அஸ்வகந்தா அரிஷ்டம் க்கான வினவலுக்குத் தொடர்பான முறையில் வரிசைப்படுத்திய இடுகைகளைக் காண்பிக்கிறது. தேதி முறையில் வரிசைப்படுத்து எல்லா இடுகைகளையும் காண்பி
அஸ்வகந்தா அரிஷ்டம் க்கான வினவலுக்குத் தொடர்பான முறையில் வரிசைப்படுத்திய இடுகைகளைக் காண்பிக்கிறது. தேதி முறையில் வரிசைப்படுத்து எல்லா இடுகைகளையும் காண்பி

சனி, டிசம்பர் 18, 2010

ஆண்மை அதிகரிக்கவும் -ஜெனரல் டானிக் -அஸ்வகந்தா அரிஷ்டம்-Aswagandarishtam

அஸ்வகந்தா அரிஷ்டம்-Aswagandarishtam
(Ref-பைஷஜ்யர த்னாவளி - மூர்ச்சாதிகாரம்)



தேவையான மருந்துகளும் செய்முறையும்:-



2.            நிலப்பனைக்கிழங்கு முசலீ                 1.000     “
3.            மஞ்சட்டி மஞ்ஜிஷ்டா                      0.500     “
4.            கடுக்காய் (கொட்டை நீக்கியது)- ஹரீதகீ      0.500     “
5.            மஞ்சள் ஹரித்ரா                          0.500     “
6.            மரமஞ்சள் தாருஹரித்ரா                   0.500     “
7.            அதிமதுரம் யஷ்டீமது                      0.500     “
8.            சித்தரத்தை ராஸ்னா                       0.500     “
9.            முதுக்கன் கிழங்கு விடாரி                 0.500     “
10.          மருதம்பட்டை அர்ஜுனத்வக்               0.500     “
11.          கோரைக்கிழங்கு முஸ்தா                  0.500     “
12.          கருஞ்சிவதை த்ரிவ்ருத்                    0.500     “
13.          சிறு காஞ்சூரி துராலப்பா                   0.400     “
14.          நன்னாரி (கருப்பு) க்ருஷ்ண ஸாரிவா        0.400     “
15.          வெண்சந்தனம் ஸ்வேத சந்த               0.400     “
16.          செஞ்சந்தனம் ரக்த சந்தன                  0.400     “
17.          வசம்பு வாச்சா                             0.400     “
18.          கொடிவேலிவேர்ப்பட்டை சித்ரகத்வக்        0.400     “
19.          தண்ணீர் ஜல                              102.400 லிட்டர்
20.          சர்க்கரை ஷர்க்கர                           6.0000   கி.கிராம்
21.          தேன் மது                                  10.0000 “ 


முதல் பதினெட்டு சரக்குகளையும் நீரில் கொதிக்க வைத்து 12.800 லிட்டர் ஆகக் குறுக்கி வடிகட்டி அதில் சர்க்கரை, தேன் இவைகளைச் சேர்த்து அத்துடன்


1.            சுக்கு சுந்தீ                           100  கிராம்
2.            மிளகு மரீச்ச                        100         “
3.            திப்பிலி பிப்பலீ                      100         “
4.            சிறுநாகப்பூ நாககேஸர               100         “
5.            இலவங்கப்பட்டை லவங்கத்வக்       100         “
6.            இலவங்கப்பத்திரி லவங்கபத்ர         200         “
7.            ஏலக்காய் ஏலா                       200         “
8.            ஞாழல்பூ ப்ரியாங்கு                  200         “
9.            காட்டாத்திப்பூ தாதகீபுஷ்ப             800         “
ஆகியவைகளை எடுத்துக் கொண்டு அதில் முதல் எட்டு சரக்குகளை ஒன்றிரண்டாகப் பொடித்துப் போட்டுக் காட்டாத்திப்பூ சேர்த்து ஒரு மாதம் வரை வைத்திருந்து வடிகட்டவும்.

