வெள்ளி, ஏப்ரல் 14, 2017

தமிழா உனக்கு தமிழனாய் வாழ ஒரு புத்தாண்டு வாழ்த்து கருத்துக்கள்

தமிழனாய் வாழ்வதில் ஒரு பெருமை ..

டாக்டர்.அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.,MBA

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர்வதில் மிக்க ஆனந்தம் ..

உலக சித்தர் தின வாழ்த்துக்கள் சொல்வதில் மட்டற்ற மகிழ்ச்சி ..

யூதர்களின் விளம்பர மாயையில் தப்பி பிழைக்க  தமிழ் பாரம்பரிய சம்பிரதாய மக்களுக்கு சில சிந்தனைகள் ..

 • ·         மருந்தே உணவு ..உணவே மருந்து ...டிவியில் விளம்பர படுத்துவதெல்லாம்  உணவு அல்ல ..குப்பைகள் ..

 •        உழவே தொழில்களில் முதல் ..விவசாயம் செய்வதே பெருமைக்குரிய செயல் ..எனவே நாம் வசிக்கும் இடத்தில இயற்கை விவசாயம் செய்வோம் ..மாடியில் காய்கறி தோட்டம் இடுவோம் ...காணும் இடமெல்லாம் மரம் நடுவோம்.

 • ·         பாட்டி வைத்திம்.பாரம்பரிய வைத்தியம் –எது நல்லது எது உண்மை எது ஆதாரம் உள்ளது என்று தெரிந்து –வாத பித்த கப குற்றம் அறிந்து –தக்க மருத்துவரின் துணையுடன் முதல் வைத்தியம் செய்வோம் ..அதையே முழுமையாய் செய்வோம் ..

 • ·      நோயை வேரோடு வேர்களின் உதவியோடு அழிப்போம்..

 • ·         எது மூலிகை கட்டு கதை என்று தெளிவோம் ..தரம் தெரியாமல் ..உண்மை உணராமல் எந்த மூலிகை குறிப்பையும் பகிர மாட்டோம் என்று உறுதி கொள்வோம் .

 •          ஆர்கானிக் என்ற பெயரால் வருகிற அனைத்தையும் உண்மை அறிந்து வாங்கி பயன்படுத்துவோம் ..புற்றீசல் போல் வருகிற போலி ஆர்கானிக் என்கிற விஷயத்தை தெளிந்து கொள்வோம் ..தெரிந்து கொள்வோம் ..

 •       தாடி வைத்து சாமியார் வேடமிட்டு  ..டிவியில் சொல்வதை உண்மை என்று நம்ப –அருகில் உள்ள தகுதி வாய்ந்த சித்த ,ஆயுர்வேத மருத்துவரை கேட்டு உண்மை உணர்வோம்..அசோகம் என்று நெட்டிலிங்க இலைகளை காட்டி கதை சொல்கிறார் என்பதையும் தெளிவோம்...எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் மெய்பொருள் கண்டு வைத்தியம் செய்வோம் –பகிர்வோம்

 • ·         நெட் ஒர்க் மார்க்கெட்டிங் காசு ஒன்றே பிரதானம் என்று புட் சப்ளிமென்ட் ஆம்வே நயூட்ரோலட் போன்ற கம்பெனிக்கு கோடிக்கணக்கில் வரவு வைக்க வழி செய்யாமல்  தெளிந்து ஆராய்வோம் ..சதுரங்க வேட்டையில் நாமும் தப்பி மற்றவரையும் மாட்டி விடாமல் வாழ்ந்து –நம் அருகில் உள்ள சிறு தானியமே பெரும் பேறு என்று தெளிவோம்

 • ·         சுதேசம் என்கிற போர்வையில் வருகிற பசுத்தோல் போர்த்திய புலிகளை இனம் கண்டறிவோம் ...உண்மையான சுதேசம் நம் அருகில் உள்ளதே என்று அறிவோம்

 • ·         மாஸ்டர் ஹெல்த் செக் அப் என்னும்  பெரிய மாய வலையில் தப்பி ஓடுவோம் –ஆனாலும் அறிவியல் பூர்வமாய் நம் ஆரோக்கியம் பேண தேவை இன்றி எடுக்கப்படும் பரிசோதனைகளை புறம் தள்ளுவோம்

 •        யோகம் என்பதை இணைதல் –தன்னை அறிதல் –கார்பரேட் சாமியார்கள் தான் யோகாவை நமக்கு உணர்த்துவார்கள் என்று மாயை ஒழிக்க –அருகில் உள்ள யோக பயின்ற குருவை நாடுவோம் ..மாயை ஒழிப்போம்
\
 •         மருத்துவத்தில் அதிக அறிவு ஆபத்து என்று உணர்வோம் ..கூகிளை மருத்துவத்தில் துணை கொள்வது மடமை என்று உணர்வோம் ..

 •          பயன்படுத்தாத அறிவு –வெறும் சேகரிக்க வைக்கும் கணினியின்  மெமரி கார்ட் என்றே உணர்வோம் –அது நமது மூளைக்கு தேவை இல்லை என்பதை உணர்ந்து ..கற்றதை சரி வர திட்டமிட்டு செயல் படுத்துவோம் .

 •          இனி ஒரு விதி செய்வோம் ..அதை எந்த நாளும் காப்போம் ..தமிழனாய் வாழ்வோம் ..தமிழில் பேசுவோம் ..தமிழில் எழுதவோம் ..தமிழில் பின்னூட்டம் இடுவோம் ..தமிழ் வளர்ப்போம் ..தமிழ் மருத்துவம் –தாய் மருத்துவம் பேணுவோம் ..இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம் ..இந்திய மருத்துவத்தாலே நலம் பெறுவோம் ..
வாழ்க நலமுடன் ..வாழ்க தமிழனாய் .


மாற்றம் ஒன்றே மாறாதது என்று என்னை நான் மாற்றி கொள்வேன் என நம்பும் என்னை போன்ற உங்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்கிறேன்

அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 90 4222 5333
திருநெல்வேலி 90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888

சென்னை 90 4333 6000

Post Comment

0 comments:

கருத்துரையிடுக