மூல நோய்க்கு ஆயுஷ் மருத்துவமே முழுமையான
நிவாரணம் தரும்
டாக்டர்.அ.முகமது சலீம்(cure
sure).,BAMS.,M.Sc.,MBA
டாக்டர்.ஜீவா .BAMS
நவீன
உணவு முறைகள் மற்றும்
வாழ்க்கை முறைகளின் காரணமாக இன்று
பத்தில் 5 பேர் மூல
நோயினால் பாதிக்கப்படுகின்றனர் . பசியின்மை, மலம் கழிப்பதில் கடினம்,மலச்சிக்கல் என சிறிய தொந்தரவோடு ஆரம்பிக்கும் இம்மூல நோயானது இறுதியில்
அறுவை சிகிக்சையில் முடிகிறது.
இக்காலத்தில் உட்கார்ந்தே வேலை
செய்யும் ஐடீஐ -ஐ கம்பெனியில் வேலைசெய்பவர்கள் முதல் பேருந்து ஓட்டுபவர்கள்,தையல்காரர்கள், அனைவரையும்
இம்மூல நோய் விட்டு வைப்பது
இல்லை.
ஆசன வாய் பகுதியில் ஏற்படுகிற பிரச்சனைகள்
எத்தனை வகைகள் ??
ஆசன வாய் பகுதியில் ஏற்படும் எல்லா
பிரச்சனைகளும் மூலம் என்ற நோயோடு இருக்க வேண்டிய அவசியம் இல்லை ..Fissure in ano
,Fistula ,Anal Tag , sentinel pile mass,Bleeding
Piles ,Non Bleeding piles , hemorrhoids-first
,second ,third degree -3’O clock, 7 ‘ O
clock .11 ‘O clock position piles இன்னும் பல பல வெவ்வேறு வகையான பிரச்சனைகள் ஆசன வாய்
பகுதியில் ஏற்பட வாய்ப்புள்ளது
மூல நோயினால்
ஏற்படும் தொந்தரவுகள் என்ன ?
- மலத்துவாரத்தின் உட்புறமோ அல்லது வெளிப்புறமோ சதை போன்று வளர்ந்து காணப்படும்.
- மலம் கழிப்பதற்க்கு முன்பு அல்லது மலம் கழித்த பின் ,மலத்தோடு சேர்ந்து மலத்துவாரத்தில் இருந்து இரத்தம் வெளியேறுதல்.
- மலத்துவாரத்தில் வலி, எரிச்சல்,காந்தல் மற்றும் வறட்சி
- பசியின்மை
- இறுகிய மலம் கழித்தல் –மலச்சிக்கல்
- அடிவயிறு வலி ,சோர்வு ,கண் எரிச்சல் ,கோவம்
இந்தநோய் வருவதற்கான காரணங்கள் என்ன ?
- · அதிக காரம் சேர்ப்பது,பேக்கரி உணவுகள் உட்கொள்வது.
- · அதிக நேர விரதம்.
- · பொறித்த உணவுகள் அதிகம் சேர்ப்பது.
- · அதிக நேர வாகன பயணம்.
- · அதிக நேரம் உட்கார்ந்திருத்தல்.
- · அதிக நேர கடின உடற்பயிற்சி மற்றும் வெயிலில் வேலை பார்ப்பது.
- மூல நோயினை கட்டுப்படுத்தும் உணவு முறைகள்
1) கடுக்காய் பொடியோடு வெல்லம் சேர்த்து உணவுக்கு முன் இருவேளை
உட்கொள்ள வேண்டும்.
2) சிவதை
பொடியோடு திரிபலா (நெல்லிக்காய்,
கடுக்காய், தான்ரிக்காய்) கஷாயம் சேர்த்து
கொடுக்க வேண்டும்
3) குப்பை மேனி
உப்பு –வேப்பெண்ணையில் கலந்து தர வேண்டும் .
4) மூல நோய்க்கு மோர் ஒரு சிறந்த உணவாகும்.
5) நார்ச்சத்துள்ள உணவுவகைகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
6) உடல் உஷ்ணமாக்கும் கோழி கறி,பச்சை மிளாகாய்
,அதிக காரம் ,புரோட்டா ,இரவு கண் விழிப்பு போன்றவற்றை முற்றிலும் தவிர்த்தல் நலம்
மூல நோய்க்கான ஆயுர்வேத மூலிகைகள்
1)எள்
2)சேராங்கொட்டை
3)நாககேசரம்
4)கடுக்காய்
5)சிவதை
6)கொடுவேலி
7) நெல்லிக்காய்
8)மூள்ளங்கி
9)கர்ணக்கிழங்கு
10)திராட்சை
11)கொன்றை
12)பார்லி
13)கோதுமை
14)மோர்
15)வெள்ளரிக்காய்
16)புடலங்காய்
17)ஆட்டுப்பால்
மூல நோய்க்கான
ஆயுர்வேத மருந்துகள்
1) காங்காயன வடி
2) சூரண மோதகம்
3) பல்லாதக
லேகியம்
4) அபயாரிஷ்டம்
5) திராக் ஷாசவம்
6) அவிபதிகர
சூரணம்
7) அர்ஷகுடார
ரஸ்
8) சவ்யாதி
க்ருதம்
9) தக்ரா
அரிஷ்டம்
10) சிறு வில்வாதி
கஷாயம்
11) திரிபலா குக்குலு
12) துராலபாரிஸ்டம்
13)சித்ரக லேகியம்
14) கோமூத்ரஹரிதகி லேகியம் .
15) பகுஷாலகுல லேகியம்
அறுவை சிகிக்சை
இல்லாமல் மூல நோயினை
முழுமையாக குணப்படுத்தும் ஆயுர்வேத
சிகிக்சை முறைகள் :-
1) அவகாஹ
ஸ்வேதம் .
2) க்ஷார லேபம்.
3) க்ஷார சூத்ரம்
4) வஸ்தி.
5) அட்டை விடும் சிகிச்சை.
குறிப்பு -
பிஸ்வாஸ் போன்ற வட இந்தியாவில் இருந்து வரும் எந்த ஒரு
கல்வி தகுதியில் இல்லாத ,மஞ்சள் நோட்டீஸ் போலி மருத்துவர்களிடம் சென்று உங்கள்
பணத்தையும் ,உடலையும் அழித்து கொள்ளாதீர்கள் .
சரியான ஆயுர்வேத
மருத்துவர்களை தேர்ந்தெடுத்து
சிறந்த ஆயுர்வேத சிகிசைகளின்
மூலம் மூலநோயிலிருந்து முழுமையாக விடுபடுங்கள் . மூலம் மற்றும் ஆசனவாய் சார்ந்த நோய்களில்
இருந்து மிக குணமாக சிறந்த ஆயுஷ் மருத்துவ ஆலோசனைக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை –
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
சென்னை 9043336000 ( ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை –கீழ்கட்டளை)
0 comments:
கருத்துரையிடுக