சனி, ஏப்ரல் 29, 2017

காலதாமதமான இரவு உணவின் பயமுறுத்தும் மோசமான விளைவுகள் .

காலதாமதமான இரவு உணவின் பயமுறுத்தும் மோசமான விளைவுகள் .

டாக்டர்.அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.,MBA
டாக்டர். வர்தினி .,BHMS.,


வாழ்க்கை நன்றாக வாழ்வதற்கே என்கிற எண்ணம் இளைய தலைமுறையினரிடம் வெகு வேகமாக பரவி வருகின்றது. இந்த வாழ்க்கை நம்முடையது தான் அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. பெரியவர்களின் பேச்சை தற்பொழுது உள்ள இளைய தலைமுறையினர் சிறிதளவும் கேட்பதில்லை. அதிலும் உணவைப் பற்றிய அறிவுரைகளை நாம் மிகவும் எளிதாக புறந்தள்ளி ஒரு வரைமுறைக்கும் உட்படாமல், நாம் விரும்புகின்ற நேரத்தில் விரும்புகின்ற உணவு உட்கொண்டு விடுகின்றோம்.

நாம் அனைவரும் இரவு 8 மணிக்கு மேல் சாப்பிடுவதை பற்றிய பழங்கதைகளை கேள்விப்பட்டிருப்போம். அக்கதைகள் இரவு 8 மணிக்கு மேல் கட்டாயம் உணவு உட்கொள்ள கூடாது எனத் தெரிவிக்கின்றது. அவ்வாறு நாம் உட்கொள்ளும் உணவானது நமது உடலில் கொழுப்பாக சேமிக்கப்படுகிறது.

இரவு உணவை காலதாமதமாக உண்பதால் உயிர் இரத்த அழுத்தம், Hypertension ஏற்பட்டு இருதய நோய்க்கு முக்கிய காரணமாகும்.

பண்டைய காலத்தில் நமது மக்கள் சூரியன் உதிக்கும் முன் எழுந்து தன் கடைமைகளை செய்துவிட்டு சூரியன் மறையும் போது இரவு உணவையும் உண்டு உறங்க சென்று விடுவார்கள். இதனால் அவர்கள் நோயின்றி ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர்.

ஆனால், இன்றோ நாம் இந்த இயந்திர வாழ்கையில் சூரியன் உதித்ததை கூட தெரியாமல் உறங்கிகொண்டு இருக்கிறோம். இதனால் அந்த நாள் முழுக்க நாம் புத்துணர்வின்றி (சோம்பேறித்தனமாக) பொழுதை கழிக்கின்றோம்.

சரி பகலில் தான் காலத்தை விரயம் செய்தார்கள் என்றால் இரவிலாவது சரியான நேரத்தில் உண்கிறார்களா.? அதுவும் இல்லை. இரவு மணி 10 அல்லது 11 ஆன பிறகு தான் இரவு உணவு என்று உள்ளதையே இங்கு பலருக்கு ஞாபகம் வருகிறது. இப்படி காலதாமதமாக உணவு உண்பதால் ஏற்படும் பிரச்சனைகள் எண்ணில் அடங்காதவை.

உடல் பருமன் :-

இரவு நேரம் கழித்து உண்டு அவசர அவசரமாக உறங்க செல்வதாலும் உடல் பருமன் அடைய வாய்ப்புகள் அதிகம். இது எதனால் என்றால் காலையில் நாம் உணவு உண்ட பின் மிகவும் சுறுசுறுப்பாக நமது வேலைகளை செய்கிறோம் இதனால் நமது உடலில் METABOLISM - அமிலம் விரைவாக சுரந்து ஜிரணமாவது எளிமையாகிறது. இரவில் அப்படி இல்லை காரணம் நாம் உண்ட பின் உடனே உறங்க சென்று விடுகிறோம் இதனால் ஜிரணமாவது தடைப்படுகிறது. இதனால் உடல் பருமனடைவது ஒரு காரணி ஆகிறது.தூக்கமின்மை:-

