க்கு க்க்ஷார சூத்ரம் மிகவும் சிறந்தது.

☘ வெளி மூலத்தினை சுற்றி க்க்ஷார சூத்திரத்தால் இறுக்க கட்ட வேண்டும். குறைந்த நாளிலேயே வெளி மூல சதை முழுவதுமாக விழுந்து விடும்.

☘ மூலம், பௌத்திரம் மட்டுமில்லாமல் ஆழ்துளை புண்களும் க்‌ஷார சூத்திரத்தின் மூலம் குணமடைகின்றன.

க்ஷார  சூத்திரத்தின் பலன்கள் :-

☘ நோயாளி சிகிச்சை முடிந்தவுடன் வீட்டிற்கு சென்று விடலாம்.

☘ சிகிச்சையின் கால அளவு மிகவும் குறைவு.

☘ சிகிச்சை முடிந்த ஓரிரு நாட்களில் தினசரி வேலைகளில் ஈடுபடலாம்.

☘  குணப்படுத்தப்பட்ட  பின் மீண்டும் உற்பத்தி ஆகாது.

☘  நீண்ட நாள் ஓய்வு எடுக்க தேவையில்லை.

க்ஷார  சூத்திர சிகிச்சை முடிந்த பின் கடைபிடிக்க வேண்டியவை :-

☘  சிகிச்சை முடிந்து 6 மணி நேரம் வரை திரவ உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

☘  சிகிச்சைக்கு மறுநாள் காலையில் SITZ BATH எடுக்க வேண்டும்.

☘  அதிகளவு பொறித்த உணவுகள் (ம) கார உணவுகளை தவிர்க்க வேண்டும்.

☘  மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

☘  வெகு தூர பயணம் கூடாது.

ஆசனவாய் நோய்களுக்கு தேவையற்ற அறுவை சிகிச்சைகளை தவிர்த்து க்க்ஷார சூத்திரத்தின் மூலம் முழுமையான நிவாரணம் பெறுவீர்.

தகுந்த ஆயுர்வேத மருத்துவர்களை தேர்ந்துடுப்பீர்.!

வட இந்தியாவில் இருந்து வந்து மஞ்சள் நோட்டீஸ் புகழ் பிஸ்வாஸ் க்ரூப் போலி மருத்துவர்களிடம் ஏமாந்து விடாதீர்கள்

முழுமையான ஆரோக்கியத்தை பேணிக்காப்பீர்.!

இயற்கை மருத்துவ சிகிச்சை பெற சிறந்த ஆயுஷ் மருத்துவ ஆலோசனைக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர்  90 4222 5333
திருநெல்வேலி  90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888
சென்னை 90 4333 6000 (ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை கீழ்கட்டளை, சென்னை).

Post Comment

0 comments:

கருத்துரையிடுக