வெள்ளி, மே 26, 2017

ஆயுர்வேதத்தில் அழகியல் (பாகம் -1 முடி வளர)

ஆயுர்வேதத்தில் அழகியல் -பாகம் 1 
(நீளமான அழகுடன் கூடிய தலைமுடியினை பெற)

டாக்டர்.அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.,MBA
டாக்டர்.ஜீவா .,BAMS


அகத்தின் அழகு முகத்தில் தெரியும்என்பார்கள் ஆனால், அம்முகத்தின் அழகிற்காக பல செயற்கை அழகு நிலையங்களை தேடி நாம் அனைவரும் ஓடிக்கொண்டிருக்கின்றோம்.

தலைமுடியில் சாயம் பூசுதல் (Hair Colouring), முடியினை நேராக்குதல் (Hair Straightening), புருவத்திற்கு (Eyebrow Threading), முகத்திற்கு (Facial, Face Bleach) கால்களுக்கு (Menicure & Pedicure) என தலை முடியிலிருந்து கால் நகங்கள் வரை செயற்கை ரசாயனங்களை பணம் குடுத்து உபயோகிக்கும் காலம் இது.

இதற்கு என்ன மாற்று எவ்வாறு இயற்கையான முறையில் முகம் (ம) உடல் அழகினை பேணிகாப்பது என்ற அனைவரது கேள்விக்கும் பதில் இதோ..


பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஆயுர்வேத ஆச்சார்யாக்களால் எழுதப்பட்ட அழகுடன் கூடிய ஆரோக்கிய வாழ்வியல் முறைகள் பற்றிய குறிப்பேடுகள் உங்களுக்காக...

நீளமான அழகுடன் கூடிய தலைமுடியினை பெற :-

ஆயுர்வேத மூலிகைகள் (பாவப்ரகாஷ நிகண்டு) :-
 •  தான்றிக்காய் 
 • அதிமதுரம்
 •  கார்போக்கரிசி
 •  சேராங்கொட்டை
 • குமதி
 •  நொச்சி
 •  குன்றில்மணி
 • அவுரி
 •  கரிசலாங்கன்னி
 •  செம்பருத்தி\
 •  எள்
 •  சுள்ளி 
 •  அகமை
 • வாழை
 • ஆட்டுப்பால்ஆயுர்வேத மருத்துகள் :-

 • ப்ருங்கராஜ தைலம்
 • கைய்யோன்பதி தைலம்
 •  நீலீப்ருங்காதி தைலம்
 •  பிருங்காமலக தைலம்
 •  தூர்வாதி கேர தைலம்
 • துர்துரபத்ராதி தைலம்
 • மாலதியாதி தைலம்
 •  குந்தலகாந்தி தைலம்
 • திரிபலா கேர தைலம்


ஆயுர்வேத சிகிச்சைகள் :-


 • சிரோ அப்யங்கம்
 •  சிரோ பிச்சு
 •  சிரோ தாரா
 • சிரோ வஸ்தி
 •  நஸ்யம்

குறிப்பு -

மேலே குறிப்பிட்டுள்ள  மருந்துகளும் ,சிகிச்சைகளும் ஒவ்வொரு தனி தனி மனிதருக்கும் அவர்களின் தேக ப்ரக்ருதிக்கு தக்காவாறு மாறுபடும் .அழகியல் நிலையத்தில் இந்த சிகிச்சைகளை செய்வது ஆபாத்தானது. 

சரியான மருந்தை எண்ணையை  தேர்ந்தெடுக்காமல் செய்யப்படும் சிகிச்சை நினைத்த பலனை தராது ..அதே சமயத்தில் மோசமான எதிர்விளைவுகளையும் உண்டு பண்ண வாய்ப்பு உள்ளது 

சுய சிகிச்சை ஆயுர்வேத அழகியல் சிகிச்சையில் ஆபத்தானது 


நமது ஆயுர்வேதம் ஆச்சார்யாக்களால் கூறப்பட்ட இயற்கை விதிமுறைகளை கண்டுக்கொள்ளாமல் செயற்கை முறை ரசாயணங்களை பயன்படுத்துவதால் ஆரோக்கியத்துடன் சேர்த்து ஆயுளையும் குறைத்துக் கொள்கின்றோம். தகுந்த ஆயுர்வேத மருத்துவர்களை தேர்ந்தெடுத்து ,தகுந்த ஆயுர்வேத மருத்துவமனையை தேர்ந்தெடுத்து இளமையான ஆரோக்கிய வாழ்வினை பெறுவீர்

அழகியல் சார்ந்த தீர்வுகள் ,முடி வளர ,முடி கொட்டாமல் இருக்க ,தலை முடி சார்ந்த அனைத்து பிரச்சனைக்கு மருத்துவ ஆலோசனை பெற


அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
சென்னை 9043336000 ( ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை கீழ்கட்டளை)


Post Comment

0 comments:

கருத்துரையிடுக