உடல் சூடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உடல் சூடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜூலை 14, 2021

உடல் சூடா ? இருக்கவே இருக்கு ஆயுர்வேத பானீயம் | Body heat reducing Ayurv...


உடல் உஷ்ணம் அல்லது உடல் தாகம் அதிகமா ? 

இந்த கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்ள வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய பானீயம். 

இது எளிதில் வீட்டில் தயாரிக்க கூடியது. 

மேலும் இவற்றில் இருக்கும் ஆறு வகை மூலிகைகளும் எளிதில் கிடைக்கக் கூடியது. 

தேவையானபொருட்கள்: 

1. கோரைக்கிழங்கு 
2. சந்தனம் 

இன்னும் 4 மூலிகை பொருட்கள் ( முழுமையான வீடியா எல்லா  6 மூலிகைகளும் தெரிந்து கொள்ள முடியும் )

  64 பங்கு தண்ணீர் ஊற்றி அதை அரையளவாக வற்ற வைக்க வேண்டும்.
சிறியவர் முதல் பெரியவர் வரை அருந்தக் கூடியது. 

மேலும் இது செரிமான தூண்டியாகவும், செரிமான பெருக்கியாகவும் செயல்படுகிறது. 

25ml முதல் 50ml வரை இரண்டு வேளைகளிலும் குடிக்கலாம். 

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பருக கூடியது.


  இங்கு குறிப்பிட்டு இருக்கும் இம்மருத்துவ பதிவு அறிவு நோக்கத்திற்காக மட்டுமே. 

தக்க ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி இதை எடுக்க நல்ல பலன் தரும்.



#உடலசூட்டைக்குறைக்க #Bodyheatreducingdrink #ஆயுர்வேதபாணம்  #ayurvedadrinks #ஆரோக்கியமும்ஆயுர்வேதமும்  #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம்  #அல்ஷிபாஆயுஷ்மருத்துவமனை #Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips  #bestayurvedadr #tipsintamilhealth  #subscribeourchannelalshifayush

Post Comment

ஞாயிறு, ஜூலை 22, 2012

அதிக இரத்தபோக்கை சரிசெய்து கருப்பைக்கு வலு சேர்க்கும் அசோகாதிவடீ-Ashokadi vati


அதிக இரத்தபோக்கை சரிசெய்து கருப்பைக்கு வலு சேர்க்கும்
அசோகாதிவடீ-Ashokadi vati
                                                                                              
தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            பொடித்த அசோகப்பட்டை – அசோகத்வக் 500 கிராம்
2.            தண்ணீர் – ஜல                   8.000 லிட்டர்

இவைகளை நன்கு கொதிக்க வைத்து ஒரு லிட்டர் ஆகக் குறுக்கி வடிகட்டி மறுபடியும் வடிகட்டிய அக்கஷாயத்தைக் கொதிக்க வைத்து நன்கு கெட்டியாகும் வரை குறுக்கி அத்துடன் பொடித்துச் சலித்த அசோகப்பட்டைச் சூர்ணம் 60 கிராம் சேர்த்து நன்கு கலக்கிக் கிளறவும். இது அசோக ரஸக்ரியை எனப்படும்.

1.            அசோகப்பட்டை ரசக்கிரியை – அசோகரஸக்ரியா    100 கிராம்
2.            அன்னபேதிச் செந்தூரம் – காஸீஸ பஸ்ம                25           “
இவைகளைக் கல்வத்திலிட்டு அசோகப்பட்டைக் கஷாயம் (அசோகத்வக் கஷாய) விட்டு நன்கு அரைத்துப் பதத்தில் 500 மில்லி கிராம் எடை உள்ள மாத்திரைகளாக்கவும்.

                               
 அளவும் அனுபானமும்:      

ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வீதம் இரண்டு முதல் மூன்று வேளைகள் தேன் அல்லது தண்ணீருடன்.

                                 
தீரும் நோய்கள்:  



பெரும்பாடு (அஸ்ரிக்தர), சூதகக் கட்டு (நஷ்டார்த்தவ (அ)ஆர்த்தவரோத), கருப்பை / பெண்குறி வலி (யோனி சூல), சூதக வலி (ஆர்த்தவசூல (அ) ரஜக்ரிச்சர), கருப்பை சார்ந்த நோய்கள் (கர்பாஸய ரோக).

