வெள்ளி, மே 05, 2017

இந்தியாவை அழிக்க போகும் ஆன்டிபயாடிக் செயல் இழப்பு (Antibiotic Resistance )

இந்தியாவை அழிக்க போகும் ஆன்டிபயாடிக் செயல் இழப்பு (AntiBiotic Resistance )

டாக்டர்.அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.,MBA
டாக்டர்.வர்தினி .,BHMS

மக்களை நோய்களில் இருந்து காப்பாற்ற பயன்பட்ட அற்புத ஆன்டிபயாடிக் இன்று மக்களை அழிக்க ஆண்டிபயாடிக் ரெசிஸ்டன்ஸ் என்னும் ஆன்டிபயாடிக் செயல் இழந்த தன்மையால் நூற்றுக்கு நூறு உள்ளது  என்பது எத்தனை மக்களுக்கு தெரியும்?

உலக சுகாதர ஆய்வு நிறுவனம் இந்தியாவின் சுகாதாரத்திற்கு மிக பெரிய அச்சுறுத்தலாக இந்த ஆண்டிபயாடிக் எதிர்ப்பு இருக்கும் என்று உறுதி பட சொல்கிறது.

மேற்கத்திய நாடுகள எல்லாம் இந்த ஆண்டிபயாடிக் செயல் இழப்பு பற்றி அறிந்து அதை நடைமுறை படுத்தும் போது –இங்கே அதை பற்றி விழிப்புணர்வே இல்லாமல் இருப்பது பற்றி மருத்துவனாய் என்னை ஒரு மீள முடியா சோகம் அழுத்தி கொண்டே இருக்கிறது –அதற்காக ஒரு சிறிய கட்டுரை

புவி வெப்பம் அடைவதை விட , கொசுக்களை ஒழிப்பதை விட , இரசாயன உர விவசாயத்தை விட , விவசாய கடன்களை விட ,உலகப்போரை விட ஓர் அச்சுறத்தல் இருக்கும் என்றால் அது மனிதகுலத்தையே அழிக்க கூடிய . பிரச்சனை இந்த ஆண்டிபயாடிக் எதிர்ப்பு – ஆண்டிபயாட்டிக்குகளையே அழிக்கும் அளவுக்கு ‘கிருமிகளின் எதிர்ப்பு சக்தி’ (Antibiotic Resistance) நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது’ என்பது தான் அது

ஆண்டி-பயோடிக் எதிர்ப்பு (Antibiotic Resistance)  அல்லது ஆன்டி பயாடிக் செயல் இழப்பு என்றால் என்ன.?

உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை நம்பாமல் –வெளியில் இருந்து செயற்கையாக கெமிக்கல் ஆண்டிபயாடிக் என்னும் நோயினை விரட்ட இந்த நவீன மருத்துவ உலகம் கண்டறிந்தது . ‘இப்போது நடைமுறையில் உள்ள பல்வேறு ஆண்டிபயாடிக் மருந்துகளுக்குக் கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியா கிருமிகள் சவால் விடுகின்றன; நோய்களுக்கு எதிராக இந்த மருந்துகள் நடத்தும் தாக்குதலுக்கு அவை பெரும் தடையாக நிற்கின்றன; ஆண்டிபயாடிக் மருந்துக்கு எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொண்டு, பலத்த ஆதிக்கம் செலுத்துகின்றன.

இதனால் நிமோனியா, கொனோரியா, காலரா, வயிற்றுப்போக்கு, சிறுநீர்ப் பாதைத் தொற்று போன்ற சாதாரண நோய்களுக்குக் கொடுக்கப்படுகிற ஆண்டிபயாட்டிக்குகள்கூட செயல்திறனை இழந்து நிற்கின்றன. அற்புதங்கள் புரியும் ஆண்டிபயாட்டிக்குகளையே அழிக்கும் அளவுக்கு ‘கிருமிகளின் எதிர்ப்பு சக்தி’ (Antibiotic Resistance) நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது’ என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

காரணம் என்ன?

