புதன், ஜூன் 14, 2017

பொன்னாங்கண்ணி – போலி எது ? உண்மை எது ??

தவறாக அடையாளப்படுத்தபடும் போலி பொன்னாங்கண்ணி கீரைடாக்டர் .அ.முகமது சலீம் ( cure sure ).,BAMS.,M.Sc.,MBAபொன்னாங்கண்ணி என்று ஏமாந்தவரா நீங்கள் ?பொன்னாங்கண்ணி என்று நீங்கள் பயன்படுத்தி வருவது உண்மை பொன்னாங்கண்ணி இல்லை அதிர்ச்சி தகவல் . கண்ணுக்கு நல்லது ,தோலுக்கு நல்லது என்று ஆண்டு முழுவதும் நாம் இப்போது கிடைக்கிற பொன்னாங்கண்ணி உண்டு வந்தாலும் தர போவதில்லை என்பது ஒரு நம்ப முடியாத உண்மை .
Alternanthera sessilis என்கிற தாவர பெயர் உடைய கீரையே உண்மையான பொன்னாங்கண்ணி . இதன் படம் இங்கே கொடுக்கபட்டுள்ளது .கொடுப்பை ,சீதை என்று வேறு பெயரில் அழைக்கப்படும் இந்த கீரைகளின் அரசனை போல் உள்ள பொன்னாங்கண்ணி நமக்கு கிடைப்பது உண்மை இல்லை என்பது தான் அதிர்ச்சி தகவல்


சென்னை கிருஸ்துவ கல்லூரியின் தாவரவியல் ,தாவர  உயிரித் தொழில்நுட்பத்துறை தலைவர் மற்றும் பேராசிரியர் டாக்டர் .நரசிம்ஹன்  தனது ஆராய்ச்சியில் இப்போது கிடைக்கிற சீமை பொன்னாங் கண்ணி என்கிற Alternanthera philoxeroides , Alligator weed -என்கிற வகை வெளிநாட்டில் இருந்து இங்கே வந்து நமது நீர் நிலைகளின் கரைகளில் தானாக வளரக்கூடிய இந்த அழகு செடி நமது கீரை சந்தையை கிட்டத்தட்ட முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளது என்கிறார் .கழிவு நீர் ஓடை அருகில் ,தொழிற்சாலை கழிவு அருகில் எளிதாக வளர கூடிய இந்த சீமை பொன்னாங்கண்ணியில் காரீயம் ,பாதரசம் ,அம்மோனியா போன்ற மோசமான விஷ சத்துக்களும் புதைந்து இருக்கும் . இவை நமக்கு நல்லதை செய்யாமல் மிக பெரிய கெடுதலை உருவாக்க வாய்ப்புள்ளது என்கிறார் இந்த ஆராய்ச்சியாளர் .சிவப்பு பொன்னாங்கண்ணி என்கிற Alternanthera bettzickiana  தாவரியல் பெயர் உடைய இந்த செடி வெளிநாட்டில் இருந்து வந்தது ,அலங்கார செடி தான் இது . இது உண்ண தகுந்ததல்ல என்கிறது அறிவியல் . நம்மிடையே இப்போது அதிகம் கிடைப்பது இந்த சிவப்பு வகை தான் .. உண்மையை சொல்லப்போனால் சித்த மருத்துவ பண்டைய நூல்களில் பொன்னாங்கண்ணியில் வகைகள் இல்லை . பச்சையான ஒரு வகையை மட்டும் விளக்குகிறது சித்த மருத்துவ குணபாட நூல் .பெரிய பொன்னாங்கண்ணி என்று சந்தையில் விற்கபடும் கீரையையும் இங்கே படம் பதிவேற்றி உள்ளேன் .இதுவும் உண்ண தகுந்ததல்லAlternanthera paronychioides (smooth joyweed ) என்கிற வகையும் பொன்னாங்கண்ணி என்று தவறுதலாக அடையாளம் காட்டபடுகிறதுAllien Plant என்கிற ஒரு வகை –கிட்டத்தட்ட பச்சை அசல் பொன்னாங்கண்ணியை போல் உள்ள இந்த கீரை தண்டு ,இலைகள் தடித்து காணப்படும் . உண்மையான பொன்னாங்கண்ணி தண்டு ,இலைகள் மிக மிருதுவாக இருக்கும் –அதற்க்கான படமும் இணைக்கப்பட்டுள்ளது
இதே போல் தான் போலி கரிசாலை பற்றியும் இதற்க்கு முன் கட்டுரை எழுதி இருந்தேன் .அதன் லிங்க் http://ayurvedamaruthuvam.blogspot.com/2017/04/blog-post_8.html


பொன்னாங்காணி மூலிகையின் பயன் :-

காசம் புகைச்சல் கருவிழிநோய் வாதமனல்
கூசும் பீலிகம் குதாங்குரநோய் - பேசிவையால்
என்னாங்கா ணிப்படிவம் எமமம் செப்பலென்னைப்
பொன்னாங்கா ணிக்கொடியைப் போற்று
- தேரையர் குணபாடம்.

கண்காசம்கருவிழி நோய், கண் புகைச்சல், வதம், பித்தம், கூச்சமுண்டாக்கும் கோழைவாயில் உண்டாகும் நோய்கள் போவதோடு பொன்னிறமான உடலையும் கொடுப்பதால் பொன்னாங்கண்ணியைப் போற்றியுண்ணல் வேண்டும் என்பது மேற்கூறிய பாடலின்  பொருளாகும்

கல்ப மருந்தாக பொன்னாங்கண்ணியை உண்டு வந்தால்  பகலில்கூட நட்சத்திரங்களைப் பார்க்க இயலும்என்று சித்தர்களின் கூற்று .

*இன்று தங்க பஸ்பம் என்பது கோடீஸ்வரர்களுக்குக் கூட எட்டாத ஒரு மருந்தாகி விட்டது. ஆனாலும், அதை ஏழைகளும் பலன் பெறும் விதத்தில் இறைவன் பொன்னாங்கண்ணியில் பொதிந்து வைத்திருப்பது வியக்கத்தக்க ஒன்று.

பொன்னாங் கண்ணி சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு சத்து நிறைந்த உணவாகி அவர்களின் சோர்வைப் போக்குவதோடு சர்க்கரை நோய்க்கும் ஒரு துணை மருந்து ஆகிறது.

தகவல் ரெபரன்ஸ் –இணைப்புகள்நன்றி –மரு.ஸ்ரீராம் MD (S) அவர்கள் மற்றும் சித்த மருத்துவ டெலிகிராம் குழு

அரைகுறை மூலிகை அறிவு எந்த நல்ல பலனையும் தராது ..ஆயுள் முழுவதும் தவறாக புரிந்து சாப்பிடும் மூலிகைகள் பலனை தராது . சரியான மூலிகை அறிவை கொண்ட அனுபவ அறிவும் உள்ள தகுதி வாய்ந்த மருத்துவரிடம் மட்டுமே சிகிச்சை பெறுவது நல்லது .இந்த தகுதிகளை பெற்ற சிறந்த ஆயுஷ் மருத்துவ ஆலோசனைக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 90 4222 5333
திருநெல்வேலி 90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888
சென்னை 90 4333 6000 ( ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை-கீழ்கட்டளை )
Post Comment

0 comments:

கருத்துரையிடுக