                
 மேற்கூறிய நிலைகளில் இது கருவேப்பிலை ஈர்க்கு, வேப்பிலை ஈர்க்கு, மிளகாய் விதை, நீர்முள்ளி விதை, சுக்கு, கொத்தமல்லி ஆகியவற்றின் கஷாயத்துடன் தரப்படுவது வழக்கம்.

              
  இது கருப்பைக்கு வலுவைத் தரக்கூடியது.


தெரிந்து கொள்ள வேண்டியவை

  1. அதிக உதிரப்போக்கை இந்த மருந்து நன்றாக வேலை செய்யும்
  2. மாதவிலக்கில் ஏற்படும் வலிக்கு சப்தசார கஷாயத்துடன் மூன்று மாத விலக்கு வரை சாப்பிட நன்கு பலன் தரும்
  3. குறிப்பு -அசோகபட்டை என்று இப்போது கிடைப்பது அசோகா பட்டை இல்லை ..நெட்டிலிங்கம் என்னும் மரத்தின் பட்டை தான் ...

Post Comment

புதன், டிசம்பர் 21, 2011

முடி கொட்டுவதை நிறுத்தி -முடி அடர்த்தியாக வளர -திரிபலாதி தைலம்-Triphladhi thailam


முடி கொட்டுவதை நிறுத்தி -முடி அடர்த்தியாக வளர -திரிபலாதி தைலம்-Triphladhi thailam
  (ref-ஸஹஸ்ரயோகம் - தைலப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:




1.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) – ஹரீதகீ பலத்வக்       90 கிராம்
2.            தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) – பிபீதகீ பலத்வக்     90           “
3.            நெல்லிமுள்ளி – ஆமலகீ பலத்வக்                 90           “
4.            சீந்தில்கொடி – குடூசி                             90           “
5.            தாழம் விழுது – கேதகீ மூல                      90           “
6.            வேங்கை – அஸன                               90           “
7.            சித்தாமுட்டி வேர் – பலாமூல                          90           “
8.            ஆமணக்கு வேர் – எரண்ட மூல                   90           “
9.            முடக்கத்தான் வேர் – இந்த்ரவல்லி                 90           “
10.          தண்ணீர் – ஜல                                12.800 லிட்டர்

இவைகளைக் கொதிக்கவைத்து 3.200 லிட்டர் ஆகக் குறுக்கி வடிகட்டி அத்துடன்

1.            நல்லெண்ணெய் – திலதைல            800 கிராம்
2.            கரிசாலைச்சாறு – ப்ருங்கராஜ ஸ்வரஸ  800         “
3.            நெல்லிக்காய்ச்சாறு – ஆமலகீ ரஸ      800         “
4.            பசுவின் பால் – கோக்ஷீர               1.600 கிலோ கிராம்

இவைகளைச் சேர்த்து அதில்

1.            கோஷ்டம் – கோஷ்ட                  6.750 கிராம்
2.            அதிமதுரம் – யஷ்டீ                    6.750     “
3.            பதிமுகம் – பத்மக                     6.750     “
4.            விளாமிச்ச வேர் – உசீர              6.750     “
5.            சந்தனம் – சந்தன                     6.750     “
6.            கோரைக்கிழங்கு – முஸ்தா             6.750     “
7.            ஏலக்காய் – ஏலா                     6.750     “
8.            இலவங்கப்பத்திரி – லவங்கபத்ர         6.750     “
9.            சடாமாஞ்சில் – ஜடாமாம்ஸீ            6.750     “
10.          அமுக்கராக்கிழங்கு – அஸ்வகந்தா       6.750     “
11.          சித்தாமுட்டிவேர் – பலாமூல           6.750     “
12.          சீந்தில்கொடி – குடூசி                   6.750     “
13.          நன்னாரி – ஸாரிவா                    6.750     “
14.          தேவதாரு – தேவதாரு                 6.750     “
15.          இலவங்கம் – லவங்க                  6.750     “
16.          கிரந்தி தகரம் – தகர                   6.750     “
17.          கிச்சிலிக்கிழங்கு – ஸட்டீ               6.750     “
18.          நீல ஆம்பல் கிழங்கு மற்றும் 
இது போன்ற கிழங்குகள் –     பஞ்சகமலமூல         6.750     “
19.          அஞ்சனக்கல் – அஞ்ஜன                6.750     “
20.          அவுரிவேர் – நீலீமூல                  6.750     “

இவைகளை அஞ்சனக்கல் நீங்கலாக அரைத்துக் கல்கமாகச் சேர்த்துக் காய்ச்சி மத்யம பாகத்தில் இறக்கி வடிகட்டவும். அஞ்சனக்கல்லைப் பொடித்துப் பாத்திர பாகமாகப் போட்டு பத்திரப்படுத்தவும்.

