வியாழன், ஏப்ரல் 06, 2017

மாணவனே !!! நீ ஆரோக்யத்துடன் அறிவாளியாய் ஜொலித்திட 20 -20 ஆலோசனைகள்



மாணவனே!!!   நீ  ஆரோக்யத்துடன் ,அதி புத்திசாலியாகவும் வளர சில ஆயுஷ் மருத்துவ ஆலோசனைகள்

டாக்டர்.அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.,MBA

1. தேவை உணவு அட்டவணை - உணவு அட்டவணை தயார் செய்து அதை சரியாக கடைபித்தால்  நோயில்லாமல் வாழலாம்


2. அடக்காதே ஆபத்தாகும் – தண்ணீர் குடித்தால் யூரின் வரும் என்று தண்ணீரை வேண்டுமென்றே குறைத்து குடிப்பதும் –இயற்கை அடக்குவதும் ஆபத்தே .


3. வெள்ளையர்கள் ஆபத்தானவர்கள் –வெள்ளை சர்க்கரை ,வெள்ளையான மைதா மாவு , வெள்ளை வெளேர் என்ற பாலிஷ் போடப்பட்ட அரிசி இவை மூவரும் நம்மை மருத்துவமனைக்கு சீக்கிரம் அழைத்து செல்வார்கள்


4. கண் பாதிக்கும் திரைகள் – கூர்ந்து கவனிக்கும் செல் திரை , வீடியோ கேம் திரை ,டிவி மற்றும் கம்ப்யூட்டர் திரை –நெடுநேரம் நோக்கினால் கண் பார்வை பாதிக்கும் –குறைத்து கொள் .


5. சுவையான உணவுகள் கலப்படமே –பசியும் பறிபோகுமே –அஜினோமோட்டோ சேர்ந்த பாஸ்ட் புட்,நிறம் சேர்க்கபட்ட உணவுகள் கலப்படதினால் பசி பறிபோகுமே.


6. டிவி விளம்பரங்கள் பொய்யே –வாங்க தூண்டும் ,கவர்ந்திழுக்கும் விளம்பரங்கள் ,அதில் மாற்றி மாற்றி பொய்யுரைக்கும் உணவுகள் அனைத்தும் மிகை படுத்தபட்ட பொய்யே .


7. சனி நீராடு –வாரம் ஒரு முறையாவது எண்ணை தேய்த்து குளித்தால் மட்டுமே உடலில் பொலிவு உண்டாகி ,அறிவு திறன் கூடும் .


8. காலையில் ராஜா போல உண் – காலையில் உணவு நாட்டை ஆளும் ராஜா போல் சத்தான ,வகை வகையாய் ,முழுமையாய் சாப்பிட்டால் நீங்களும் ஆரோக்யத்தில் ராஜாவாகலாம். காலை குறைந்த உணவு மந்த புத்தியுண்டாக்குமே .


9. மாலையில் விளையாடு –பள்ளி முடிந்தவுடன் வெளியில் சிறிது விளையாடினால் மூளை ரீ சார்ஜ் ஆகுமே ,

10. ஒப்பிடாதே – உன்னால் முடிந்ததை ஆர்வத்துடன் ,அர்ப்பணிப்புடன், தெரிந்து கொள்ள வேண்டும் என்ற வெறியுடன் படித்தால் நல்லது .ஒப்பிட்டு பார்த்தால் வேதனைதான் மிஞ்சும் .


11. இனிப்பு மருந்து –உங்களது எல்லா கஷ்டங்களுக்கும் இனிப்பான ஹோமியோ மருந்தில் தீர்வு உள்ளது .உயிர் சக்தியை அதிகரிக்கும் –நோய் தடுக்கும் ஆற்றல் இனிப்பான ஹோமியோபதிக்கு உண்டு 


12. குண்டாக்கும் குளிர்பானம் – காப்ரனேட்டட் கேஸ் உள்ள அனைத்து குளிர்பானமும் உங்களை குண்டாக்கி நோயுண்டாக்கும் .


13. தினமும் ஒரு காயகல்ப மூலிகைகள் உண்..
ஆயுர்வேத ,சித்த மருந்துகளே ஆரோக்யத்தின் ஆரம்பம் 

காய்ச்சலுக்கு நிலவேம்பு , சளிக்கு அடோதொடை ,ஞாபக சக்திக்கு வல்லாரை ,வயிறுக்கு வில்வம் ,எலும்புக்கு பிரண்டை.

வயிறு பூச்சிக்கு குப்பை மேனி வேர் குடிநீர்

முடிக்கு கரிசாலை .

கண்ணுக்கு திரிபலா (கடுக்காய் ,நெல்லிக்காய் ,தான்றிக்காய் )

14.      ஞாபக சக்திக்கு என்றுமே –திரும்ப திரும்ப –படி அதனிலும் புரிந்து படி –வாழ்க்கை உதவாத கல்வி –ஏட்டு சுரைக்காயே என்று தெளி 

15. சரியான ஓய்வே உன்னை புதுப்பிக்கும் சீக்கிரம் தூங்கி ,அதிகாலை எழுந்து படி 

16.  பற்றற்று இரு , என்றுமே கீழ் படிய கற்று கொள் ,ஆணவம் தவிர் , இறை அச்சம் கொள் ,இறைவன் உன்னை கண் காணிக்கிறான் என்று உணர் ,அவன் துணை என்றுமே உனக்கு உண்டு என்று அசையா நம்பிக்கை கொள். பெரியவர்களுக்கு மரியாதை கொடு ,விட்டு கொடு 


17. பலவானாக மாறிட –எள்ளு உருண்டை ,உளுந்தங்களி ,நவதானிய உணவுகள் .சிறு தானிய உணவுகளே –பெரிய ஆரோக்கியம் 

18. கனவை சீக்கிரம் அடைந்திட – தினமும் யோகா ,பிரணாயாம பயிற்சி ,தியானங்கள் –பசியுடனே சாப்பாடு

19. எதிர்பார்ப்பதை கொடு -பாராட்டு ,அங்கீகரி ,அன்பை மட்டுமே பரிமாறிக்கொள் –ஏமாற்றாதே ,சேவை அனுதினமும் செய்திடு .

20. பொழுதை போக்காதே –பயனற்ற பொழுது போக்கு அடிமையாக்கிடும் உனது காலத்தை எடுத்து கொண்டு உன்னை வளர விடாது தடுக்கும்

ஆரோக்யத்தின் அடி நாதமே ஆயுஷ் மருத்துவம் என்று உணர் .


இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்
இந்திய மருத்துவத்தால் நலம் பெற்று கொள் .

சிறந்த ஆயுஷ் மருத்துவ ஆலோசனைக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 90 4222 5333
திருநெல்வேலி 90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888

சென்னை 90 4333 6000

Post Comment

0 comments:

கருத்துரையிடுக