ஒரு நோய்க்குக் குறிப்பிட்ட காலத்துக்குக் கொடுக்கப்பட்ட ஆண்டிபயாடிக் மருந்தைப் பாதியில் நிறுத்தினால் அல்லது விட்டுவிட்டுச் சாப்பிட்டால், உடலில் அந்த நோயை உண்டாக்கிய எல்லாக் கிருமிகளும் சாகாமல் போகலாம்.

அப்போது அந்த மருந்தின் பிடியிலிருந்து தப்பிக்க, எஞ்சியுள்ள கிருமிகள் தடுப்பாற்றல் கொண்ட கிருமிகளாக உருமாறிவிடும். இவற்றை அழிக்க இன்னும் வீரியம் மிகுந்த ஆண்டிபயாடிக் மருந்துகள் தேவைப்படும். ஆனால், இவற்றின் பக்கவிளைவுகள் ஆபத்தானவையாக இருக்கும்.

எந்த மருந்தும் வேலை செய்யாத நிலைக்கு நாம் தள்ளப்பட Antibiotic Resistance ஒரு காரணமாக அமைந்து –இந்தியாவை அழிக்க காத்துகொண்டு இருக்கிறது
உதாரணத்திற்கு -மருந்துக்குக் கட்டுப்படாத காசநோய்

கடந்த ஒரு நூற்றாண்டாக மிரளவைத்துக் கொண்டிருக்கும் காசநோய், இதற்கு நல்ல உதாரணம். காசநோய் முற்றிலும் குணமடையக் குறைந்தது 6 மாதங்களுக்கு இடைவிடாமல் மருந்து சாப்பிட வேண்டும்.

ஆனால், மருந்து எடுத்துக்கொள்ள ஆரம்பித்த இரண்டு மாதங்களுக்குள் நோயின் அறிகுறிகள் மறைந்துவிடுவதால், நோய் குணமாகிவிட்டது என்று நம்பி பெரும்பாலோர் மருந்து சாப்பிடுவதைப் பாதியிலேயே நிறுத்திவிடுகிறார்கள். இதனால் காசநோய்க் கிருமிகள் அந்த மருந்துகளையே எதிர்த்துப் போராடும் திறனைப் பெற்றுவிடுகின்றன.

அதன் பிறகு ஏற்கெனவே கொடுத்துவந்த மருந்துகளால், இந்தக் கிருமிகளைக் கட்டுப்படுத்த முடியாது. இதன் விளைவாக, நோயின் தன்மை அதிகரித்து மருந்துக்குக் கட்டுப்படாத காசநோயாக (Multi Drug Resistance TB) அது உருமாறிவிடுகிறது. இதற்கு வழக்கமான 6 மாத சிகிச்சை போதாது. 2 வருடங்கள் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தியாவில் மட்டும் 70 லட்சத்துக்கு மேற்பட்ட காச நோயாளிகள் இந்த நிலைமையில் உள்ளனர்.


பாம்பை அடித்து பாதியில் விட்ட கதையாக –ஆண்டிபயாடிக் மருந்துகள் –


ஆண்டிபயாடிக் என்பது இரட்டை முனைக் கத்தி போன்றது. இதன் அளவு குறைந்தாலும் ஆபத்து; கூடினாலும் ஆபத்து. இதில் இரண்டாவது கருத்துக்குச் சரியான உதாரணம் இது: நம் நாட்டில் சாதாரணச் சளிக்கு வழக்கமாகப் பயன்படுத்தக்கூடிய அமாக்ஸிசிலின் மருந்து அதீதமாக (Over dose) பயன்படுத்தப்பட்ட காரணத்தால், அது பலன் தரும் திறனை இழந்துவிட்டது.

அதற்குப் பதிலாக அதைவிட வீரியம் நிறைந்த ஆண்டிபயாடிக்குகளைத்தான் அலோபதி மருத்துவம் இப்போது பயன்படுத்துகிறது. இவற்றின் விலையோ அதிகம். பக்கவிளைவுகளும் கூடுதல்.