குறிப்பு:     

முடக்கத்தானைக் கஷாயத்தில் உபயோகிப்பதற்கு பதிலாக அதன் பசுமையான சாறு 800 கிராம் சேர்ப்பது சம்பிரதாயம்.


பயன் படுத்தும் முறை:           
  
மேற்பூச்சாக (அப்யங்க) வெளி உபயோகத்திற்கு மட்டும்.

தீரும் நோய்கள்: 


 நரை (காலித்ய), வழுக்கை (பாலித்ய), முடியுதிரல் (அ) கொட்டுதல் (கேஸஸாத), ஜலதோஷம் (ப்ரதிஸ்யாய), பீனிசம் (பீனஸ), தலைவலி (சிரோருஜா), தலை நோய்கள் (சிரோரோக), கண்நோய்கள் (நேத்ர ரோக) மற்றும் கழுத்திற்கு மேலுள்ள உறுப்பு நோய்கள் (ஊர்த்வ ஜத்ருகாத ரோக).

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. முடி வளர -முடி அடர்த்தியாக வளர -இந்த தைலம் நன்றாக உதவும்
  2. உஷ்ண உடம்பாய் இருந்தாலும் -அடிக்கடி சளி ஜலதோஷம் பிடிக்கும் உடம்பாய் இருந்தாலும் -கவலை இன்றி பயம் இன்றி தேய்க்கலாம் ..
  3. குளிர்ச்சி தைலம் என்றாலும் இந்த தைலத்தால் சளி பிடிக்காது
  4. திரிபலா தைலம் -கண்களுக்கு ஒளி கூட்டும் -கண்களுக்கு நல்லது
  5. மண்டை பீனசதில் வேலை செய்யும் மருந்து -தலை முடி வளர செய்வதில் -ஆச்சிர்யம் ஆனால் உண்மை
  6. எனக்கு தெரிந்து இந்த தைலம் -ஏறு நெற்றி உள்ள வழுக்கை தடுப்பதில் நல்ல பலன் தரும்


Post Comment

செவ்வாய், டிசம்பர் 13, 2011

அதிசயம் -வழுக்கையில் முடி வளர -ஆயுர்வேத தைலம் -நீலிபிருங்காதி தைலம் Neeli brungadhi thailam


அதிசயம் -வழுக்கையில் முடி வளர -ஆயுர்வேத தைலம் -நீலிபிருங்காதி தைலம் Neeli brungadhi thailam
 (ref-ஸஹஸ்ரயோகம் - தைலப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            அவுரிச்சாறு – நீலிஸ்வரஸ                  800 கிராம்
2.            கரிசாலைச்சாறு – ப்ருங்கராஜஸ்வரஸ        800         “
3.            முடக்கத்தான் சாறு – இந்த்ரவல்லீரஸ        800         “
4.            நெல்லிக்காய்ச்சாறு – ஆமலகீரஸ            800         “
5.            வெள்ளாட்டின் பால் – அஜக்ஷீர               800         “
6.            தேங்காய்ப்பால் – நாரிகேளக்ஷீர              800         “
7.            எருமைப்பால் – மகிஷக்ஷீர                  800         “
8.            பசுவின் பால் – கோக்ஷீர                     800         “
9.            நல்லெண்ணெய் – திலதைல                 800         “

இவைகளை ஒன்று சேர்த்து அத்துடன்

1.            அதிமதுரம் – யஷ்டீ              35 கிராம்
2.            குன்றிமணி (குண்டுமணி) – குஞ்ஜா     35           “

இவைகளை மேலே கூறிய பால் வகைகளில் சிறிதுவிட்டு அரைத்துக் கல்கமாகச் சேர்த்துக் காய்ச்சி மத்யம பாகத்தில் இறக்கி வடிக்கட்டாவும். பின்னத் இறுதியாக அஞ்சனக்கல் (அஞ்ஜன) 35 கிராம் பொடித்துப் பாத்திர பாகமாக போட்டுக் கலக்கி பத்திரப்படுத்தவும்.

குறிப்பு:    சம்பிரதாயத்தில் அஞ்சனக்கல் ¼ பங்கு உபயோகிக்கப்படுகிறது.


பயன்படுத்தும் முறை:       

தலைக்குத் தேய்க்கும் படியான (சிரோப்யங்க) வெளி உபயோகத்திற்கு மட்டும்.