அளவும் அனுபானமும்:   
  10 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீருடன் இரு வேளைகள்.

தீரும் நோய்கள்:  

  1. உடல் மிகவும் மலிவடைந்த நிலையிலும், க்ஷுண ரோகங்களிலும் கூஷ்மாண்ட லேஹ்யத்துடன் தரப்படுகிறது. 
  2. மூலம் (அர்ஷ), க்ஷயரோகம், ஞாபகம் இன்மை (ஸ்மிருதிக்ஷய) போன்றவைகளில் பெரிதும் பயனளிக்கவல்லது. 
  3. மலட்டுத் தன்மைக்கு ஸதாவரீ ரஸாயனத்துடன் தரப்படுகிறது. 
  4. உள்ளங்கை, பாதங்களில் ஏற்படும் எரிச்சலில் (ஹஸ்த பாத தாக) சந்தனாஸவத்துடன் வழங்கப்படுகிறது.
  5. நீண்ட நாட்களுக்கு இதனைத் தொடர்ந்து உபயோகிக்க மூர்க்கை (மூர்ச்சா), கால் கைவலி எனும் காக்கைவலி (அபஸ்மார) உன்மாதம் (உன்மாத), மூளைக்கோளாறுகள், நரம்புத் தளர்ச்சி (நாடீதௌர்பல்ய) மற்றும் பலவித வாத நோய்கள் (வாதரோகங்கள்), இளைப்பு (கார்ஸ்ய) ஆகியன நீங்கும்.

ஆயுர்வேதத்தில் இந்த மருந்து கை  கால் வலி குறைக்கவும்,நரம்பு தெம்பு தரவும் ,உடல் நோய் எதிர்ப்பு சக்தி கூடவும் ,ஆண்மை பெருக்கவும் -பொதுவான ஹெல்த் டானிக் இந்த மருந்தை பயன்படுத்துவோம்

