தேவைக்கு அதிகமான வைட்டமின் மற்றும் சத்துக்களால் மிக பெரிய ஆபத்து (Over & Excess Nutrition Is A Big Problem )
டாக்டர்.அ.முகமது சலீம் (cure
sure).,BAMS.,M.Sc.,MBA.,
டாக்டர் .வர்தினி .,BHMS.,
“அளவுக்கு
மீறினால் அமிழ்தமும் நஞ்சு” அழகான பொன்மொழி.
ஆனால் நாம் தான் இதை வாழ்வினில் கடைபிடிக்க மறந்து விடுகிறோம். இது அனைத்திற்கும் பொருந்தும்.
நமது
குழந்தைகளுக்கு அளவுக்கு அதிகமான சத்துக்கள் Nutrition-யை கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு Nutrition
பாதிப்பு ஏற்படக்கூடும்.
பெரும்பாலான பெற்றோர்கள் தன் பிள்ளைகளுக்கு அதிகமான ஊட்டச்சத்து கொடுக்க வேண்டும்
என்று நினைகிறார்களே தவிர அந்த ஊட்டச்சத்து –குழந்தைக்கு நல்லதா ? அதிகமாக தருகிறோமோ
? அந்த சத்து கொழுப்பில் கரையக்கூடியாதா,ல் நீரில் கரையக்கூடியாதா என்று அறிய முயற்சிப்பதில்லை. இன்னும் சிலர்,
தன் குழந்தைகளுக்கு
அதிகமாக Vitamins வேண்டும் என்று Vitamins-களை-மாத்திரைகளாக,டானிக்குகளாக ,ஹெல்த்
ட்ரின்க் வடிவில் அதிகமாக கொடுக்கிறார்கள்.
சிலர் Calcium அதிகமாக கொடுத்தால் தன் பிள்ளைகள் உயரமாக
வளருவார்கள் என்று Calcium-ஆக தருகிறார்கள்.
இதே போல் Protein வளர்ச்சிக்கு உதவும் என்று அதிகமும் ,பருமன் ஆகிவிடுவர்களோ என்று Carbohydrates-ஐ தவிர்த்து விடுகிறார்கள். ஆனால் இது
முற்றிலும் தவறு.
ஒரு குழந்தைக்கு அனைத்து விதமான ஊட்டச்சத்துகளும் தேவை. அதை
சரியான அளவில் எடுத்தால் ஆரோக்கியமான வாழ்வு வாழலாம்.
Balanced Diet என்பது carbohydrate-கள், கொழுப்புகள், புரதங்கள்,
வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க
தேவையான நீர் ஆகியவற்றின் சரியான விகிதங்களை கொண்ட உணவே நாம் குழந்தைகளுக்கு
அவசியமானது.
அதை தவிர்த்து தேவைக்கு அதிகமாக ஏதேனும் ஒன்றை
மட்டும் அதிகமாக கொடுத்தால் மிக மிக ஆபத்தே.
மருத்துவரின்
ஆலோசனையின்றி வியாபார நோக்கத்துடன் விற்கப்படும் வைட்டமின், Calcium
Supplements-ஐ பயன்படுத்துவது உடல்
நலதிற்கு கேடு.
அதிகமான வைடமின்களால் ஏற்படும் பாதிப்புகள் :-
அதிகமான
ஊட்டச்சத்து அதிகமான எடைக்கு வழிவகுக்கிறது.
அதிகமாக Vitamin-A
(Retinol) எடுப்பதால். நமது தோல்கள்
சீக்கிரமாக உலர்ந்து போகக்கூடும், தவிர அரிப்பும்,
அதிகரிக்கும் மேலும்
அடிக்கடி தலைவலி, குமட்டல் ,
தலைசுற்றல் வரலாம்.
அதிகமான Vitamin-B
(Thiamin) எடுப்பதால் அது நமது உடலை
நச்சுத்தன்மையாக மாற்றும். அதனால் ஒவ்வாமை, நரம்புத்தளர்ச்சி போன்றவை ஏற்படலாம்.
அதிகமாக Vitamin-B2
(Riboflavin) எடுப்பதால் நமக்கு
அரிப்பும், உணர்வின்மையும்
ஏற்படக்கூடும்.
