சனி, மே 13, 2017

நீட் பரீட்சை எழுதாமல் தமிழ் நாட்டில் மருத்துவர் ஆகலாம் ?தமிழ் நாட்டில் டாக்டராவது மிக மிக எளிது

டாக்டர்.அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.,MBA


மருத்துவர் ஆவது தமிழ் நாட்டில் எப்போதுமே எளிது ..

வட இந்தியாவில் இருந்து வரும் மக்களுக்கு மருத்துவர் ஆவதில் முதல் உரிமை ..
கல்வி தகுதி –தேவையே இல்லை ..

தமிழில் பேச கூட தேவை இல்லை .அரை குறை தமிழ் போதும்

மஞ்சள் நிற போஸ்டரை –ஊரெல்லாம் ஒட்டி நானும் டாக்டர் என்று சொல்லலாம் ..

லோக்கல் டிவியில் அனால் கட்டாயம் விளம்பரம் கொடுக்க வேண்டும் ..
எந்த ஒரு பதிவு எண்ணும் அவசியம் இல்லை

யாரும் இவர்களை கேட்க முடியாது ..கேட்டாலும் ஓடிபோய் வேறு இடத்தில் கிளினிக் போடுவார்கள் ..

கஷ்டப்பட்டு ஐந்தரை வருட BAMS படிப்பை அவர்களது பெயர்க்கு பின்னால் அசால்டாக சேர்த்து விடுவார்கள் ..உண்மையில் இவர்களில் பலர் பள்ளி படிப்பை முடிக்காதவர்கள் .

தமிழ் நாட்டில் சாபக்கேட்டில் இந்த சூழ்நிலையும் ஒன்று ..

வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு –பிஸ்வாஸ் மூல பவுந்திர கிளினிக்கை திறக்க ,ஆண்மை குறைவு என்று போஸ்டர் ஊரெல்லாம் அடித்து ஒட்ட அனுமதி அளித்திருக்கிறது ..

தப்பான போஸ்டரை ஓட்டினால் போலீஸ் தண்டனை ..இவர்களுக்கு இல்லை போலும் ..

இவர்கள் கிளினிக் சென்று பார்த்தல் –ஊசி மருந்து என்று ஆங்கில மருத்துவர்கள் தோற்று போவர்கள் ..

இவர்களிடம் சிகிச்சை பார்த்து ஏமாந்து மலத்தை அடக்கும் திறனை இழந்த நோயாளிகள் ஏராளம் ஏராளம் ..

முதல் தடவை சிகிச்சை செல்லும் போது வெறும் நூறு ரூபாய் பீஸ் என்பவர்கள் ..ஆசனவாய் புண் ஆன பின் காட்ட செல்லும் போது-உங்களுக்கு மட்டும் தான் இப்படி ஆகி விட்டது –டிரஸ்ஸிங் செய்ய தினமும் ஐநூறு ...என்று இருபதாயிரம் காலி செய்த மக்கள் ஏராளம்.


யார் இந்த பூனைகளுக்கு மணி கட்டுவது ?

இந்த நிலைமை எப்போது மாறும் ?

மக்களின் ஏமாறும் மன நிலை எப்போது மாறும் ?


Post Comment

0 comments:

கருத்துரையிடுக