Post Comment

வெள்ளி, ஜூலை 02, 2010

மூட்டு வலிக்கு ஆயுர்வேத மருந்துகள் -பாகம் -1

சந்தி வாதம் என்னும் எலும்பு தேய்மானத்தில் உபயோகிக்க படும் ஆயுர்வேத மருந்துகள்
 -

கசாயங்களில்
  1. மாஹா ராஸ்னாதி கசாயம் -காலை மாலை வெறும் வயிற்றில் 
  2. ராஸ்னாதி கசாயம் -
  3. ராசன ஏறண்டாதி கசாயம் 
  4. ராஸ்னா சப்தகம் கசாயம் 
  5. அஷ்ட வர்க்கம் கசாயம் 
  6. இந்துகாந்தம் கசாயம் 
  7. குக்கலு திக்தகம் கசாயம் 
  8. தான்வன்தரம் கசாயம் 
  9. சஹாச்சராதி கசாயம் 
  10. பிரசாரின்யாதி கசாயம் 
மாத்திரைகளில் 
  1. மாஹா யோக ராஜ குக்குலு 
  2. மாஹா வாத கஜான்குச ரசம் 
  3. மாஹா வாத வித்வாம்சி ரசம் 
  4. அச்வங்கந்தா குடிகா
  5. யோகராஜா குக்குலு 
  6. கைசோர குக்குலு 
  7. அபாதி குக்குலு 
  8. லாக்ஷாதி குக்குலு 
  9. சங்க வடி 
  10. பரநாத குடிகா 
  11. வாதாரி ரசம் 
  12. யோகேந்திர ரசம் 
  13. ப்ருஹத் வாத சிந்தாமணி ரசம் 
  14. சதுர்முக ரசம் 
  15. சிந்தாமணி சதுர்முக ரசம் 
  16. ஸ்வர்ண பூபதி ரசம் 
  17. ஸ்வர்ண குக்கலு 
  18. ராஸ்னாதி குக்கலு 
  19. சிம்ஹநாத குக்குலு 
  20. வாதாரி குக்கலு 
  21. நவ ரத்னா ராஜ ம்ருகாங்க ரச 
சூர்ணங்களில் 
  1. அஸ்வகந்தா சூர்ணம் 
  2. முச்தாதி சூரணம் 
  3. லாக்ஷா சூர்ணம் 
  4. பலா அஸ்வகந்தா சூர்ணம் 
  5. மதுயஷடி சூர்ணம் 
  6. வஜ்ரவல்லி சூர்ணம் 
  7. அஸ்தி வல்கலாதி சூர்ணம் 
  8. வைஸ்வனார சூர்ணம் 
  9. திரிபலா சூர்ணம் 
அரிச்டங்களில்
  1. அச்வகந்தாரிசம் 
  2. பலாரிச்டம் 
  3. தேவதாரு அரிஷ்டம் 
  4. தஷமூல அரிஷ்டம் 
  5. தன்வந்தர அரிஷ்டம் 
  6. லாக்ஷா ஸ்ருங்கா அரிஷ்டம் 
க்ருதங்களில் 
  1. இந்துகாந்தம் கிருதம் 
  2. லசுனாதி கிருதம் 
  3. த்ரி கண்டக க்ரிதம்
  4. ராஸ்னாதி கிருதம் 
  5.  வீர்ய வர்தனி கிருதம் 
பஸ்மங்களில்
  1. சங்க பஸ்மம் 
  2. பவள பஸ்மம்
  3. ஸ்வர்ண பஸ்மம் 
  4. ஹரதால பஸ்மம்
  5. ஆறுமுக சிந்தூரம் (சித்தா)
  6. சண்ட மாருத சிந்தூரம் (சித்தா)
  7. குக்கலு பஸ்மம் 
உள்ளே சாப்பிடும் எண்ணை/நெய் களில்
  1. க்ஷீர பாலா -101
  2. தான்வன்தரம் 101 
  3. கந்த தைலம் 
  4. பாலா தைலம் 
  5. சாகச்சராதி தைலம் -
லேகியங்களில் 
  1. அஸ்வகந்தா லேஹியம் 
  2. தசமூல ஹரீதகி லேஹியம் 
  3. ச்யவன ப்ரஸா லேஹியம் 
  4. அம்ருத பல்லதாக லேஹியம் 
  5. வஜ்ரா வள்ளி லேஹியம் 
  6. தசமூல லேஹியம் 
வெளி பூச்சு தைலங்களில் 
  1. மகா நாராயண தைலம் 
  2. தன்வன்தரம் தைலம் 
  3. கொட்டம் சுக்காதி தைலம் 
  4. கற்பூராதி தைலம் 
  5. பிண்ட தைலம் 
  6. பிரபஞ்சன் விமார்த்தன் தைலம் 
  7. கார்பாசஸ்தயாதி தைலம் 
  8. மஹா விஷ கார்ப தைலம் 
  9. சுத்த பாலா தைலம் 
  10. பஞ்ச குணா தைலம் 
  11. க்ஷீர பாலா தைலம் 
  12. மஹா மாஷா தைலம் 
  13. முக்கூட்டு தைலம் 
  14. சஹாச்சராதி தைலம் 
  15. ப்ராஸ்ரின்யாதி தைலம் 
  16. சைந்தவாதி தைலம் 
  17. தான்வன்தரம் குழம்பு 
  18. பிரபஞ்சன விமர்தன குழம்பு 
  19. அஸ்வகந்த பாலா லாக்ஹ்ஷாதி தைலம் 
  20. மதுயச்டி தைலம் 

இதே போல பல வகையான தைலங்கள் உள்ளது ..