அலட்சியம் வேண்டாம்!

ஆண்டிபயாடிக் விஷயத்தில் நாம் மிகவும் அலட்சியமாகவே இருக்கிறோம் என்பதை இந்தியப் பொதுச் சுகாதாரத் துறை இயக்குனரே ஒப்புக்கொண்டுள்ளார். ஆண்டிபயாடிக் சிகிச்சையை முறை தவறிப் பயன்படுத்தும்போது, எதிர்ப்பு சக்தி உடைய கிருமிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து, ஆண்டிபயாடிக் மருந்துகளையே பயனற்றவையாக ஆக்கிவிடும் ஆபத்து ஏற்படுகிறது.

இந்தியாவில் இந்த நிலைமை மிகவும் மோசம். சாதாரண வைரஸ் காய்ச்சல், சளி போன்றவற்றைக்கூடப் பல மருத்துவர்கள் வீரியம் மிகுந்த ஆண்டிபயாடிக் மாத்திரை, ஊசி மருந்து மூலம் குணப்படுத்த முற்படுகிறார்கள். உடனடியாக நோய் குணமாக வேண்டும் என்கிற நோக்கத்தில் நோயாளிகளும் இதுபோன்ற ஆண்டிபயாடிக் சிகிச்சையை விரும்புகிறார்கள். மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது லாபத்துக்காகச் சாதாரண நோய்களுக்குக்கூட அதிக வீரியமுள்ள ஆண்டிபயாட்டிக்குளை வலிந்து பரிந்துரைக்கின்றன.

நகரங்களில் தனியார் மருத்துவ வசதிகள் பெருகியிருப்பதும், கிராமங்களில் போலி மருத்துவர்கள் ஆதிக்கம் செலுத்துவதும் இந்தியாவில் அதிகமான ஆண்டிபயாடிக் பயன்பாட்டுக்குக் காரணமாக அமைகின்றன. இதனால் 50 சதவீத ஆண்டிபயாடிக் மருந்துகளை மருத்துவர்களும் நோயாளிகளும் அளவுக்கு மீறியோ, தேவையற்ற சூழலிலோ பயன்படுத்துகிறார்கள் என்கிறது இந்தியப் பொதுச் சுகாதாரத் துறை.

இந்திய நிலைமை

இந்தியாவில்தான் காலரா, டைஃபாய்டு, காசநோய் போன்ற தொற்றுநோய்களின் பாதிப்பு அதிகம். எனவே, தொற்றுநோய்களுக்கு எதிராகப் போராடும் ஆண்டிபயாடிக்குகளின் பயன்பாடும் மிக அதிகம். இப்போதுள்ள நிலைமையில் வழக்கமான ஆண்டிபயாடிக்குகளுக்கு தடுப்பாற்றலைக் கிருமிகள் பெற்றுவிட்டால், அந்த ஆண்டிபயாடிக்குகள் வேலை செய்யாமல் போகும்போது என்ன செய்வது?


1987-க்குப் பிறகு நம் நாட்டில் புதிய ஆண்டிபயாட்டிக் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. புதிய மருந்துகளுக்கு அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேல்நாடுகளைத்தான் நாம் நம்பி இருக்க வேண்டும். இறக்குமதி ஆகும் மருந்துகளின் விலை மிக அதிகம். இந்த நிலைமை நீடித்தால், புதிய ஆண்டிபயாடிக்குகள் இல்லாத ஒரு யுகத்தை நம்மால் சமாளிக்க முடியுமா என்பது கேள்விக்குறியே!

