செவ்வாய், டிசம்பர் 21, 2010

எல்லா விதமான வலிகளை போக்கும் -சூப்பர் டானிக் -பலாரிஷ்டம்-Balarishtam


எல்லா விதமான வலிகளை போக்கும் -சூப்பர் டானிக் -பலாரிஷ்டம்-Balarishtam
(ref பைஷஜ்யரத்னாவளி - வாதவ்யாத்யதிகாரம்)


தேவையான மருந்துகளும் செய்முறையும்:-

1.            சித்தாமுட்டிவேர் பலாமூல                 5.000  கிலோ கிராம்
2.            அக்கராக்கிழங்கு அஸ்வகந்தா              5.000     “
3.            தண்ணீர் ஜல                              51.200   லிட்டர்


இவைகளை கொதிக்க வைத்து 12.800 லிட்டர் ஆகக் குறுக்கி வடிகட்டி வெல்லம் 15.000 கிலோ கிராம் மற்றும்


1.            கீரைப்பாலை விடாரி                      100  கிராம்
2.            ஆமணக்கு வேர் ஏரண்டமூல               100         “
3.            சித்தரத்தை ராஸ்னா                       50           “
4.            ஏலக்காய் ஏலா                            50           “
5.            முதியார் கூந்தல் ப்ரஸாரணி              50           “
6.            இலவங்கம் லவங்க                       50           “
7.            விளாமிச்சைவேர் உசீர                     50           “
8.            நெருஞ்சில் கோக்ஷூர                     50           “
9.            காட்டாத்திப்பூ தாதகீ புஷ்ப                 800         “
இவைகளை முறைப்படி கலந்து ஒரு மாதம் வரை வைத்திருந்து வடிகட்டவும்.அளவும் அனுபானமும்:    

15 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீர் கலந்து இருவேளைகள்.


தீரும் நோய்கள்:  

பசியின்மை (அக்னி மாந்த்ய),  
பலவீனம் (தௌர்பல்ய),
நரம்புத் தளர்ச்சி (நாடீதௌர்பல்ய),  
கீல்வாயு (வாத ரக்த),  
ஆம வாதம் (ஆமவாத),
வாத நோய்கள் (வாதஜரோக).

Post Comment

2 comments:

கருத்துரையிடுக