ஆயுர்வேதத்தில் அழகியல் (நிறைவு பகுதி )
முதுமை காணாத ஆரோக்கியமான இளமை வாழ்க்கைக்கு :-
டாக்டர்.அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.,MBA
டாக்டர்.ஜீவா .,BAMS
ஆயுர்வேதம் என்றால் இங்கே சோப் ,ஷேம்ப் என்றே பலராலும் அறியப்பட்டு வருகிறது . ஆயுர்வேதம் என்கிற வாழ்க்கை அறிவியலை மேற்கத்திய கலாசாரத்தால் இன்றைய உலகத்தில் வெறும் புற அழகுக்கு மட்டும் தான் தவறாக விளம்பரம் செய்யபடுகிறது.
ஒரு மூலிகையை சேர்த்தால் இங்கே துணி துவைக்கும் கெமிகல் பவுடர் கூட ஆயுர்வேதம் என்று விளம்பரபடுத்த படுகிறது.
ஓரிரு மூலிகையை பயன்படுத்துவதால் மட்டுமே ஆயுர்வேத அழகு நிலையங்கள் என்று தவறாக புரிந்து கொள்ளபடுகிறது .பியூட்டி பார்லர்கள் தரும் செயற்கை அழகை ஆயுர்வேதம் என்கிற போலி பெயரில் மக்களை சென்றடைகிறது .
ஆயுர்வேதம் என்றாலே மசாஜ் சென்டர் என்கிற நிலையம் என்கிற அளவிலே தான் தமிழ் நாட்டில் அறியப்பட்டு வருகிறது .
தமிழ்நாட்டில் 5 % அளவு மக்கள் மட்டும் ஆரோக்யதிற்க்காக ஆயுர்வேதத்தை நாடுகிறார்கள் என்கிறது ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்.
21 மூலிகையை கொடுத்து வளர்த்தால் இங்கே பிராய்லர் கோழியும் மூலிகை கோழியாகும் என்கிறது இந்த போலி வியாபர உலகம்
மூலிகை கதைகள் பார்வேர்ட் செய்யும் பலருக்கு இந்த மூலிகை எங்கே பவுடராக கிடைக்கும் என்கிறது என்பதே முதல் கேள்வியாக இருக்கிறது ..மருதாணியையும் கெமிகல் கலந்த மெஹந்தி பவுடரும் ஒன்றே என்று இந்த தமிழ் சமூகம் நம்பி கொண்டிருக்கிறது .பாக்கெட்டில் ஆயுர்வேதம் கிடைக்கும் என்று போலி லேபிளில் உண்மை என்று expiry தேதி மட்டுமே பார்க்கிறது இந்த சமூகம் .
நூறு மிலி ரோஸ் வாட்டர் எப்படி மலிவு விலையில் கிடைக்கிறது என்று கேள்வி கேட்க மறுக்கிறது இந்த சமூகம்.
கலப்படம் எப்படி செய்யலாம் என்று ஆராய்ச்சி செய்யும் இந்த உலகத்தில் ஆர்கானிக் என்கிற போர்வையில் வருகிற பூதங்களை அழகிய ஆபத்து –எது உண்மை –எது போலி என்று தெரிந்து கொள்ள மறுக்கிறது இந்த உலகம் .
அரைகுறை மூலிகை அறிவை கொண்டவர்கள் பலருக்கு திடீர் வைத்தியனாய் பரிணமித்து விடுகிறார்கள். காவி உடையும் ,தாடியும் கொண்டால் இங்கே சித்தர் என்று நம்ப பெரிய கூட்டம் இருந்து கொண்டே இருக்கிறது .
விழிப்புணர்வு ஒன்றே ஆயுர்வேத சித்த –தாய் மருத்துவத்தை எனது தாய் நாட்டு மக்களுக்கு சென்றடைய வைக்கும் என்று நம்பியவனாக இரவின் பல மணித்துளிகளை மக்களுக்கு விதைத்து கொண்டே இருக்கிறேன் –இந்த புனித ரமலான் மாதத்திலும் ஓய்வை எதிர்பார்த்து காத்திருக்கும் வேளையிலும் என் பணி பிணி நீக்க செய்வதிலே என்று தொடர் எழுத்தை அறப்போராக செய்து கொண்டே இருக்கிறேன் .
ரசாயனம் என்கிற ஆயுர்வேதத்தின் எட்டு பிரிவுகளில் ஒரு பிரிவான என்றும் ஆரோக்யமாய் –இளமையாய் ,முதுமை தொட்டு விடாமல் வாழும் ஒரு பகுதியை மக்களுக்கு சென்றைடைய வைக்க என்னால் ஆன ஒரு சிறிய முயற்சி ..
முதுமை காணாத ஆரோக்கியமான இளமை வாழ்க்கைக்கு :-
ஆயுர்வேத மூலிகைகள் :-
- சீந்தில்
- கடுக்காய்
- நெல்லிக்காய்
- கன்னிக்கொடி
- பாலைக்கீரை
- தண்ணீர்வீட்டான் கிழங்கு
- பிரம்மி
- புல்லத்தி
- மூக்கிரட்டை
ஆயுர்வேத மருந்துகள் :-
- ச்யவனப்ராஷம்
- சாரஸ்வதாரிஷ்டம்
- ப்ருங்கராஜாசவம்
- பஞ்சாரவிந்த சூரணம்
- சிவகுளிகா
- ப்ரம்ம ரசாயணம்
- நரசிம்ம ரசாயணம்
- பிருஹத் பூர்ணசந்திர ரஸ்
- லட்சுமிவிலாச ரஸ்
ஆயுர்வேத சிகிச்சைகள் :-
- o இரசாயன சிகிச்சை
- o வாஜிகரண சிகிச்சை
- o அப்யங்கம்
- o குடிப்ராவேஷிகம்
- o வஸ்தி
- o நவரக் கிழி
- o க்ஷீர தாரா
வெளிபிரயோகம் மட்டும் அழகை தராது ..ஆரோக்யமான வாழ்க்கை தான் அழகின் அடிப்படை என்று மக்களே தெரிந்து கொள்ளுங்கள் .
அந்த காலத்தில் ராஜாக்களுக்கு பயன்பட்ட ராஜ வைத்தியங்கள் ஆயுர்வேதம் இன்று கடைசி குடிமகனுக்கும் சென்றடைந்து –பலனடைய வைக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று நம்பியவனாக விழிப்புணர்வே இன்றைய தேவை –ஒன்றிணைந்து இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம் இந்திய மருத்துவத்தாலே நலம் பெறுவோம்.
சிறந்த ஆயுஷ் மருத்துவ ஆலோசனைக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை –
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
சென்னை 9043336000 ( ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை –கீழ்கட்டளை)
0 comments:
கருத்துரையிடுக