திங்கள், மே 29, 2017

ஆயுர்வேதத்தில் அழகியல் (பாகம் -4) உடல் எடை கூட

ஆயுர்வேதத்தில் அழகியல் (பாகம் -4)

உடல் எடை அழகுடன் ஆரோக்யமாய் கூடிட


டாக்டர்.அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.,MBA
டாக்டர்.ஜீவா .,BAMS


மெலிந்த உடலுக்கு பல மருத்துவ காரணங்கள் உள்ளது ..முகம் எவ்வளவு தான் அழகாக இருந்தாலும்  உடல் மிகவும் மெலிந்து இருந்தால் அழகாய் தோன்றாது


ஆயுர்வேதத்தில் ப்ரும்ஹன சிகிச்சை என்று மெலிந்தவர்களை குண்டாக்கிட சிறப்பு சிகிச்சைகள் ,மருந்துகள்  பற்றியும் –உடல் எடை போட செய்ய வேண்டியவை ,செய்யக்கூடாதவை பற்றியும் விரிவாக எடுத்து கூறப்பட்டுள்ளது. ஜிம்முக்கு போகிறவர்கள் சாப்பிடுகிற புரத மாவு போல் அல்லாது முழு உணவு திட்டத்தையும் ஆயுர்வேதம் அலசி ஆராய்கிறது .
உடல் பருமனாக வேண்டுமானால் முதலில் உடல் சூடு அதிகம் இல்லாமல் இருக்க வேண்டும் . ஜீரண சக்தி சரியாக இருக்க வேண்டும். எழு தாதுக்கள் சீராக இருக்க வேண்டும் .அமைதியான மனம் வேண்டும் .பால்முதுக்கன் கிழங்கு, நிலப்பனைக் கிழங்கு ,நிலப் பூசணி, பாதாம் பருப்பு, சாரைப் பருப்பு, அக்ரூட் பருப்பு (Walnut), பிஸ்தா பருப்பு, அத்திப் பழம், சாலாமிசிரி (Orchismascula), வெள்ளரி விதை, பூசணி விதை, முருங்கை விதை, அமுக்குரா, பருத்திப் பால், நெல்லிக் கனி, பேரீச்சம்பழம், முருங்கைப் பூ, முருங்கை பிசின், சர்க்கரை, பசும்பால் ஆகியவை உடல் போஷாக்கு தருபவை. கறுப்பு எள், வேர்க்கடலைப் பருப்பு, கறுப்பு உளுந்து, உலர்ந்த திராட்சை, பனைவெல்லம் போன்றவையும் பலன் தரலாம். மாம்சம் மாம்சேன வர்ததே என்கிறது ஆயுர்வேதம் –அதாவது மாம்ச உணவுகள் உடல் மாமிசத்தை கூட்டும்.எனவே Non Veg உணவுகள் –மாம்ச சூப்புகள் நல்ல பலன் தரும் ,இயற்கை முறையில் உடல் எடையை அதிகரிக்க

ஆயுர்வேத மூலிகைகள் :-


 • பாலை 
 • பால்பெருக்கி
 • அமுக்கரா
 • அம்மான்பச்சரிசி
 • சிற்றாமுட்டி
 • வெண்பூசணி 
 • காட்டு பருத்தி
 • தண்ணீர்விட்டான் கிழங்கு
 • அதிமதுரம்ஆயுர்வேத மருந்துகள் :-


 • அஷ்வகந்த லேகியம்
 • கூஷ்மாண்மட அவலேகியம்
 • விதார்யாதி லேகியம்
 • ச்யவனப்ராஷ லேகியம்
 • வசந்த குசுமாகர ரஸ்
 • அஷ்வகந்த சூர்ணம்
 • நரசிம்ஹா ரசாயனம் 
 • ப்ருஹத் சாகல்யாதி கிருதம் ஆயுர்வேத சிகிச்சைகள் :-


 • o அப்யங்கம்
 • o நவரக்கிழி
 • o ப்ரும்ஹன வஸ்திகுறுக்கு வழியில் குண்டாக முயல கூடாது ..உடல் எடை குறைய என்ன காரணம் என்று தெரிந்தே தக்க சிகிச்சை எடுக்க வேண்டும் .

ப்ரமேஹம் என்கிற சர்க்கரை நோயில் உடல் எடை குறையும்- அதற்க்கு வேறு வகையான ஆயுர்வேத சிகிச்சைகள் உள்ளது

ராஜயக்ஷ்மா என்கிற உடல் தேய்வு நோயிலும் உடல் எடை குறையும் –அதற்க்கு ஆயுர்வேதத்தில் அற்புதமான சிகிச்சைகள உண்டு .ப்ரைமரி காம்ளெக்ஸ் நோயால் உடல் எடை கூடாத குழந்தைகளுக்கு ஆயுர்வேதத்தில் சிறப்பு சிகிச்சைகள் உள்ளது

கிரஹனி  என்கிற கிராணி கழிச்சல் நோயிலும் உடல் எடை கூடாது- அதற்கு ஆயுர்வேதத்தில் பல சிகிச்சைகள் உள்ளது

ஹைப்பர் தைராய்ட் நோயால் உடல் எடை குறைந்தவரை குண்டாக்க ஆயுஷ் சிகிச்சையால் முடியும்

கடைகளில் விற்கபடுகிற கண்ட கண்ட ப்ரோட்டின் மாவுக்களை தரமானது என்று சாப்பிட்டு உடலுக்கு கேடு விளைவித்து கொள்ளாதீர்கள். உடல் எடை கூட எக்காரணத்தை கொண்டும் ஸ்டீராய்ட் கலந்த மருந்துகளை எடுத்துகொள்ளாதீர்கள்.

ப்ரும்ஹன சிகிச்சை எடுத்து உடல் எடை கூட தக்க சித்த ஆயுர்வேத மருத்துவரை ஆலோசனை பெறுங்கள் . சிறந்த ஆயுர்வேத சித்த ஆலோசனைக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை –
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
சென்னை 9043336000 ( ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை –கீழ்கட்டளை)

Post Comment

0 comments:

கருத்துரையிடுக