சாதாரண கால் வலிக்கு ஏன் இத்தனை வகையான மருந்துகள் ?
ஒருவருக்கு உள்ளது போல் அதே நோய் இன்னொருவர்க்கும் இருந்தாலும் ஆயுர்வேதத்தில் மருந்துகள் வேறு படும் ஏன் ?
எல்லா வலிக்கும் ஒரே மருந்தை தர முடியாது ஏன் ?
மேலே உள்ள மருந்துகளில் எல்லா வகையான (95 %) மருந்துகளும் என்னிடம் உள்ளது -இதை எப்படி தேர்ந்தெடுக்கிறேன் ?
ஆயுர்வேத மருந்துகள் மெதுவாகத்தான் வேலை செய்யுமென்று யார் சொன்னார்கள் ?.
முழுமையான நிவாரணம் பெற என்ன செய்ய வேண்டும் ?

காத்திருங்கள் பதில் வெகு விரைவாக -தருவேன் 

அடுத்து ..ஆம வாதத்தில் -முடக்கு வாதத்தில் ஆயுர்வேத மருந்துகள் .

    Post Comment

    சனி, ஜனவரி 29, 2011

    ஞாபக மறதியை குணப்படுத்தும் -அறிவு வளர்க்கும் டானிக் --ஸாரஸ்வதாரிஷ்டம்-Sarasvatharishtam


    ஞாபக மறதியை குணப்படுத்தும் -அறிவு வளர்க்கும் டானிக்  -ஸாரஸ்வதாரிஷ்டம்-Sarasvatharishtam

      (ref-பைஷஜ்யரத்னாவளி - ரஸாயனாதிகாரம்)

    தேவையான மருந்துகளும் செய்முறையும்:


    1.            வல்லாரை ப்ராஹ்மீ                      - 1.000 கிலோகிராம்
    2.            தண்ணிர் விட்டான் கிழங்கு ஸதாவரீ      - 0.250                 “
    3.            முதுக்கன் கிழங்கு விடாரீ                - 0.250                 “
    4.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீ   - 0.250                 “
    5.            விளாமிச்சவேர் உஸீர                     - 0.250                 “
    6.            இஞ்சி ஆர்த்ரக                           - 0.250                 “
    7.            சதகுப்பை ஸதபுஷ்ப                     - 0.250                 “
    8.            தண்ணீர் ஜல                            - 12.800 லிட்டர்


    இவைகளை நன்கு கொதிக்க வைத்து 3.200 லிட்டர் ஆக்க் குறுக்கி வடிகட்டி அதில்

    1.            சர்க்கரை ஸர்க்கர               - 1.250 கிலோகிராம்
    2.            தேன் மது                       - 0.500                 “


    இவைகளைக் கலந்து மற்றும்

    1.            அரேணுகம் அரேணுக                        - 12.500 கிராம்
    2.            சிவதை (கருப்பு) த்ரிவ்ருத்                  - 12.500    “
    3.            திப்பிலி பிப்பலீ                             - 12.500    “
    4.            இலவங்கம் லவங்க                       - 12.500    “
    5.            வசம்பு வாச்சா                            - 12.500    “
    6.            கோஷ்டம் கோஷ்ட                        - 12.500    “
    7.            அமுக்கிராக்கிழங்கு அஸ்வகந்தா            - 12.500    “
    8.            தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) பிபீதகீ   - 12.500    “
    9.            சீந்தில்கொடி குடூசீ                        - 12.500    “
    10.          ஏலக்காய் ஏலா                          - 12.500    “
    11.          வாயுவிடங்கம் விடங்க                    - 12.500    “
    12.          இலவங்கப்பட்டை லவங்கத்வக்             - 12.500    “


    இவைகளைப் பொடித்துப் போட்டுக் காட்டாத்திப்பூ (தாதகீபுஷ்ப) 250 கிராம் சேர்த்துத் தங்க்க் குடத்தில் ஒரு மாதம் வரை வைத்திருந்து வடிகட்டவும்.