தீரும் நோய்கள்: 



நரை (காலித்ய), வழுக்கை (பாலித), முடியுதிரல் (கேஸபாத), முடிவளர்ச்சி குன்றல், முடியுடர்த்தியின்மை, கண்ணெரிச்சல் (நேத்ரதாஹ), சூடு, தொடர்ந்து உபயோகிக்க உடல், முக்கியமாகக் கண் குளிரும். ஓரளவுக்கு முடியும் கருமையடையும், தலைமுடித் தைலமாக உபயோகிக்கப்படுகிறது.

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. வழுக்கை வராமல் தடுக்கும்
  2. இளநரை போக்கும்
  3. முடியின் வேருக்கு ஆற்றல் தரும்
  4. முடிக்கு போஷாக்கு தரும்
  5. பல கம்பெனிகள் தங்களது பிரான்ட் நேமுடன் இந்த தைலம் தயாரிக்கிறார்கள் -ஆனால் அதில் உள்ள பார்முலாவே வேறு ..பல பொய்யான கம்பெனிகள் நீலி பிருங்காதி தைலம் என்று -ஆயுர்வேத சித்த புத்தகம் சொல்லாத பார்முலாவை பயன்படுத்தி மக்களை முட்டாள் ஆக்குகிறார்கள் ..
  6. டிவிக்களில் விளம்பரத்தில் வரும் அந்த தைலம் ,இந்த தைலம் -அமேசான் காட்டு மூலிகை என்று அண்ட பொய் ஆகாச பொய் மூட்டைகளை சொல்லி விற்கப்படும் மூலிகை தைலத்தை விட இந்த தைலம் ஆயிரம் மடங்கு  அற்புதமானது
  7. பல கம்பெனிகள் நல்லெண்ணையில் இந்த தைலம் செய்யாமல் -தேங்காய் எண்ணையில் செய்கிறார்கள் -தேங்காய் எண்ணையில் செய்யப்படும் நீலி பிருங்காதி தைலத்தை விட நல்லெண்ணையில் செய்த தைலமே ஆற்றல் மிக்கது ..பலன் தரக்கூடியது .
  8. முடி கொட்டுவதை நிறுத்தும் ,முடி நன்றாக வளர செய்யும்
  9. ஆட்டுப்பால் ,மாட்டுப்பால் ,எருமைப்பால் -சேருவதால் -தைலம் நல்ல வாசனை இருக்காது என்றாலும் துர்நாற்றம் அடிக்காது
  10. கண்ணெரிச்சல் ,உடல் சூடு தணிக்க செய்யும்
  11. குளிப்பதற்கு முன்னும் ,குளித்த பின்னும் இந்த தைலம் ஆறு மாத காலம் உபயோகித்து வர நிச்சயம் நல்ல பலன் தரும்
  12. ஆண் ,பெண் ,குழந்தைகள் என்று எல்லோரும் உபயோக்கலாம்.
  13. நிறைய குளிர்ச்சி என்றாலும் சளி பிடிக்காது -பயம் வேண்டாம் ..
  14. எனது அனுபவத்தில் ஆயுர்வேத சாஸ்திர புத்தகம் சொல்லும் பல நூறு முடி வளர வைக்கும் மூலிகை தைலங்களில் எல்லோருக்கும் பயன்படக்கூடியது இந்த தைலம்..
  15. நண்பர்களே -பக்கத்தில் உள்ள கேட்கட்டில் எனது மருத்துவமனை விலாசம் ,எனது உண்மை பெயர் வெளிவிட வேண்டுமா ? என்று வாக்கு எடுக்கிறேன் ..உங்களது வாக்கை பதிவு செய்யுங்கள் ...
குறிப்பு
உள்ளுக்கும் மருந்து சாப்பிடுவது நல்லது
வழுக்கையில் முடி முளைக்கும் என்று யார் விளம்பரம் பண்ணினாலும் நம்பவே நம்பாதீர்கள் -அது பொய் (ஆனால் இந்த தைலம் நல்ல வழுக்கை ஏற்பாடாமல் தடுக்கும் ,முடி வளர வைக்கும் )


Post Comment

வெள்ளி, டிசம்பர் 09, 2011

பித்த மயக்கத்தை போக்கி -தோல் நோய்க்கும் பயன்படும் -மஞ்சிஷ்டாதி தைலம்-Manjistadhi thailam