உறக்கம் என்பது ஒரு மனிதனுக்கு இறைவன் குடுத்த வரமாகும். அந்த வரத்தை நாம் இரவில் தாமதமாக உணவை உண்டு இழந்து கொண்டு இருக்கிறோம். இரவு உணவு செரிமாணம் ஆக நேரம் அதிகமாக எடுப்பதால் உறக்கம் என்பது ஒரு கேள்வி குறியாக உள்ளது. இது மருத்துவ ஆராய்ச்சியின் மூலம் கண்டறியப்பட்டத உண்மையாகும் நம்மில் எத்தனை பேருக்கு இது தெரியும். தூக்கமின்மையால் நமது அடுத்த நாளும் மோசமான மந்தமான நாளாகவே அமைகிறது.

Acid Reflux :-

இது நாம் சாப்பிட்ட உடன் உறங்குவதால் ஏற்படும் பிரச்சனையாகும். நாம் சாப்பிட்ட உடனே உறங்குவதால் நாம் உண்ட உணவில் உள்ள அமிலங்கள் உணவு குழாயில் மேல் நோக்கி செல்கிறது. இதனால் நெஞ்செறிச்சல் உண்டாகிறது.

Irritable Bowel Sybdrome (குடல் நோய்) :-

உணவு நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். சிலர் உணவின் அளவை குறைத்தால் உடல் பருமன் குறையும் என உணவை தவிர்கிறார்கள் இது மிகவும் பல பிரச்னைகளுக்கு வலி வகுக்கக்கூடியதாகும்.
கண்ட நேரங்களில் உணவை உண்பதால் குடல் நோய் வர காரணமாகும். வயிற்றுவலி, மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்றுவீக்கம், வயிறு சமந்தமான உபாதைகள், வயிற்று எரிச்சல் இவை அனைத்தும் குடல் நோய்க்கான அறிகுறிகளாகும்.

மனஅழுத்தம் :-

உணவை அடிக்கடி தவிர்ப்பதால் மன அழுத்தம் உண்டாக அதிக வாய்ப்பு உள்ளது. ஏனெனில், மன அழுத்ததிற்கு முக்கிய காரணம் உடல் மற்றும் மனம். உடல் அதன் வேலையை சரியாக செய்யாத பொது மனஅழுத்தம் உண்டாக வாய்ப்பு அதிகம். அதை தவிர்க்க சரியான நேரத்தில் உணவை உண்ண வேண்டும்.

ஆரோக்கியமான உணவு என்பது காலை உணவை அரக்கனை போலவும், மதிய உணவு அரசனை போலவும், இரவு உணவு யாசகனை போலவும் உண்ண வேண்டும். குறிப்பாக இரவு உணவை இரவு 7 மணிக்கு முன்பே உண்பது சாலச்சிறந்ததாகும்.

ஆரோக்கியமான உணவே ஆரோக்கியமான வாழ்வாகும்.
ஆரோக்யமான வாழ்வை வாழ ஆயுஷ் மருத்துவ ஆலோசனைக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 90 4222 5333
ராஜபாளையம் 90 4333 6888
திருநெல்வேலி 90 4222 5999
சென்னை -    90 4333 6000