    குறிப்பு:    தங்கக் குடம் இல்லாவிடில் மற்ற கலங்களை உபயோகித்தும் தயாரிக்கலாம். அவ்விதம் உபயோகிக்கும் போது தங்கத்தின் குணம் கிடைக்க மேற்கூறிய மருந்தில் தங்கரேகத்தைச் சேர்க்க வேண்டும். 125.00 கிராம் எடையுள்ள தங்கரேக்கை வடிகட்டிய அரிஷ்டம் சிறிது சேர்த்து நன்கு கல்வத்திலிட்டரை குப்பியிலடைக்கும் தருணத்தில் கலந்து பத்திரப்படுத்தவும்.


    அளவும் அனுபானமும்:     15 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீர் கலந்து இரு வேளைகள்.


    தீரும் நோய்கள்: 


    மூர்ச்சை (மூர்ச்சா), கால்கைவலி எனும் காக்கை வலிப்பு (அபஸ்மார), பைத்தியம் (உன்மாத), மூளைக்கோளாறுகள் (அ) மனக்       கோளாறுகள் (மானஸதோஷ), திக்குவாய் போன்ற உச்சரிப்புக் கோளாறுகள், ஞாபகமறதி (ஸ்மிருதிக்ஷய), குற்றமுள்ள விந்து (சுக்ரதோஷ), தொடர்ந்து உட்கொள்ள ஞாபகசக்தியை அதிகப் படுத்துவதுடன், உடலுக்கு வலுவையும்

    சாந்தியையும் அளித்து மூளை நரம்பு மண்டலத்தை பலமாக்குகிறது. சிறந்த உடல் தேற்றி.


     குறிப்பு

     சாரஸ்வதா அரிஷ்டம் -பொதுவாக -தங்க பற்பம் சேர்ந்து தான் தயாரிக்கப்பட்ட வேண்டும் ..ஆனால் மார்கெட்டில் தங்கம் சேர்க்காமலும் சாரஸ்வதா அரிஷ்டம் கிடைக்கிறது ..

    குறிப்பு தங்க பஸ்பம் தங்க நிறத்திலே இருக்காது ,அடர் சிவப்பு நிறம் தான் நல்ல தங்க பஸ்பம் ..தங்கம் போல் மினு மினு மினுக்கும் ஒரு பஸ்பம் ஒன்று உள்ளது ..அதை வைத்து போலி வைத்தியர்கள் தங்க பஸ்பம் என்று ஏமாற்றி வருகிறார்கள் ..அந்த தங்கம் போல் மினு மினுக்கும் பஸ்பதிலே ஒரு இம்மியேனும் தங்கம் சேராது ஆனால் அதற்க்கு பெயர் ஸ்வர்ண வங்கம்

    தங்க பற்பம் சேர்ந்த சாரஸ்வதா அரிஷ்டம் தான் அறிவை வளர்க்கும் -அறிவு திறன் கூட வைக்கும் ..

    தங்க பஸ்பம் மிக மிக குறைவான அளவிலே சேருவதாலும் பக்க விளைவுகள் இல்லவே இல்லை ..தாராளமாக மூன்று வயதிற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கும் ,வயது மூத்தவர்களுக்கும் பயமின்றி தொடர்ந்து கொடுக்கலாம் ..

    எனக்கு தெரிந்த வகையில் இது சிறந்து அறிவு பெருக்கி ..குழந்தைகளுக்கு தேவை கருதி கொடுக்கலாம் ..பொதுவாக கொடுக்கலாம் ..

    கால அளவு குறைந்த பட்சம் மூன்று மாதங்கள் -பசி ,தேக பிரகிருதி ,உடல் வன்மை ,மன வலிமை பொறுத்து அளவுகளை கூட்டவோ குறைக்கவோ செய்யவேண்டும்

    டாபர் கம்பெனி சாரஸ்வதா அரிஷ்டம் தயாரிப்பில் -தங்கம் சேருவதில்லை என்று அறிகிறோம் ..


    Post Comment