புதன், ஏப்ரல் 19, 2017

அஸ்வகந்தா பற்றிய அறியாத உண்மைகள் (அஸ்வகந்தாவும் ஆண்மை குறைவும் )

அஸ்வகந்தா பற்றிய அறியாத உண்மைகள் :-

டாக்டர்.அ.முகமது சலீம் ( cure sure) .,BAMS.,M.Sc.,MBA
டாக்டர்.ஜீவா .,BAMS


     அனைவரது கண்ணோட்டத்திற்கும் அஸ்வகந்தா என்றால் இல்லற வாழ்வினை அதிகரிக்க மட்டும் , ஆண்மையை கூட்டுவதற்கும் பயன்படுத்தப்படும் மருந்தாகவே தென்படுவதுதான் வருந்தத்தக்க கருத்தாகும்.மனிதர்களின் ஆரோக்ய வாழ்விற்கு பயன்படும் அஸ்வகந்தாவின் பல அற்புதங்களை பற்றி பார்ப்போம்..

இதன் தமிழ் பெயர் அமுக்கிரா.

ஆயுர்வேத குறிப்பேடுகளில் அஸ்வகந்தா :-

ஆச்சார்யா சரகர் அஸ்வகந்தாவை - பல்யம்,ப்ரும்ஹனியம் மற்றும் மதுரஸ்கந்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சாரங்கதரர் சுக்ரள திரவியமாக(விந்து அதிகரித்தல் )அஸ்வகந்தாவினை குறிப்பிடுகிறார்.

பைப்பலாத சம்ஹிதாவில்-அஸ்வகந்தாவின் வேரிலிருந்து எடுக்கப்படும் சாறினை மூக்கில் விடுவதால்(நஸ்யம்) குழந்தை பாக்கியம் பெறலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அஸ்வகந்தாவின் வகைகள் :-

1)Withaniya somnifera.

2)Withaniya coagulans.


அஸ்வகந்தாவில் இருக்கும் முக்கியமான ரசாயன சேர்மானங்கள் :-

Withaferin A,Preudotropine,Withanone,Withanolide WS-1, 

 Withanolide  A to Y , Somnirol, Somnitol,     

Withasomniferin A,Nicotine,Tropine,Solasodine,Withasomnine,sitoindosides,Sominone,Sominolide etc.

அஸ்வகந்தாவின் மருத்துவ பயன்கள் :-

 • அஸ்வகந்தாவில் இருக்கும் விதானோலிட் என்ற ரசாயன உட்பொருள் வலி நிவாரணியாகவும்,நோய் தொற்றை எதிர்க்கவும் பயன்படுகிறது.


 • சோம்னிபெரின் என்ற வேதிப்பொருள் மன அழுத்தத்தில் இருந்து நம்மை மீள செய்து ஆழ்ந்த உறக்கத்தையும் அளிக்கின்றது.


 • விதாபெரின் A என்ற உட்பொருள் முதுமையை தடுக்க பயன்படுகிறது .


நோயின் அடிப்படையில் அஸ்வகந்தா:-

வாத தோஷத்தால் வரக்கூடிய இருதய நோய்க்கு-அஸ்வகந்தத்துடன் தாண்றிகாய் பொடி மற்றும் வெல்லம் சேர்த்து சாப்பிடலாம்.

மூச்சுக்கோளாறு-அஸ்வகந்தா க்ஷாரத்தோடு தேன் மற்றும் நெய் சேர்த்து உண்ணலாம்.(சரகசம்ஹிதா சிகிச்சை ஸ்தானம்)

மூத்திர அடைப்பு-அஸ்வகந்தாவினை கஷாயம் செய்து குடிப்பதினால் அடைப்பு நீங்கும்.

தூக்கமின்மை-அஸ்வகந்த பொடியோடு நெய் மற்றும் சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம்.

அஸ்வகந்தாவினால் ஆன ஆயுர்வேத மருந்துகளும் குணப்படுத்தப்படும் நோய்களும் :-

அஸ்வகந்தாரிஸ்டம்:- (பைசஜ்ய ரத்னாவளி-மூர்ச்சாதிகார அத்தியாயம்)

குணப்படுத்தப்படும் நோய்கள்:மயக்கம்,பலஹீனம்,மூல நோய்,பசியின்மை,வாத நோய்கள் அனைத்தும் குணமடைகிறது.