Post Comment

வெள்ளி, ஏப்ரல் 28, 2017

குழந்தைகளுக்கான ஆயுர்வேத நோய் தடுப்பு திட்டம் -Ayurvedic Immunization Shedule


குழந்தைகளுக்கான ஆயுர்வேத நோய் தடுப்பு திட்டம் 

டாக்டர்.அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.,MBA
டாக்டர் .ஜீவா .,BAMSஇன்றைய கால கட்டத்தில் பிறந்த குழந்தை முதல் -குழந்தை பருவத்தில் பலவகையான தடுப்பூசி மற்றும் நோய் தடுப்பு மருந்துகளை கொடுத்து வருகிறோம்..கொள்ளை நோய்கள் உள்ள அந்த கால கட்டத்தில் பல வகையான நோய் தடுப்பு முறைகளை ஆயுர்வேத மருத்துவத்தில் -குழந்தை மருத்துவ பிரிவு செயல்படுத்தி உள்ளது என்பது ஆச்சர்யம் மட்டுமல்ல நிச்சயமான உண்மை .BCG என்ற தடுப்பு மருந்து காச நோய் தடுப்பு மருந்தாக எல்லாருக்கும் போடத்தான் செய்தாலும் -இன்னும் காச நோயை ஒழிக்க முடியவில்லை .,

ஆண்டி பயாடிக் இல்லாத அந்த கால கட்டத்தில் -Active immunity என்னும் தன்       நோய் எதிர்ப்பு ஆற்றலை ஆயுர்வேதம் பல வகைகளில் வளர்க்க செய்ய பல இயற்கையான மூலிகைகளை திட்டமிட்டு கொடுக்க சொல்கிறது .
         
5000 வருடங்களுக்கு முன்னால் ஆயுர்வேத ஆச்சார்யாக்களால் எழுதப்பட்ட ஆயுர்வேத பாரம்பரிய புத்தகமான ஆரோக்கிய கல்பத்ரும என்ற புத்தகத்தில் குழந்தை பிறந்த நாளிலிருந்து குழந்தையின் நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காகவும் ஆரோக்யத்துடன் வளரவும் தேவையான உணவுமுறைள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.

    இவ்வகை உணவுமுறை திட்டத்தினை நவீன நோய்த்தடுப்புத்திட்டம் (அ) நோய்த்தடுப்பு காலஅட்டவணை உடன் ஒப்பிடலாம்.

    குழந்தை பிறந்த நாளிலிருந்து 13 வயது வரை கொடுக்கப்பட வேண்டிய உணவு முறைகள் (ம) மூலிகைகள் பற்றி ப்ராகார யோக அத்யாயத்தில் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

ப்ராகார யோகம் :-

      ப்ராகார யோகம் என்றால்- குழந்தையின் ஆரோக்கியத்தை பேணிகாக்கயும், நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிப்பதன் மூலம் நோய் வராமல் தடுபதற்காகவும் கொடுக்கப்படும் மூலிகைகளை பற்றிய மருத்துவ உருவாக்கம் ஆகும்.

       பிறந்த குழந்தைக்கான-ஆயுர்வேத நோய்தடுப்புத் திட்டம்

·         குழந்தை பிறந்த இரண்டாவது நாளிலிருந்து ஏழாம்நாள் வரை- வசம்பு+சிறு புல்லாடி (Desmodim trifolium) சாறினை மூன்று சொட்டு தினமும் உச்சந்தலையில் இட வேண்டும்.

     பயன்கள்-குழந்தையின் ஜீரணத்தன்மையும்,நோய் எதிர்ப்பு சத்தியும் வலுவடையும்.

·         15 நாட்களுக்கு பிறகு- வில்வத்தின் (பட்டை,காய்,பழம்,இலைகள்,வேர்) பஞ்சாங்கத்தோடு நெல்லிக்காய்ச் சாறு சேர்த்து ஒரு நாளைக்கு ஒரு கிராம் வீதம் 7 நாட்கள் கொடுக்க வேண்டும்.

·         ஒரு மாத வயது குழந்தைக்கு- கோரைக்கிழங்கு,பெருங்காயம்,வாயுவிடங்கம் (ம) பிரம்மி சாறு சேர்த்து தயாரிக்கப்பட்ட நெய்யினை கொடுக்க வேண்டும்.

·         மூன்று மாத குழந்தைக்கு- சுக்கு, மிளகு, திப்பிலி (ம) நன்னாரி சாரோடு வெண்ணெய் சேர்த்து 7 நாட்கள் கொடுக்கவேண்டும்.

