வியாழன், ஜூன் 01, 2017

மலர்களில் இருந்து மனதிற்கு மருத்துவம்

மலர் மருத்துவமே மன அழுத்தத்திற்கு சிறந்த மருத்துவம் 
Batch Flower Remedy For Stress

டாக்டர்.அ,முகமது சலீம் ( cure sure ).,BAMS.,M.Sc.,MBA
டாக்டர் .வர்தினி .,BHMS.,
நாம் ஒவ்வொரு நாளும் எத்தனையோ முகங்களைப் பார்க்கிறோம். அவற்றில், எத்தனை முகங்களில் தான் சிரிப்பையோ, சிறு புன்னகையையோ பார்க்க முடிகிறது?

ஏன் முகங்களில் இத்தனை இறுக்கம்?

ஒரு நாளில் எத்தனை முறை மகிழ்ச்சியாக மனம் விட்டு சிரிக்கிறீர்கள்?

எத்தனை முறை கோபம் / பதற்றம் / பயம்/ கவலை கொள்கிறீர்கள்?

இவ்வுலகில் எனக்கு எந்த பிரச்னையுமே இல்லைஎனச் சொல்லும் யாராவது ஒருவரை இதுவரை நீங்கள் சந்தித்ததுண்டா.?

தொந்தரவுகள், ஏமாற்றங்கள், காலக்கெடுக்கள் என எல்லாம் கலந்ததாகவே உள்ளது நம் அன்றாட வாழ்க்கை. பள்ளி செல்லும் குழந்தைகளைக் கேட்டால் படிப்பு, ஆரோக்கியமற்ற குடும்பச் சூழல், இணக்கமில்லாத சக மாணவர்கள் போன்றவை பிரச்னை ஏற்படுத்துவதாகச் சொல்கிறார்கள். டீன் ஏஜ் குழந்தைகளோ, பாடத்திட்டப் பளுவுடன் அவர்களின் வயதுக்குரிய விஷயங்களான காதல், தோற்றம், புரிந்து கொள்ளாத பெற்றோர், ஆசிரியர், கேலி செய்யும் நண்பர்கள் என பல்வேறு விஷயங்கள் தினம் தினம் தாக்குவதாகச் சொல்கிறார்கள்.


வேலைக்குச் செல்வோரோ அதிக வேலைப்பளு, மோசமான சூழல், குறைந்த சம்பளம், நிரந்தரமற்ற வேலை, சக ஊழியர்கள், சலிப்பு தட்டும் வேலைத் தன்மை, விருப்பமில்லாத வேலையைப் பார்ப்பது என பல விஷயங்கள் பிரச்னை அளிப்பதாகக் கூறுகிறார்கள்.


வெளியில் செல்கிறவர்களுக்குத்தான் இவ்வளவு பிரச்னை என்றால், வீட்டிலேயே இருக்கும் குடும்பத்தலைவிகளுக்கு பிரச்னை இல்லையா என்ன? புகுந்த வீட்டினருடன் சுமுக உறவு இல்லாதது, அதனால் சண்டை சச்சரவுகள், குடிகார கணவன், அனுசரித்துப் போகாத கணவன், தொந்தரவு கொடுக்கும் பிள்ளைகள், வேலைக்காரி பிரச்சனை எனப் பல்வேறு சிக்கல்களை சந்திப்பதாகச் சொல்கிறார்கள்.

ஆனால், அந்தப் பிரச்னைகளைச் சமாளிக்க முடியாமல், நவீன வாழ்க்கை முறையில் மன அழுத்தத்துக்கு ஆளாகாதவர்களை(Stress)  பார்ப்பது மிக அரிது.


இதிலிருந்து மனஅழுத்தம் என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.


இதற்கு முக்கிய காரணமாக இருப்பது நமது ஆசை தான். ஆசைகள் நிறைவேறாத பட்சத்தில் அது கவலையாக மாறுகிறது. அந்த கவலையை மற்றவர்களிடம் பகிராமல் அது மனஅழுத்தம் ஆகிறது. இந்த மன அழுத்தத்தால் நாம் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றோம்.


உடல் ரீதியாகவும் சரி மன ரீதியாகவும் சரி. தேவையற்ற சோகம், பயம், மற்றவர்களுடன் இயல்பாக பழக இயலாமை, தூக்கமின்மை, கோபம், வெறுப்பு, கவனமின்மை போன்றவை ஏற்படலாம்.


இன்னும் பலருக்கு இந்த மனஅழுத்தமானது அதிகமாகி ( Advanced Symptoms Of Stress ) தற்கொலை செய்யகூட தூண்டும்.


ஆக, ஒருவருக்கு எதில் மீதும் பற்று இல்லாமல் இருந்தால், தனக்கு தானே பேசி கொள்ளுதல், மற்றவர்களிடம் கடிந்து (கோபம்) கொள்ளுதல், இன்னும் பல மாற்றங்கள் இருந்தால் நாம்  மனநல மருத்துவரின் ஆலோசனையை தான் கேட்கிறோம்.