பித்த மயக்கத்தை போக்கி -தோல் நோய்க்கும் பயன்படும்
-மஞ்சிஷ்டாதி தைலம்-Manjistadhi thailam
 (ref-ஸஹஸ்ரயோகம் - தைலப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            கத்தாழைச்சாறு – குமாரீஸ்வரஸ  8.960 கிலோ கிராம்
2.            தண்ணீர் – ஜல             8.960 லிட்டர்
3.            நல்லெண்ணெய் – திலதைல      2.240 கிலோ கிராம்
4.            பசுவின் பால் – கோக்ஷீர          8.960           “

                இவைகளை ஒன்றாகக் கலந்து அத்துடன்

1.            மஞ்சட்டி – மஞ்ஜிஷ்டா                      10 கிராம்
2.            நன்னாரி – ஸாரிவா                              10      “
3.            கோரைக்கிழங்கு – முஸ்தா                        10      “
4.            கடுகரோஹிணீ – கடுகீ                      10      “
5.            தக்கோலம் – தக்கோல                      10      “
6.            ஜாதிக்காய் – ஜாதீபல                             10      “
7.            கண்டி வெண்ணெய்                              10      “
8.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) – ஹரீதகீ பலத்வக்       10      “
9.            தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) – பிபீதகீ பலத்வக்     10      “
10.          நெல்லிமுள்ளி – ஆமலகீ பலத்வக்                 10      “
11.          சடாமாஞ்சில் – ஜடமாம்ஸீ                        10      “
12.          கிரந்திதகரம் – தகர                               10      “
13.          கோஷ்டம் – கோஷ்ட                             10      “
14.          அதிமதுரம் – யஷ்டீ                              10      “
15.          இலவங்கப்பட்டை – லவங்கத்வக்                  10      “
16.          ஏலக்காய் – ஏலா                            10      “
17.          இலவங்கப்பத்திரி – லவங்கபத்ரி                   10      “
18.          சிறுநாகப்பூ – நாககேஸர                          10      “
19.          விளாமிச்ச வேர் – உசீர                      10      “
20.          அகில்கட்டை – அகரு                             10      “
21.          கிச்சிலிக்கிழங்கு – ஸட்டீ                         10      “
22.          கஸ்தூரி மஞ்சள் – வனஹரீத்ரா                   10      “
23.          ஆம்பல்கிழங்கு – உத்பல                          10      “
24.          குருவேர் – ஹ்ரிவேர                             10      “
25.          தாமரைத்தண்டு – பத்ம (அ) கமல                 10      “

                இவைகளை அரைத்துக் கல்கமாகச் சேர்த்துக் காய்ச்சி மத்யம பாகத்தில் இறக்கி வடிக்கட்டவும். அஞ்சனக்கல் (அஞ்ஜன) 10 கிராம் பொடித்துப் “பாத்திர பாகமாகவும்,” பச்சை கற்பூரம் (கற்பூர) 10 கிராம், கஸ்தூரி 10 கிராம் இவைகளை ஆறியபின் அரைத்தும் சேர்க்கவும்.

குறிப்பு:    தைலத்திற்கு சம அளவு பாலும், சம அளவு கத்தாழைச்சாறும் சேர்த்துத் தயாரிப்பதும் உண்டு.

பயன்படுத்தும் முறை:       
மேற்பூச்சாக (அப்யங்க) வெளி உபயோகத்திற்கு மட்டும்.

தீரும் நோய்கள்:  

ஒற்றைத்தலைவலி (அர்த்தாவ பேதகம்), தலைவலி (சிரோருஜா), கிறுகிறுப்பு எனப்படும் பிரமை (ப்ரம) போன்ற தலைசார்ந்த நோய்கள், கண்வலி (நேத்ரருஜா) போன்ற கண் சார்ந்த நோய்கள்.

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. மஞ்சிஷ்டம் என்ற அற்புத மூலிகை பொருள் தோல் வியாதிக்கும் ,நிறம் சார்ந்த நோய்க்கும் உதவுவதால் ..இந்த மருந்தை நிறம் மாற கறுப்பாக்கி உள்ள தோல் நோய்க்கும் பயன்படும்
  2. பித்த மயக்கத்துக்கு தேய்த்து குளித்தால் -மயக்கம் சரியாகும்
  3. தலை சார்ந்த நோய்க்கு இந்த மருந்தை பயன்படுத்தலாம்
  4. பித்த வாத நோய்க்கும் இந்த மருந்து சிறந்த தீர்வு
  5. அஞ்சனக்கல் ,பசும்பால் -போன்றவை இந்த மருந்தின் சிறப்பம்சம்



Post Comment