சனி, ஜூன் 17, 2017

லேசர் அறுவை சிகிச்சை போன்ற ஆயுர்வேத க்ஷார கர்மம் சிகிச்சை.


லேசர் அறுவை சிகிச்சை போன்ற ஆயுர்வேத க்ஷார கர்மம் சிகிச்சை.

டாக்டர்.அ.முகமது சலீம் (cure sure ).,BAMS.,M.Sc.MBA
டாக்டர்.ஜீவா.,BAMS.

கத்தியின்றி ரத்தமின்றி பக்கவிளைவுகள் சிறிதும் இன்றி  அறுவை சிகிச்சை செய்ய முடியுமா ?.. நிச்சயமாய் முடியும் ஆயுர்வேத க்ஷார கர்ம சிகிச்சையில்...

இக்காலகட்டத்தில் ஆசனவாய் நோய்களுக்கு கடைசி தீர்வு அறுவை சிகிச்சையாகவே உள்ளது.இல்லையெனில் மூலநோய்க்கு ஒரு ointment,பெளத்திர நோய்க்கு ஒரு ointment,ஆசனவாய் புண்களுக்கு ஒரு ointment என அப்போதைக்கு ஒரு வலி நிவாரணியை தேடுகிறோம்.

இதற்கு நிரந்தர தீர்வு தான் என்ன.? அறுவை சிகிச்சை இல்லாமல் முழுமையான நிவாரணம் பெறுவது எப்படி.?என்ற உங்களது கேள்விக்கெல்லாம் பதில் இதோ.

க்ஷார கர்ம பிரயோகம்

க்ஷாரம் என்றால் என்ன.?

மூலிகைச் செடிகளை எரித்து கிடைக்கும் சாம்பலில் இருந்து தயாரிக்கப்படும் alkaline க்ஷாரம் எனப்படும்.

க்ஷாரத்தின் வகைகள் :-

☘ பிரதிசாரனிய க்ஷாரம் (வெளிபுற பிர யோகம்)

☘ பானீய  க்ஷாரம் (உள் பிரயோகம்)

பிரதிசாரனிய க்ஷாரத்தின் உட்பொருள்கள் :-

☘ நாயுருவி செடியின் சாம்பல்.

☘ சங்கு.

☘ கொடுவேலி.

இதன் PH -ன் மதிப்பு 13.5

பிரதிசாரனிய க்ஷாரத்தின் குணாதிசயங்கள் :-

☘ வாத,பித்த,கபம் ஆகிய மூன்று தோஷங்களையும் சமநிலை படுத்தக்கூடியது.

☘ மிகவும் உஷ்ணத்தன்மை வாய்ந்தது.

☘ பார்ப்பதற்கு  வெள்ளை நிறத்தில் இருக்கும்.

☘ தேவையற்ற தசை (அ) கட்டிகளின் மீது பூசும் பொழுது முழுமையாக கரித்து விடும்.

☘ குணப்படுத்தப்பட்ட நோய்கள் மீண்டும் உற்பத்தி ஆகாது.

குணப்படுத்தப்படும் நோய்கள் :-

☘ உள்புற மூலநோய்கள்.

☘ அறுவை  சிகிச்சை முடிந்த பெளத்திர நோய்.

☘ மலக்குடல் இறக்கம்.

☘ ஆழ்துளை புண்கள்.

☘ ஆசனவாய் புண்கள்.

☘ டான்சில் வீக்கம்

☘ மூக்கில் சதை வளர்ச்சி

உள்புற மூல நோயில் பிரதிசாரனிய க்ஷாரத்தின் பங்கு :-

🍃 Proctoscope -இயந்திரத்தின் உதவியைக் கொண்டு ஆசனவாயினை விரிவடைய செய்தபின் உள்புறத்தில் இருக்கும் மூலத்தின் மீது  க்ஷாரத்தை தடவி சிறிது நேரம் காத்திருக்க வேண்டும்.

🍃சிறிது நேரத்தில் க்ஷாரமானது சிவப்பு நிறமுள்ள மூல சதையினை எரித்து நாவல் பழ  கரு ஊதா நிறமாக்கிவிடும்.

🍃 இவ்வாறு செய்வதன் மூலம் மூல நோயினை உருவாக்கும் திசுக்கள் முழுமையாக அழிக்கப்படுகிறது.

பெளத்திர நோயில் பிரதிசாரனிய க்ஷாரத்தின் பங்கு :-

🍃 முதன்மை நிலை பெளத்திர துளையில்   க்ஷாரம் பயன்படுத்துவதன் மூலம் 2 நிமிடங்களிலேயே  பெளத்திர துளை மறந்து போகிறது.

🍃 இவை மட்டுமல்லாமல் மலக்குடல் இறக்கத்திலும்,ஆசனவாய் புண்களின் மீதும் க்ஷாரம் பயன்படுத்துவதால் சிறிது நேரத்திலேயே முழுமையாக குணப்படுத்தப்படுகின்றன.

க்ஷார கர்மத்தின் சிறப்பம்சங்கள் :-

🍃 அதிக வலிகள் இல்லை.

🍃இரத்தம் வராது .

🍃 நோய்கள் மீண்டும் உற்பத்தியாகாது .

🍃தங்கி சிகிச்சை எடுக்கவேண்டிய அவசியம் இல்லை .

பானிய க்ஷாரம் :- (உள்புற பிரயோகம்)

வெளிப்பிரயோகத்தில் மட்டுமல்லாமல் க்ஷாரத்தினை உட்கொள்வதாலும் பல நோய்கள் குணப்படுத்தப்படுகின்றன.

பானிய க்ஷாரத்தின் உட்பொருள்கள் :-

🍃 சிற்றெல்.

🍃 நாயுருவி.

🍃பலாசம் .

🍃வாழை

🍃நெல்லி

குணப்படுத்தப்படும் நோய்கள் :-

🍃 மூத்திரக்கல்

🍃 நீர்கட்டிகள்

🍃 கொழுப்பு கட்டிகள்

🍃 மூத்திரக்குழாய் அடைப்பு

🍃 இரத்தக் குழாய் அடைப்பு

இத்தகைய நோய்கள் மட்டுமல்லாமல், மருந்துகளால் குணப்படுத்த முடியாத அனைத்து வகையான நோய்களையும் க்ஷார ப்ரயோகத்தின் மூலம் குணப்படுத்தமுடியும்.
ஆனால்  க்ஷாரத்தினை தவறாக பிரயோகம் செய்தால் பலவிதமான பக்கவிளைவுகள் வந்து சேரும்.

ஆகையால் தகுந்த ஆயுர்வேத மருத்துவர்களை தேர்ந்தெடுப்பீர்.

இயற்கை மருத்துவ சிகிச்சை பெற சிறந்த ஆயுஷ் மருத்துவ ஆலோசனைக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர்  90 4222 5333
திருநெல்வேலி  90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888
சென்னை 90 4333 6000 (ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை கீழ்கட்டளை, சென்னை)

Post Comment

0 comments:

கருத்துரையிடுக