·         ஆறு மாத குழந்தைக்கு- நிலப்பனை தண்டு சாற்றில் சுக்கு,மிளகு,திப்பிலி பொடியுடன் தேன் சேர்த்து 7 நாட்கள் கொடுக்க வேண்டும்.

·         ஒரு வயது குழந்தைக்கு:

கிழ்கண்ட மூலிகைகளை ஒவ்வெரு மாதமும் 7 நாட்கள் கொடுக்க வேண்டும்.

Ø  முதல் மாதம்-நெல்லிக்காய்+கோரைக்கிழங்கு+சுக்கு+மிலகு+திப்பிலியுடன் தேன் சேர்த்து கொடுக்க வேண்டும்

Ø  இரண்டவது மாதம்-நெல்லிக்காய் மற்றும் கோரைக்கிழங்குடன் வெண்ணெய் சேர்த்து கொடுக்க வேண்டும்

Ø  மூன்றாவது மாதம்-நெல்லிக்காய் மற்றும் கோரைக்கிழங்குடன் சக்கரை சேர்த்து வெந்நீரில் கொடுக்க வேண்டும்.

Ø  நான்காவது மாதம்-நெல்லிக்காய் மற்றும்  கோரைக்கிழங்கோடு சக்கரை மற்றும் தேன் சேர்த்து கொடுக்க வேண்டும்.

Ø  ஐந்தாவது மாதம்-நெல்லிக்காய்,கோரைக்கிழங்கு மற்றும்  பஞ்சகோல (திப்பிலி, திப்பிலி மூலம்,ஆட்டி கொடுவேலி) பொடியோடு நெய் சேர்த்து கொடுக்க வேண்டும்.

Ø  ஆறாவது மாதம்- நெல்லிக்காய் + கோரைக்கிழங்கு,சீரகம் மற்றும்  திப்பிலி பொடியுடன் தேன் சேர்த்து கொடுக்க வேண்டும்.

Ø  எழாவது மாதம்- நெல்லிக்காய், கோரைக்கிழங்கு,சுக்கு, திப்பிலி மற்றும் மாதுளத்தோடு தயிருக்கு மேல் மிதக்கும் நீர் சேர்த்து கொடுக்க வேண்டும்.

Ø  எட்டாவது மாதம்- நெல்லிக்காய், கோரைக்கிழங்கு,சுக்கு, திப்பிலி மூலம் மற்றும் குடஜ மூலிகையோடு நெய் சேர்த்து கொடுக்க வேண்டும்.

Ø  ஒன்பதாவது மாதம்- நெல்லிக்காய், கோரைக்கிழங்கு, வாயுவிடங்கம் மற்றும் திப்பிலியோடு நெய் சேர்த்து கொடுக்க வேண்டும்.

Ø  பத்தாவது மாதம்- நெல்லிக்காய்,கோரைக்கிழங்கு,சீரகம்,சுக்கு, மிலகு மற்றும் திப்பிலியோடு சர்க்கரை சேர்த்து கொடுக்க வேண்டும்.

Ø  பதினொன்றாவது மாதம்- நெல்லிக்காய் மற்றும்  கோரைக்கிழங்கோடு ஆட்டுபால் சேர்த்து கொடுக்க வேண்டும்.

Ø  12-வது மாதம்- நெல், கோரைக்கிழங்கோடு, சக்கரை (ம) சீரகப்பொடியோடு மாட்டுப்பால் சேர்த்து கொடுக்க வேண்டும்.

   மூன்று வயது குழந்தைக்கு:

o   கீழ்க்காணும் மூலிகைகளை ஒரு மாதத்திற்கு ஏழு நாட்கள் கொடுக்க      வேண்டும்.

o   அனைத்து மருந்துகளையும் சம அளவு நெய் (ம) சர்க்கரை சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

o   உட்கொள்ளும் அளவு:

மருத்துகள் - 3 கிராம்
நெய்       - 3 கிராம்
சக்கரை    - 3 கிராம்

Ø  முதல் மாதம் – சீந்தில் கொடி, திப்பிலி,வசம்பு.