Vitamin-B6 (Pyridoxine) அதிக அளவு எடுப்பதால் மைய மற்றும் புற நரம்பு மண்டலத்திற்கு சேதம்
விளைவிக்கும், குறிப்பாக தொடு
உணர்ச்சி பாதிக்கப்படும்.
தேவைக்கு அதிகமான Vitamin-C (Ascorbic Acid) எடுப்பதால் வயிற்றுப்போக்கு ஏற்படும் வயிற்று பிரச்சனைகளும் பல ஏற்படக்கூடும்.
அதிகமான Vitamin-D
நமது எலும்புகளும்,
பற்களுக்கும் உறுதியின்றி
இருக்கும், மேலும் நமது
சிறுநீரகத்திலும் கற்கள் போன்றவை வளரும்.
இது அளவுக்கு மீறினால் நச்சு தன்மையாக
மாறும், மேலும் அடிக்கடி
உடல் சோர்வு, கண்களில் அரிப்பு,
வயிற்றுப்போக்கு போன்றவை
ஏற்படலாம்.
Vitamin-E நமது உடலுக்கு
மிகவும் நல்லது, அது அதிகமானால்
வயிற்று பிரச்சனைகள் மற்றும் வயிற்றுப்போக்கு உண்டாகும்.
கல்லீரல்
பிரச்சனை இருப்பவர்கள் Vitamin-K அதிகமாக எடுப்பது
மிகவும் ஆபத்து.
அதிகமான Calcium
கற்களை உண்டாக்கும்.
குறிப்பாக சிறுநீரக, பித்தப்பையில்
கற்கள் ஏற்படக்கூடும்.
மிகவும் அதிகமான Iron
எடுப்பதால், அடிக்கடி உடல் உபாதைகள் ,மலச்சிக்கல் ஏற்படக்கூடும்.
உப்பு அதிகமாக
எடுப்பதன் மூலம் Hypernatremia, நீர்ப்போக்கு,
இரத்த அழுத்தம் போன்றவை
உண்டாகும்.
அதிகமான Magnesium
நமக்கு Parkinsonism
நோய்க்கு வழிவகுக்கிறது.
Selenium அதிகமாக
எடுப்பதால் நச்சு தன்மை உண்டாகும்.
ஆக, இன்றிலிருந்து கடைகளில் கிடைக்கும் Nutritions
Supplements-யை மருத்துவரின்
பரிந்துரைபடி இல்லாமல் மிக பெரிய பாதிப்புகள் உண்டாகும் .
மருத்துவரே
பரிந்துரைத்தாலும் குறுகிய காலத்திற்கே பயனபடுத்தலாம் .அதிகமாக பயன்படுத்தாமல்
அனைத்து வகையான ஊட்டச்சத்துகளும் அளவான முறையில் உட்கொண்டு ஆரோக்கியமான வாழ்வினை
வாழலாம். ஊட்ட சத்துக்கள் எப்போதும் இயற்கையாக இருக்க வேண்டும். மாத்திரை மருந்து
வடிவில் இருப்பது நல்லதல்ல .
மாடு என்ன
கால்சியம் மாத்திரை சாப்பிட்டு பால் கொடுக்கிறது என்ற சிந்தனைக்கு விட்டவனாக ..
டிவியில்
காட்டும் எந்த சத்து பொருளும் –சத்து மாவுக்களும் –அந்த வைட்டமின் இந்த வைட்டமின்
கலந்துள்ளது என்று மாற்றி மாற்றி பொய் சொல்வதை நம்பாமல் –சிறு தானியமே பெரு வாழ்வு
என்று விளம்பர மாயையை தகர்த்தெறிய உறுதி கொண்டு –
இயற்கையான
சிகிச்சை மற்றும் ஆயுஷ் மருத்துவ ஆலோசனைக்கு
அல் ஷிபா ஆயுஷ்
மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி
9042225999
ராஜபாளையம் 9043336888
சென்னை 9043336000( ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் ஆயுஷ்
மருத்துவமனை –கீழ்கட்டளை )
0 comments:
கருத்துரையிடுக