வெள்ளி, டிசம்பர் 10, 2010

ஓம வாட்டர் என்கிற கலப்பட மருந்து -அதிர்ச்சி தகவல்



சாதாரண வயிற்று உப்புசம் ,செரிமான கோளாறு ,அடிக்கடி மலம் கழித்தல் ,வயிறு வலி ,குழந்தைகளின் மாந்தம் ,பசியின்மை ,வயிற்று போக்கு போன்ற பிரச்சனைகளுக்கு எல்லா மக்களும் ஓம வாட்டர் என்கிற மருந்தை நாம் பயன்படுத்தி வருகிறோம்..ஓம தீநீர் என்று சித்த மருத்துவத்திலும் ,அஜமோத அர்கம் என்று ஆயுர்வேத மருந்திலும் கிடைக்கிற தயாரிக்கபடுகிற இந்த ஓம வாட்டர் இப்போது சித்த மருத்துவம் ,ஆயுர்வேத மருத்துவம் சொல்கிற –பதங்கமாதல் என்கிற வேக வைத்து ஆவியாக்கி அதிலிருந்து பெறப்படுகிற முறைகளில் செய்யப்படுவதே இல்லை என்பது தான் இந்த அதிர்ச்சி தகவல்

பின்னர் எந்த முறைகளில் ஓம வாட்டர் தயாரிக்கபடுகிறது .

ஓம வாட்டர் என்னும் ஓம தீநீர் தயாரிக்கும் ஏமாற்று முறை .முறை  ஒன்று -

ஓமத்தை நன்கு தண்ணீரில் நான்கு அல்லது  ஐந்து நாட்கள்  ஊற வைத்து. பின்னர் அதை கொதிக்க வைத்து  வடிகட்டி அதனில் ஓமத்தின் எசன்ஸ் என்னும் செயற்கை மணமூட்டியை  சில துளிகள் சேர்த்து மிக எளிதாக தயாரிக்கிறார்கள் .அவர்கள் சேர்கிற எந்த ஓம எசன்ஸ் -வலிகளுக்கு பயன்படுத்த கூடிய வெளி பிரயோகமாக மட்டுமே பயன்படுத்த கூடியதும் இதில் சேர்க்க படுகிறது என்பது வேதனையான விஷயம் .








ஓம வாட்டர் தயாரிக்கும் குறுக்கு வழி முறை -இரண்டு 


தைமால்  என்கிற ( கால் வலிக்கு தேய்க்கும் வலி நிவாரண பாமில் உள்ள பொருள் இது )   ஓம உப்பு  .இது பொதுவாக  வெளியே வலிக்கான தைலம் தயாரிக்க மட்டுமே பயன்படுத்த படுகிறது


இந்த ஓம உப்பை  பதினைந்து அல்லது இருபது லிட்டர் கொதிக்க வைத்து மிதமான சூட்டில் உள்ள வெந்நீரில் கலந்து வைத்து -நூறு மிலி பாட்டிலில் வைத்து ரூபாய் பத்து முதல் நாற்பது ரூபாய் வரை நூறு மிலி யை விற்கிறார்கள் ..ஆனால் மொத்த பதினைந்து அல்லது இருபது லிட்டர் ஓம வாட்டருக்கு ஆகும் செலவு  வெறும் முப்பது ரூபாய் என்றால் நம்ப முடிகிறதா ?


செயற்கையான –போலி ஓம வாட்டரால் ஏற்படுகிற பக்க விளைவுகள் என்ன?

தைமால் இயற்கையான பொருளாக இல்லாமல்  கலப்பட வேதிப்பொருளாக  அதிகம் கலந்தால் வயிறு எரியும் ..வயிறு புண்ணாகும் ..மேலும் செரிமான கோளாறுகள் மட்டுமல்லாது -பல நோய்களை நாமே வர வைத்து கொள்வோம்

தைமால் யார் பயன்படுத்த கூடாது  



குறிப்பு -உண்மையிலே ,தைமால்  -இயற்கையிலிருந்து கிடைத்தாலும் -நிச்சயமாக அவை ஓம வாட்டர் செய்ய சிறந்த வழி இல்லை ..இது ஒரு குறுக்கு வழி 



ஆயுர்வேதம் மேலே சொன்ன வழிகளில் ஓம திராவகத்தை தயாரிக்க சொல்ல வில்லை ...பின்னர் எப்படி தயாரிக்க சொல்கிறது


ஆயுர்வேதம்    சித்த மருத்துவம் பதங்கமாதல் என்கிற டிஸ்டிலேஷன் படி தான் ஓம தீநீர்  அல்லது  அஜமோத அர்க்கம்    தயார் செய்ய  சொல்லியிருக்கிறது...இங்கே சொடக்குங்கள் ..






Post Comment

5 comments:

Chitra சொன்னது…

My! My! :-(

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ சொன்னது…

இன்னாலில்லாஹி...

கதிகலங்க வைக்கும் பதிவு.
அவசியமான 'விக்கிலீக்' வகை பதிவு.

பெரும்பாலும் ஓமத்தண்ணீர் வாங்குவதே குழந்தைகளுக்காகத்தான். அதிலேயே குறுக்குவழியில் கலப்படமா? போலிக்கு எதிராய் அனைவரும் உஷாராக வேண்டிய தருணமிது.

ஒரிஜினல் ஓம நீர் தயாரிப்பு செய்முறையையும் உங்கள் லிங்கில் படித்தேன். எவ்வளவு சிரத்தையுடன் நேரம் எடுத்து பொறுமையுடன் செய்ய வேண்டிய அரிய மருந்தை இப்படி பணத்துக்காக விஷமாக்கி விட்டனரே கயவர்கள்..!

இதனை வாங்குவோர் சுலபமாய் இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்து கொள்ள என்ன டெக்னிக்? தயவு செய்து அதையும் சொல்லிவிட்டால் ஏமாறாமல் இருக்க உதவும். ரொம்பவும் உபயோகமாகவும் இருக்கும்.

மச்சவல்லவன் சொன்னது…

இந்த பதிவை படித்தபிறகு ஓமத்தண்ணீர் வெளியே வாங்கவேமாட்டேன்.வீட்டில் இருந்த ஓமத்தண்ணீபாட்டிலை வெளியே வீசிவிட்டேன்.
மிக்க நன்றிசார்.

curesure Mohamad சொன்னது…

@முஹம்மத் ஆஷிக்நன்றி நண்பரே ..
உண்மையான அறிவே நல்லது ..
உணமைக்கும் போலிக்கும் பல வித்யாசம் உண்டு -
முதலில் நாக்கில் ஒரு விறு விறுப்பு போலியில் அதிகம்
போலி விலை மலிவு .
போலி அதிகமான மணத்தை தரும் ..
போலி தான் அதிகம் கிடைக்கிறது ..

curesure Mohamad சொன்னது…

@மச்சவல்லவன்நண்பரே ..நல்லது

கருத்துரையிடுக