Ø  இரண்டாவது மாதம்- சுக்கு,திப்பிலி,வசம்பு,பதுமுகம்,இந்துப்பு (ம) கடுக்காய்.

Ø  முன்றாவது மாதம்- வாயுவிடங்கம், கோரைக்கிழங்கு,ஏலக்காய்,வசம்பு,இஞ்சி,சுக்கு,திப்பிலி.

Ø  நான்காவது மாதம்: நன்னாரி,சுக்கு,மிலகு,திப்பிலி, வசம்பு,சீரகம்,மாசிக்காய்.

Ø  ஐந்தாவது மாதம்: மாதுளம், கோரைக்கிழங்கு, வசம்பு, கொத்தமல்லி, திப்பிலி.

Ø  ஆறாவது மாதம்: மூக்கிரட்டை,நிலவேம்பு,வசம்பு, நால்பாமரம்.

Ø  ஏழாவது மாதம்: மாஷபர்னி (காட்டுலூன்னு), கோரைக்கிழங்கு,கோவை செடியின் வேர்,காட்டுமுத்திரா, திப்பிலி (ம) வசம்பு.

Ø  எட்டாவது மாதம்: தும்பி, கோரைக்கிழங்கு,வசம்பு,பரசம்பட்டை
.
Ø  ஒன்பதாவது மாதம்: பிரம்மி, கோரைக்கிழங்கு,வசம்பு,குடஜம் (ம) திப்பிலி.

Ø  பத்தாவது மாதம்: மாலதிபுஷ்பம், வசம்பு,சீரகம்.

Ø  பதினொன்றாவது மாதம்: வன்னி இலை,சீரகம், கொடுவேலி,வசம்பு,(ம)திப்பிலி

Ø  பனிரெண்டாவது மாதம்: கோரைக்கிழங்கு, சுக்கு,மிலகு,திப்பிலி,மாதுளம்,நெல்லிக்காய், வாயுவிடங்கம்,     தாளிசபத்ரம்,கொடுவேலி,கடுக்காய்,செந்தாமரை,வசம்பு.


·         ஐந்து வயது குழந்தை:

மேலே குறிப்பிடப்பட்டுள்ள மூலிகைகளில் வசம்பிற்கு பதில் கொட்டம் சேர்த்து கொடுக்க வேண்டும்.

·         எட்டு வயது குழந்தை:

ஐந்து வயதில் குழந்தைக்கு கொடுக்கப்படும் மூலிகைகளின்        பொடியோடு விஷ்னுகிரந்தி மூலிகை வேர்,நெய் (ம) தேன் சேர்த்து கொடுக்க வேண்டும்.

·         பத்து வயது குழந்தைக்கு:

கீழ்க்காணும் மூலிகைகளை சேர்த்து தயாரிக்கப்பட்ட நெய்யினை ஒவ்வொரு மாதமும் ஏழு நாட்கள் கொடுக்க வேண்டும்.
அளவு- 10 கிராம்.

Ø  முதல் மாதம் – கடுக்காய்,சுக்கு,மிலகு, திப்பிலி,இந்துப்பு,வசம்பு,தாளிசபத்ரம்,பிரம்மி.

Ø  இரண்டாவது மாதம் – சீரகம், சுக்கு,மிளகு, திப்பிலி,இந்துப்பு,வசம்பு, கோரைக்கிழங்கு (ம) கொட்டம் ஆகியவற்றை புளிவஞ்சி சாறுடன் சேர்த்து கொடுக்க வேண்டும்.

Ø  நான்காவது மாதம் – ஜீவனிய மூலிகைகளை கோரைக்கிழங்கு,கொடுவேலி,திப்பிலி, ஆகியவற்றை ஆட்டுபாலுடன் சேர்த்து கொடுக்க வேண்டும்.