அஸ்வகந்த சூர்ணம்:-
      
பலஹீனம்,மன அழுத்தம்,ஆமவாதம்,தூக்கமின்மைக்கு சிறந்தது.

அஸ்வகந்தாதி சூர்ணம் :- 

அஸ்வகந்தாதி சூர்ணம் :- (சஹஸ்ர யோகம் ) முறைப்படி 

இரத்தசோகை,வயிற்றுப்பொருமல்,பலஹீனம்,ஆசனவாய் நோய்கள்,செரிமாண குறைபாடு,இருதய நோய்,மூச்சுகோளாறு ஆகியவை குணமடைகிறது.

சித்த மருத்துவத்தில் அமுக்ரா சூர்ணம் (சித்த வைத்திய திரட்டு)

எண்வகைக் குன்மம்இடப்பாட்டு ஈரல் நோய்குத்துவாய்வுவெட்டைபிரமியம், விக்கல்பாண்டுஇரைப்புஇளைப்புச் சயம்வறட்சிகை கால் எரிவு தீரும்..

இங்கே சென்று படித்தால் -சித்த மருத்துவம் சொல்கிற அமுக்ரா சூரணம் ஆண்மையை அதிகரிக்கும் என்ற ஒரு reference ம் இல்லை என்று தெளியலாம் 

அஸ்வகந்தா லேஹ்யம் என்ற ஒரே மருந்தின் பல பார்முலாக்கள் 

 • அஸ்வகந்தாதி லேஹ்யம்:- (சஹஸ்ர யோகம் )  பலஹீனம்,முதுமை,இரத்தசோகை,மூல நோய்,எலும்பு பலஹீனம்,மூச்சு பிரச்சனை,மன அழுத்தம்,நாள்பட்ட நோய்கள் ஆகியவை குணமடைகின்றது.

 • அஸ்வகந்தா லேஹ்யம் ( Ref-Ayurvedic Formulary of India )  படி செய்யபடுகிற லேஹ்யம் செய்முறை வேறு -அதன் பயனும் வேறு . • அஸ்வகந்தா லேஹ்யம் -இம்ப்காப்ஸ் முறை படி செய்கிற செய்முறை வேறு -அதன் பயன்களும் வேறு வேறு 
 • கோட்டக்கல் போன்ற பல மருந்து நிறுவனங்கள்  சஹஸ்ர யோக முறைபடி செய்வதில் -ஆட்டின் மாம்ச சாறு சேர்க்கிறது -இதன் பயன்களும் வேறு வேறு 


 • யோக ரத்னம் என்ற புத்தகத்தின் படி செய்யபடுகிற அஸ்வகந்தா லேஹ்யம் முறையில் -ஆண்மையை அதிகரிக்கும் என்ற சொற்களே இல்லை .வயதாவதை தடுக்க ,அடிபட்ட க்ஷதம் ,உடல் எடை குறைவான க்ருஷ என்கிற ஒல்லியான தேஹம் உள்ளவர்களுக்கு இந்த பார்முலா பயன்படும் .

 • சித்த மருத்துவத்தின் படி செய்யபடுகிற அஸ்வகந்தா லேஹ்யம் (ref-சிகிச்சா ரத்தின தீபம்) -க்ஷயகாசம், சோகை, பாண்டு, காமாலை முதலிய நோய்கள் பரிகரிக்கப்பட்டு தேக புஷ்டி உண்டாகும். க்ஷயரோகத்தில் தேகம் இளைத்தவர்களுக்கு நாளுக்கு நாள் புஷ்டியை கொடுக்கும். மேலும் அவர்களுக்கு சுறுசுறுப்பை உண்டாக்கும். நல்ல பலத்தைக் கொடுக்கும்.இங்கேயும் ஆண்மையை அதிகரிக்கும் என்ற பதம் இல்லை .

