சனி, டிசம்பர் 25, 2010

முடி நன்றாக வளர நல்ல டானிக் - பிருங்கராஜாஸவம்-Brungarajasavam


முடி நன்றாக வளர நல்ல டானிக் - பிருங்கராஜாஸவம்-Brungarajasavam
(ref-கதநிக்ரஹ - ஆஸவாதிகாரம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:-
1.            கரிசாலைச்சாறு பிருங்கராஜ ஸ்வரஸ 12.800 லிட்டர் 
அளந்தெடுத்து அதில்


2.            வெல்லம் குட                  10.000 கி.கிராம் கரைத்து அத்துடன்


1.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீ                400         கிராம்
2.            திப்பிலி பிப்பலீ                            100         “
3.            ஜாதிக்காய் ஜாதீபல                             100         “
4.            இலவங்கம் லவங்க                             100         “
5.            இலவங்கப்பட்டை லவங்கத்வக்                  100         “
6.            ஏலக்காய் ஏலா                            100         “
7.            இலவங்கப்பத்திரி லவங்கபத்ர                   100         “
8.            சிறு நாகப்பூ நாககேஸர                         100         “


இவைகளை முறைப்படி கலந்து ஒரு மாதம் வரை வைத்திருந்து வடிகட்டவும்.


அளவும் அனுபானமும்:   

  15 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீருடன் இரு வேளைகள்.


தீரும் நோய்கள்: 


முடி கொட்டுதல் (ரோம சத),தாதுக்கள் நலிவடைதல் (தாதுக்ஷயம்), இளைப்பு (கார்ஸ்ய), பலவீனம் (தௌர்பல்ய), இரத்த சோகை எனும் வெளுப்பு நோய் (பாண்டு), காமாலை (காமால), கல்லீரல், மண்ணீரல் வீக்கம் (யக்ருத் ப்லீகவ்ருத்தி), பெண்களின் மலட்டுத்தன்மை (நஷ்ட புஷ்பக), காங்கை (சர்வாங்க தாஹ), நாட்பட்ட காய்ச்சல் (புராணஜ்வர), இருமல் (காஸ).குறிப்பு:    சாறு, வெல்லம், கடுக்காய்ப் பொடி இவைகளை மட்டும் சேர்த்து 15 நாட்கள் வரை வைத்து இருந்து பின்பு திப்பிலி முதலானவற்றைச் சேர்க்க வேண்டுமென நூலில் கூறப்பட்டுள்ளது.
கொட்டை நீக்கிய கடுக்காய்த் தோல் 200 கிராம் சேர்ப்பது சம்பிரதாயம்.

 இந்த மருந்தை தொடர்ந்து -பத்திலிருந்து -பதினைந்து பாட்டில்களாவது சாப்பிட்டால் -முடி கொட்டுவது நின்று -நன்றாக முடி வளர வாய்ப்புள்ளது ..

Post Comment

3 comments:

கருத்துரையிடுக