சனி, டிசம்பர் 18, 2010

ஆண்மை அதிகரிக்கவும் -ஜெனரல் டானிக் -அஸ்வகந்தா அரிஷ்டம்-Aswagandarishtam

அஸ்வகந்தா அரிஷ்டம்-Aswagandarishtam
(Ref-பைஷஜ்யர த்னாவளி - மூர்ச்சாதிகாரம்)தேவையான மருந்துகளும் செய்முறையும்:-2.            நிலப்பனைக்கிழங்கு முசலீ                 1.000     “
3.            மஞ்சட்டி மஞ்ஜிஷ்டா                      0.500     “
4.            கடுக்காய் (கொட்டை நீக்கியது)- ஹரீதகீ      0.500     “
5.            மஞ்சள் ஹரித்ரா                          0.500     “
6.            மரமஞ்சள் தாருஹரித்ரா                   0.500     “
7.            அதிமதுரம் யஷ்டீமது                      0.500     “
8.            சித்தரத்தை ராஸ்னா                       0.500     “
9.            முதுக்கன் கிழங்கு விடாரி                 0.500     “
10.          மருதம்பட்டை அர்ஜுனத்வக்               0.500     “
11.          கோரைக்கிழங்கு முஸ்தா                  0.500     “
12.          கருஞ்சிவதை த்ரிவ்ருத்                    0.500     “
13.          சிறு காஞ்சூரி துராலப்பா                   0.400     “
14.          நன்னாரி (கருப்பு) க்ருஷ்ண ஸாரிவா        0.400     “
15.          வெண்சந்தனம் ஸ்வேத சந்த               0.400     “
16.          செஞ்சந்தனம் ரக்த சந்தன                  0.400     “
17.          வசம்பு வாச்சா                             0.400     “
18.          கொடிவேலிவேர்ப்பட்டை சித்ரகத்வக்        0.400     “
19.          தண்ணீர் ஜல                              102.400 லிட்டர்
20.          சர்க்கரை ஷர்க்கர                           6.0000   கி.கிராம்
21.          தேன் மது                                  10.0000 “ 


முதல் பதினெட்டு சரக்குகளையும் நீரில் கொதிக்க வைத்து 12.800 லிட்டர் ஆகக் குறுக்கி வடிகட்டி அதில் சர்க்கரை, தேன் இவைகளைச் சேர்த்து அத்துடன்


1.            சுக்கு சுந்தீ                           100  கிராம்
2.            மிளகு மரீச்ச                        100         “
3.            திப்பிலி பிப்பலீ                      100         “
4.            சிறுநாகப்பூ நாககேஸர               100         “
5.            இலவங்கப்பட்டை லவங்கத்வக்       100         “
6.            இலவங்கப்பத்திரி லவங்கபத்ர         200         “
7.            ஏலக்காய் ஏலா                       200         “
8.            ஞாழல்பூ ப்ரியாங்கு                  200         “
9.            காட்டாத்திப்பூ தாதகீபுஷ்ப             800         “
ஆகியவைகளை எடுத்துக் கொண்டு அதில் முதல் எட்டு சரக்குகளை ஒன்றிரண்டாகப் பொடித்துப் போட்டுக் காட்டாத்திப்பூ சேர்த்து ஒரு மாதம் வரை வைத்திருந்து வடிகட்டவும்.

அளவும் அனுபானமும்:   
  10 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீருடன் இரு வேளைகள்.

தீரும் நோய்கள்:  

  1. உடல் மிகவும் மலிவடைந்த நிலையிலும், க்ஷுண ரோகங்களிலும் கூஷ்மாண்ட லேஹ்யத்துடன் தரப்படுகிறது. 
  2. மூலம் (அர்ஷ), க்ஷயரோகம், ஞாபகம் இன்மை (ஸ்மிருதிக்ஷய) போன்றவைகளில் பெரிதும் பயனளிக்கவல்லது. 
  3. மலட்டுத் தன்மைக்கு ஸதாவரீ ரஸாயனத்துடன் தரப்படுகிறது. 
  4. உள்ளங்கை, பாதங்களில் ஏற்படும் எரிச்சலில் (ஹஸ்த பாத தாக) சந்தனாஸவத்துடன் வழங்கப்படுகிறது.
  5. நீண்ட நாட்களுக்கு இதனைத் தொடர்ந்து உபயோகிக்க மூர்க்கை (மூர்ச்சா), கால் கைவலி எனும் காக்கைவலி (அபஸ்மார) உன்மாதம் (உன்மாத), மூளைக்கோளாறுகள், நரம்புத் தளர்ச்சி (நாடீதௌர்பல்ய) மற்றும் பலவித வாத நோய்கள் (வாதரோகங்கள்), இளைப்பு (கார்ஸ்ய) ஆகியன நீங்கும்.

ஆயுர்வேதத்தில் இந்த மருந்து கை  கால் வலி குறைக்கவும்,நரம்பு தெம்பு தரவும் ,உடல் நோய் எதிர்ப்பு சக்தி கூடவும் ,ஆண்மை பெருக்கவும் -பொதுவான ஹெல்த் டானிக் இந்த மருந்தை பயன்படுத்துவோம்

Post Comment

1 comments:

கருத்துரையிடுக