அஸ்வகந்தா லேஹ்யம் பற்றி எனது கட்டுரையை படிக்க இங்கே கிளிக் செய்யவும் 


தெரிந்து கொள்ளவேண்டியவை

 1. அஸ்வகந்தா லேஹியம் என்றால் ஆண்மை பெருக்கும் என்ற மாயை உள்ளது -அது தவறு .நன்னாரி ,பரங்கி பட்டை போன்ற மருந்துகள் சேர்வதாலும் -ஆண்மை அதிகரிக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை .
 2. அஸ்வகந்த லேஹியம் மூளை சார்ந்த நோய்களை போக்க ,வலிகளை குறைக்க ,தூக்கம் வர வைக்க பயன்படுத்தலாம் என்பது தான் எனது எண்ணம் ..நரம்பு தெம்புக்கும் தரலாம் 
 3. பொதுவாக சீமை அமுக்கரா கிழங்கை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று ஆயுர்வேத நூல்கள் சொல்கிறது ஆனால் அதிக விலையின் காரணமாக விலை குறைந்த நாட்டு அமுக்கரா கிழங்கையே பெரும்பான்மையான மருந்து கம்பெனிகள் சேக்கிறது என்பது மறுக்க முடியாத வேதனையான விஷயம் 
 4. ஆண்மை அதிகரிக்க ,இது போன்ற சாமாசாரங்களுக்கு வேறு ப்ரயத்யேகமான பல லேஹியங்கள் உள்ளது ..இது போன்ற விஷயங்களுக்கு எனது சாய்ஸ் இந்த அஸ்வகந்தா லேஹியம் அல்ல ..
 5. பல போலி வைத்தியர்கள் -இந்த அவகந்த லேஹியத்தின் லேபிளை கிழித்து மாற்றி அரை கிலோ லேஹியத்தை ஐயாயிரம்  ரூபாய்க்கும் மேல் விற்கிறார்கள் எனபதும் வேதனையான விஷயம் 
 6. எந்த ஆயுர்வேத மருந்தை தெரிகிறதோ இல்லையோ இந்த லேஹியத்தை தெரியாதவர்களே பொதுவாக கிடையாது 
 7. சித்த மருத்துவத்தில் செய்யகூடிய அஸ்வகந்த லேஹியம் பார்முலாவே வேறு என்று மேலே படித்தால் புரியும் 
 8. அஸ்வகந்தா லேஹியத்தில் ஆட்டு மாமிசம் சேர்கின்ற பார்முலாக்களும் உள்ளது என்பதை தெரிந்து வைத்தால் நல்லது .
 9. வலிகளை போக்க ,மன அமைதி பெற ,உடல் வலு பெற இந்த லேஹியத்தை பொதுவாக பயன்படுத்தலாம் 

ஒரே மருந்து ,ஒரே பெயர் -சேர்கின்ற மூலிகைகள் வெவ்வேறு ..அதன் பயன்களும் வேறு வேறு என்பதை உணர்தலே நல்லது .

ஆயுர்வேதத்தில் மற்றும் சித்த மருத்துவ பல குறிப்புகளில் அஸ்வகந்தா சேர்ந்த மருந்துகள் ஆண்மையை மட்டும் தான் கூட்டும் என்கிற தனி குறிப்புகள் இல்லை என்று தெரிந்து கொள்ளுங்கள். மேலே உள்ள கட்டுரைகளை படித்தால் பலன் அதற்கும் மேலே என்று எளிதாக உணரலாம் 

போலி மருத்துவர்களாளும் கண்மூடித்தனமான நம்பிக்கை கொண்ட மக்களாலும் அஸ்வகந்தா லேஹ்யம் மட்டும் இல்லாமல் பல ஆயுர்வேத,சித்த  மருந்துக்கள் தவறாக கையாளப்படுகிறது.


இன்றிலிருந்து கண்விழித்து கொள்வீர்-சிறந்த ஆயுர்வேத,சித்த  மருத்துவர்களை தேர்ந்தெடுப்பீர் அற்புதமான ஆரோக்யவாழ்வினை பெறுவீர். 

சிறந்த ஆயுர்வேத சித்த மருத்துவ ஆலோசனைக்கு 
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை 
கடையநல்லூர்  90 4222 5333
திருநெல்வேலி  90 4222 5999
ராஜபாளையம்  90 4333 6888
சென்னை       90 4333 6000


Post Comment

0 comments:

கருத்துரையிடுக