Ø  ஐந்தாவது மாதம் – திராட்சை, மூக்கிரட்டை, வட்டதிருப்பி,கோரைக் கிழங்கு,ஹபுஷமூலம்(JUNIPERUS COMMUNIS-இசுவத்சி),கட்பலம் மற்றும் மாதுளையோடு ஆட்டுபால் சேர்த்து கொடுக்க வேண்டும்.

Ø  ஆறாவது மாதம்- சாரிவாதி க்ருதத்தை (நன்னாரி, கோரைக்கிழங்கு,வெட்டிவேர், சுக்கு,மிலகு, திப்பிலி,தேவதாரு,சீரகம்) ஆட்டுபால் சேர்த்து கொடுக்க வேண்டும்.

Ø  ஏழாவது மாதம்- நாகராதி க்ருதத்தை (சுக்கு,நெல்லிக்காய்,கண்டங்கத்திரி,குடஜம், கோரைக்கிழங்கு,வில்வத்தின் பஞ்சாங்கம்) நீரில் சேர்த்து கொடுக்க வேண்டும்.

Ø  எட்டாவது மாதம்- பிப்பலியாதி க்ருதத்தோடு (திப்பிலி,குடஜம்,இந்திரயவா,திராட்சை, சுண்டைக்காய்,கண்டகத்திரி,திக்த,தும்பை,ஓமம்,தூதுவேளை,மாதுளம்,கோரைக்ககிழங்கு,வட்டத்திருப்பி,வசம்பு,முருங்கை,பெருங்காயம்,மூக்கிரட்டை,வில்வ வேர் ,தாமரை, வாயுவிடங்கம்,நெல்லிக்காய்) தயிருக்கு மேல் மிதக்கும் நீரினை சேர்த்து தயாரித்த பின்பு ஜீரகம் (ம) கற்கண்டு சேர்த்து கொடுக்க வேண்டும்.

Ø   ஒன்பதாவது மாதம்-வில்வாதி க்ருதத்தோடு                  ( கஸாயம் பொருட்கள்-வில்வம்,ஓமம்,கருநொச்சி,திப்பிலி, கோரைக்கிழங்கு,மாதுளம்,கல்கப் பொருட்கள்,சுக்கு,மிலகு,  திப்பிலி,ஏலக்காய்,கொடுவேலி,வாயுவிடங்கம்)சமஅளவு பால் சேர்த்து கொடுக்க வேண்டும்.

Ø  மாற்று முறைகள்-1: சுக்கு, மிளகு, திப்பிலி,ஏலக்காய்,கொடுவேலி, வாயுவிடங்கம்,வட்டத்திருப்பி,தும்பை, கோரைக்கிழங்கோடு தயிருக்கு மேல் மிதக்கும் நீரினை சேர்த்து தயாரிக்கப்பட்ட நெய்யினை கொடுக்க வேண்டும்.

Ø  மாற்று முறைகள் 2:-வட்டத்திருப்பி,தும்பை,கோரைக்கிழங்கோடு தயிருக்கு மேல் மிதக்கும் நீர் சேர்த்து தயாரிக்கப்பட்ட நெய்யினை கொடுக்க வேண்டும்.

Ø  பத்தாவது மாதம் :-

Ø  திராயமான க்ருதத்தோடு (கஷாய பொருள்கள்-கமந்திரை,பிரம்மி,குடஜம்,கோரைக்கிழங்கு,திப்பிலி;கல்க பொருள்கள்-அதிவிடயம்,கோரைக்கிழங்கு,குடஜம்,நிலவேம்பு).

Ø  பதினொன்றாவது மாதம் :-

Ø  தாடிமாதி க்ருதத்தோடு  (கஷாய பொருள்கள்-மாதுளம்,நெல்லிக்காய்,கடுக்காய்,தாண்ரிக்காய்,வாயுவிடங்கம்,திப்பலி,கொடுவேலி,ஜீவந்தி சாறு) சம அளவு தயிருக்கு மேல் மிதக்கும் நீர் சேர்த்து கொடுக்க வேண்டும்.