இந்த நிலைமை நீடித்தால், எந்த ஒரு மருந்துக்கும் கட்டுப்படாத நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அப்போது சாதாரண சளி, இருமல்கூட உயிரிழப்பில் முடியக்கூடும் என்று எச்சரிக்கிறது உலக சுகாதார ஆய்வு நிறுவனம்

இதற்கு யார் பொறுப்பு.?
சிறிய நோய்க்கும் மருத்துவர் இன்றி எடுக்கப்படும் ஆண்டிபயாடிக் மருந்துகள்

விலை உயர்ந்த ஆண்டிபயாடிக் மருந்தே நல்லது என்று –மருந்து கம்பெனியின் கை கூலியாக மாறிய சில போலி மருத்துவ தரகர்கள்

பாதியில் அவசரப்பட்டு நிறுத்தபடும் ஆன்டி பயாடிக்க்குகள்

இரண்டு அல்லது மூன்று வேலைக்கு மட்டும் மருந்தை கொடுத்து –நோயாளியை  திரும்ப வர சொல்லும் –இரண்டு வேலை GP மருத்துவர்கள் –நோயின் குறி குணம் மாறிய உடன் மருத்துவரை பார்க்காத அலட்சிய நோயாளிகள்

ஆராய்ச்சிக்கு உட்படாத இரு வேறு ஆன்டி பயாடிக் மருந்துகளின் சேர்ந்த  –ஒரே மருந்துகள்

மருந்து கட்டுப்பாடு துறைக்கு போதுமான அளவு –ஆட்கள் இல்லாத நிலை

போலி –பேராசை மருத்துவர்கள்


தீர்வு என்ன.?

ஐரோப்பா ,மற்றும் அமெரிக்க நாடு மற்றும் வளர்ந்த பல நாடுகளில் ஆன்டிபயாடிக்குக்கள் மிகவும் அவசர காலத்தில் மட்டுமே –தேவையை கருத்தில் கொண்டு அவசியம் கருதியே பயன் படுத்துகிறார்கள் –அதே போல சாதாரண தொற்றுக்கு ,தொற்று பயத்திற்கு உடனடியாக ஆண்டிபயாடிக் மருந்துகளை எடுப்பதை தவிர்த்தல் நல்லது.

உடலின் எதிர்ப்பு சக்தியை நம்பி இருக்க வேண்டும் –உடனடியாக ஆண்டிபயாடிக் மருந்தை ஆரம்பிக்க கூடாது

ஆண்டி-பயோடிக் என்பது பிரமாஸ்திரம். இது பாக்டீரியாக்களை நமது நோய் சக்தியை அழிகாத போது மட்டுமே பயன்படுத்தப்படல் வேண்டும்


நாம் என்ன செய்ய முடியும்.?

உங்களுக்கு இருமல், சளி, காயம், வயிற்று உபாதைகள் Amoxycillin, Cloxacillin, Tinidazole, Ampicillin, Levoflaxin etc., போன்ற மருந்துகள் எடுக்க வேண்டாம்.

இரண்டாவதாக உங்கள் மருத்துவர் உங்களுக்கு ஆண்டி-பயோடிக் பரிந்துரைத்தல் காலம் வரை நிச்சயமாக ஆண்டி-பயோடிக் எடுக்கப்பட வேண்டும். 3 நாட்களுக்கு பிறகு நீங்கள் நன்றாக உணர்கிறீர்கள் என்றாலும் கூட  நிச்சயமாக நிறுத்தாதீர்கள். நீங்கள் நோயின் குறிகுணத்தில் இருந்து மீண்டது போன்று  உணர்ந்தாலும் கூட முழு course மருந்தையும் எடுத்துகொள்ளுங்கள்.


ஆண்டி-பயோடிக் எதிர்ப்பின் விளைவுகள் என்ன.?

ஆண்டி-பயோடிக் தடுப்பு பாக்டீரியா காரணமாக, மக்கள் நுரையீரல் தொற்று, காசநோய், உட்புற தொற்றுக்கள், அறுவை சிகிச்சையின் போது தொற்று நோய்கள் போன்ற நோய்களால் பதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக, மக்கள் ஆபத்தான விகிதத்தில் இறந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு காரணம் இந்த ஆண்டி பயாடிக் செயல் இழப்பே

“Superbugs” உங்களையும், என்னையும் பாதிக்கலாம். ஆனால், அந்த தொற்றிலிருந்து நம்மை காப்பாற்ற எதுவும் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 60,௦௦௦ குழந்தைகளுக்கு இந்த “Superbugs” இடமிருந்து தொற்று ஏற்படுகின்றது.