அப்படி ஒருவர் மனநல மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற நேர்ந்தால் இந்த சமுதாயம் அவரை ஒரு மனநல நோயாளியாக தான் பார்க்கிறது. நெருங்கிய நண்பர்கள் கூட சில சமயம் அவர்களிடம் ஒரு சிறு இடைவெளியை கடைபிடிக்க நேரிடுகிறது. இது கூட சில சமயம் மனஅழுத்தத்தை அதிகரிக்க செய்யும்.


இதற்கு இயற்கை நமக்கு அற்புதமான மலர் மருந்துகளை தந்துள்ளது. அதை பயன்படுத்தி மனஅழுத்தத்தில் இருந்து நாம் சுலபமாக விடுபடலாம்.


மலர் மருத்துவமா.? அப்படி ஒன்று நான்  இதுவரை கேள்விப்பட்டதே இல்லையே.! என்று பலர் வியப்புடன் கேட்பார்கள். அவர்களுக்காகவே இந்த பதிவும், சில குறிப்புகளும்.


மலர் மருத்துவம் என்றால் என்ன.?


பழங்கால எகிப்தியர்கள் மற்றும் ரோமர்கள் பூக்கும் தாவரங்களை மருத்துவ ரீதியாக பயன்படுத்தினர். பின்பு 1930 ஆம் ஆண்டு Dr. எட்வர்ட் பேச்  என்பவர் தான் பூக்களுக்கும் சில நோய்களை குணப்படுத்த கூடிய மருத்துவகுணம் உள்ளது என நிருபித்தார். அதன் விளைவாக 38 வகையான பூக்களிலிருந்து மருந்துகளை கண்டறிந்தார். இதில் அவர் கண்டறிந்தது மனிதனின் மனசோர்வை நீக்கினால் தான் அவன் ஆரோக்கியமாக வாழ முடியும்.

ஒவ்வொரு மலரிடமும் ஒவ்வொரு சிறப்பு மருத்துவ குணங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. மேலும் அவை நாமே எடுத்துக்கொள்ளாமல் இயற்கை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எடுத்து கொள்ளலாம்.

மலர் மருந்துகள் யாருக்கு தேவைப்படும்.?

எப்போதும் பயந்து கொண்டு இருப்பவர்.
வாழ்க்கையில் ஆர்வம் இழந்தவர்கள்.
தனிமையில் வாடுபவர்கள்.
மிகவும் உணர்ச்சிவசப்படுபவர்கள்.
மனசோர்வு அவநம்பிக்கை உள்ளவர்கள்.
ஆகியோருக்கு நிச்சயம் மலர் மருத்துவம் தேவை.


மனஅழுத்தத்திற்காண சில முக்கிய மருந்துகள் :-

Gentian :- அவநம்பிக்கை மற்றும் மனஅழுத்தம் காரணமாக ஒரு நபர் தனது துயரத்தின் காரணத்தை அறியும் போது Gentian உதவுகிறது.

Elm  :-  அதிகமான மன அழுத்தம் உள்ளவர்கள் பயன்படுத்தலாம்.

Agrimony :- உணர்ச்சி ரீதியான வேதனையுடன், நம்பிக்கையற்ற மனநிலையுடன் துன்பப்படுகிறவர்களுக்கு இது பயன்படும்.

Cherry Plum :- பயத்தினால் ஏற்படும் வேதனைக்கு. அந்த பயம் உண்மையானதாக அல்லது கற்பனையாகவோ கூட இருக்கலாம் அவர்களுக்கு இதை பயன்படுத்தலாம்.

Gorse :- சந்தேகம், ஏமாற்றம் மற்றும் நம்பிக்கையற்ற தன்மை ஆகியவற்றிக்கு இதை பயன்படுத்தலாம்.

Mustard :- எந்த ஒரு காரணமும் இல்லாமல் சோகமாக இருப்பவர்களுக்கு இதை பயன்படுத்தலாம்.

Honey Suckle :- கடந்தகால நிகழ்வுகள் மீது தொடர்ந்து கவனம் செலுத்தி துயரம் அடைபவர்களுக்கு இதை பயன்படுத்தலாம்.

ஆக, இயற்கை தரும் அற்புத மலர் மருந்துகளை பயன்படுத்தி ஆரோக்கியத்துடன் வாழ முயற்சிப்போம் எளிதில் மன அழுத்தத்தில் இருந்தும் விடுபடுவோம்.

மனம் சார்ந்த பிரச்னைகளுக்கு ,மலர் மருத்துவ ஆலோசனைக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
சென்னை 9043336000 ( ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை கீழ்கட்டளை)Post Comment

0 comments:

கருத்துரையிடுக