Ø  பனிரெண்டாவது மாதம் :-

   வட்டத்திருப்பி,குடஜம்,நிலவேம்பு,கொத்தமல்லி ஆகிய கஷாய பொருள்களும்;வாயுவிடங்கம்,பரசுப்பட்டை,மஞ்சள்,மரமஞ்சள், மூக்கிரட்டை,சுக்கு,மிளகு,திப்பிலி,ஓமம்,துராலபா,அதிமதுரம் ஆகிய  கல்கப் பொருள்கள் அனைத்தும் சேர்த்து தயாரிக்கப்பட்ட நெய்யுடன் தேன் சேர்த்து உட்கொள்ள வேண்டும்.

·         பதிமூன்று வயதில்:

Ø  முதல் மாதம் – அருகம்புல் (ம) வசம்புடன் சர்க்கரை,தேன் (ம) நெய் சேர்த்து கொடுக்க வேண்டும்.

Ø இரண்டாவது மாதம் – பிரம்மி, வல்லாரை,சமீ வல்கலம்,நெல்லிக்காய்,பன்னுபிலங்கு,பலா,பிரண்டை,கா,ர்போக்கி,நிலவேம்பு,நன்னாரி

மற்ற மாதங்கள் மேலே சொன்னது போலே .இந்த மருத்துவ மூலிகைகள் கிடைக்க வில்லை என்றால் அதற்கும் பல வகையான திட்டங்களை ஆயுர்வேத சிகிச்சை சொல்கிறது அதை பற்றி அடுத்த சில கட்டுரைகளில் பார்க்கலாம் .

குழந்தைகளின் அறிவு ஆற்றல் ,நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகம் பெற -ஆரோக்ய குழந்தையாக உங்கள் குழந்தையை வளர்க்க -ஆலோசனை மற்றும்  சிகிச்சைக்கு அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை -
கடையநல்லூர் 9042225333
ராஜாளையம்  90 4333 6888
திருநெல்வேலி 90 4222 5999
சென்னை  90 4333 6000 ( ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை )

Post Comment

செவ்வாய், ஏப்ரல் 25, 2017

விவசாயிக்காக ஆயுஷ் மருத்துவத்தின் ஆதரவு குரல்

விவசாயிக்காக ஆயுஷ் மருத்துவத்தின் ஆதரவு குரல்

டாக்டர்.அ.முகமது சலீம் ( cure sure) .,BAMS.M.Sc.,MBA

பட்டு  வேட்டி பற்றி அவன் கனா காணும் போது அவனது கோவணமும் உருப்பட்டது என்ற வைர முத்து வரிகளை உண்மை படுத்திய நிர்வாண விவசாய போராட்டத்தை எண்ணி கூனி குறுகியவனாக ..

விவசாயம் தொழிகளில் முதல் –ஆனால் விவசாயி வறுமையின் பிடியில்
உணவே மருந்து  ஆனால் இங்கே உரமருந்துகள் இல்லாமல் உணவே இல்லை.

பசுமை புரட்சியில் –விவசாயி சுய சார்பை இழந்து கை எந்த வைக்க பட்டான்

எல்லா தொழிலும் பாரம்பரியமாக தொடரும் விவசாயம் தவிர  ..