இந்த சூப்பர் பக் என்னும் மரபியல் மாற்றத்தை அடைந்த கிருமிகளின் பல்கி பெருகுதல் –கால்நடைகளில் இருந்தும் ,மற்ற உயிரினத்தில் இருந்தும் –உடலின் எதிர்ப்பு ஆற்றலை அழித்து- சிறிய நோய்க்கே பலியாகிட காரணமாய் அமைகிறதே .


அரசாங்கம் என்ன செய்ய முடியும்.?

சரியாய் மருந்து சீட்டு இல்லாமல் விற்கப்படும் ஆண்டி-பயோடிக்கை தடை செய்ய வேண்டும் . அதில்  எந்த ஒரு Compromise-யும் செய்யக்ககூடாது.

ஆண்டி-பயோடிக்கை சட்ட விரோதமான மருந்துகள் என்று சொல்ல வேண்டும். ஆண்டி-பயோடிக்குகளை நம் இந்தியாவில் தடுக்க இதுவே ஒரே வழி,

மனிதர்களுக்கு ஆண்டி-பயோடிக்ஸ் பற்றி விழிப்புணர்வு தர வேண்டும்.

குறைந்தது GP என்னும் ஜெனெரல் ப்ராக்டிஷனர் பொது மருத்துவர்கள் –வெளி நோயாளிகளாக ஆண்டிபயாடிக் கொடுப்பதை சட்டம் இயற்றி தடுக்க வேண்டும் –உள் நோயாளிக்கே –அல்லது சரியான மருத்துவ வசதி உள்ள மருத்துவமனைக்கே ஆண்டிபயாடிக் மருந்தை பரிந்துரைக்கும் தகுதியை கொடுக்க வேண்டும்


நீங்கள் எப்படி உதவ முடியும்.?

 முற்றிலும் தேவையில்லை என்ற போதிலும் சிறிதும்   ஆண்டி-பயோடிக்கை எடுத்து கொள்ளாதே.

அன்றாட நோய்கள் பெரும்பாலும் ஆண்டி-பயோடிக் இல்லாமலே 2 முதல் 3 நாட்களில் குணமடையும், ஆதனால், ஆண்டி-பயோடிக்  அவசியமற்றது.

அவசிய இல்லாத நேரத்திலும் மற்றவர்களை ஆண்டி-பயோடிக் எடுங்கள் என்று வற்புறுத்த வேண்டாம்.

நீங்களும் தெரிந்துகொண்டு, மற்றவர்களுக்கும் தெரிவியுங்கள் மாற்றம் செய்யுங்கள்.

தேவை ஒருங்கிணைந்த மருத்துவம்!


எல்லா நோய்களுக்கும் அலோபதி சிகிச்சைதான் சிறந்தது என்பதில்லை. சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி உள்ளிட்ட மாற்று மருத்துவ முறைகளிலும் நோய் குணமாகும். வருங்காலத்தில் ஒருங்கிணைந்த மருத்துவ முறையால் மட்டுமே ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க முடியும். இதை மறந்தாலோ அல்லது மறுத்தாலோ சாதாரண நோய்களுக்குக்கூடப் பெரும் விலை கொடுக்க வேண்டிய சூழல் உருவாகும். கடந்த நூற்றாண்டின் முற்பகுதியைவிட மோசமான நிலைக்கு மனித குலம் தள்ளப்படும். இது, மனித குலத்துக்கு நுண்ணுயிரிகள் விடுக்கும் எச்சரிக்கை.
எதிர்ப்பு சக்தியை ஒருங்கிணைந்த மருத்துவத்தால் பெறுவோம்

ஒருங்கிணைந்த சிகிச்சை மற்றும் ஆலோசனைக்கு 
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
சென்னை     9043336000 (ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை –கீழ்கட்டளை சென்னை )


இந்த செய்தியை நம்மால் முடிந்தவரை பகிரவும்,Post Comment

0 comments:

கருத்துரையிடுக