விவசாயம் போராட்டத்துக்கு இப்படி ஆதரவு தரலாம் பத்து கோரிக்கைகள்
  1.    நூறு நாள் வேலை வேலை வாய்ப்பு திட்டத்திற்கு விவசாயமும் –    கருவேல மர ஒழிப்பு பகுதி நாள் வேலை ஆக்கப்பட வேண்டும்          
  2.      இந்தியாவில் எந்த படிப்பு ஆனாலும் சிங்கப்பூரில் ராணுவ பயிற்சி கட்டாயம் போலே -விவசாய பயிற்சி நிச்சயம் குறைந்த பட்சம் கட்டாயமாக்கபடல் வேண்டும்                                                
  3.    எந்த கால கட்டத்திலும் கார்பரேட் மால்களில் அடிப்படை காய்கறிகளை வாங்க மாட்டேன் என்று உறுதி எடுக்க வேண்டும்                      
  4.       குறு விவசாயிக்கு நிபந்தனையற்ற கடன் வழங்க பட வேண்டும்                
  5. குறு விவாசாயியின் எல்லா பயிர்களுக்கும் இலவச காப்பீடு வழங்க வேண்டும்                                                                    
  6.        விவசாயி அங்கீகரிக்க –ஆட்சியரிடம் முதல் பல குடியரசு தலைவர் வரை பல்வேறு நிலைகளில் அவர்கள் செய்த சாதனைகள் அடிப்படையில் விருது –பண முடிப்பும் வழங்கு கௌரவ படுத்த பட வேண்டும்                                                                                                                                                   
  7.    தரிசு நிலங்களை விவசாயம் செய்ய ஒரு அமைச்சகம் அமைக்கபட வேண்டும்                                                                        
  8. .     விவசாயி உருவாக்கும் எந்த பொருளையும் அந்த அந்த ஊரு பள்ளிகளில் NSS அல்லது அதை போன்ற வேறு அமைப்புகள் மூலம் –அல்லது கல்லூரிகளில் உள்ள பல்வேறு அமைப்புகள் மூலம் மக்களுக்கு நேரடியாக கொண்டு செல்ல சரியான திட்ட மிடல் வேண்டும் .மக்கள் சேவையில் உள்ள Rotary,Lions club.JCI போன்ற அமைப்புகள் விவசாயத்தையும் தனது சேவையாய் செய்திடல் வேண்டும்                                                                             
  9.       விவசாயம் இல்லை எனில் இங்கே ஆயுர்வேத சித்த மருத்துவம் இல்லை –மூலிகை இல்லா உலகில் எப்படி இயற்கை வைத்தியம் பார்க்க முடியும் –எனவே –மூலிகை வளர்க்க சரியான திட்டமும் அதை கொள் முதல் செய்ய எளிதான அணுகு முறையையும் அரசு செய்ய வலியுறுத்த வேண்டும்                                                      
  10.    பாக்கெட்டில் அடைத்து விற்கும் பன்னாட்டு உணவு பொருளை முடிந்த அளவுக்கு –முடிந்தால் முற்றிலுமாக தவிர்த்து –சிறு தானிய உணவு பொருளை வாங்க உறுதி கொள்ளல் வேண்டும்.

மூலிகைகள் இங்கே அரிதாய் கிடைக்கிறது ..

விவசாயம் அழிந்தால் விவசாயி மட்டும் அழிய மாட்டான் வைத்தியனும் –அவன் சேவையை எதிர் பார்க்கும் நோயாளியும் அழிந்தே போவான் .

பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட விவசாயிக்கு நானே பிச்சை எடுக்கிறேன் என்ற ஒரு உணர்வோடு எந்த மனிதன் இருக்கிறானோ அவனே நல்ல மனிதன் ..நீங்களும் நானும் நல்ல மனிதர்கள்.

அரசியல் ஆக்கப்படும் இந்த போராட்டம் –உண்மையில் நாம் விவசாயிக்கு செய்ய வேண்டிய கடமைகள் பாக்கி நிறைய உண்டு –ஆதரவு என்று வெறும் பந்த் மட்டுமல்ல –மேலே சொன்ன பத்து கோரிக்கைகள் நிறைவேற்ற போராடலாமே

விவசாயத்தை என்றும் பெருமையாய் கருதும் ஆயுஷ் மருத்துவ ஆலோசனைக்கு –அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888

சென்னை     9043336000

Post Comment