ஞாயிறு, டிசம்பர் 19, 2010

பெண்களின் அனைத்து நோய்க்கும் சர்வ நிவாராணி -அசோகாரிஷ்டம்-Asokarishtam


பெண்களின் அனைத்து நோய்க்கும் சர்வ நிவாராணி -அசோகாரிஷ்டம்
அசோகாரிஷ்டம்-Asokarishtam
(Ref-பைஷஜ்யரத்னாவளி - ஸ்த்ரீரோகாதிகாரம்)


தேவையான மருந்துகளும் செய்முறையும்:-

1.            அசோகப்பட்டை அசோக த்வக்              5.000  கிலோ கிராம்
2.            தண்ணீர் ஜல                               51.200   லிட்டர்
3.            வெல்லம் குட                             10.000 கிலோ கிராம்

முதலிரண்டு சரக்குகளையும் நன்கு கொதிக்க வைத்து 12.800 லிட்டர் ஆகக் குறுக்கி வடிகட்டி வெல்லம் சேர்த்து அத்துடன் 

1.            கருஞ்சீரகம் க்ருஷ்ண ஜீரக                 50  கிராம்
2.            கோரைக்கிழங்கு முஸ்தா                  50           “
3.            சுக்கு சுந்தீ                                50           “
4.            மரமஞ்சள் தாருஹரித்ரா                   50           “
5.            ஆம்பல்கிழங்கு உத்பலகந்த                50           “
6.            கடுக்காய் (கொட்டை நீக்கியது)- ஹரீதகீ      50           “
7.            தான்றிக்காய் (கொத்டை நீக்கியது)- பிபீதகீ      50           “
8.            நெல்லிமுள்ளி ஆமலகீ                    50           “
9.            மாம்பருப்பு ஆம்ராஸ்தி மஜ்ஜ              50           “
10.          ஜீரகம் ஜீரக                               50           “
11.          ஆடாதோடை வாஸாபத்ர                  50           “
12.          சந்தனம் சந்தன                            50           “
13.          காட்டாத்திப்பூ தாத்கீபுஷ்ப                  800         “


இவைகளை ஒன்றிரண்டாகப் பொடித்துப் போட்டுக் காட்டாத்திப்பூ சேர்த்து சீலிலமண் செய்து ஒரு மாதம் வரை வைத்திருந்து வடிகட்டவும்.


அளவும் அனுபானமும் :  

  15 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீருடன் இரு வேளைகள்.

  தீரும் நோய்கள் :

                பெரும்பாடு (அஸ்ரித்தர), வெள்ளை படுதல் (ஸ்வேதப்ரதர), வெட்டை, சூதக சூலை (ஆர்த்தவ சூல, யோனி ருஜா போன்றன), பெண்களின் மலட்டுத் தன்மை (நஷ்ட புஷ்பக) போன்ற பெண்களின் தீவிர நோய்கள் (தீவ்ரஸ்த்ரீ ரோக).

                சூதகக்கட்டு (நஷ்டார்த்தவ), சூதக சூலை (ஆர்த்தவ சூல) போன்றவற்றில் அசோகாதி வடியுடன் தரப்படுகிறது. பெண்களின் மலட்டுத்தன்மைக்கு (நஷ்ட புஷ்பக) சதாவரீ ரஸாயனம், அஸ்வகந்தாரிஷ்டத்துடன் தரப்படுகிறது. 

வலியும், பெருமளவில் ரத்தப் போக்குடனும் கூடிய வீட்டு விலக்குக் கோளாறுகளில் பப்பூலாரிஷ்டத்துடன் தரப்படுகிறது. 

வெள்ளப் போக்கில் (ஸ்வேத ப்ரதர) அப்ரகபஸ்ம, அயநிமிளை, காந்தம், சீந்தில், சர்க்கரை, இலவங்கப்பொடி, தாளீச பத்ரி, பனைவெல்லம், அமுக்கரா கிழங்கு தண்ணீர் விட்டான் கிழங்கு ஆகியவற்றுடன் தரப்படுகிறது. 

இது கருப்பை மற்றும் அதைச் சார்ந்த தசைகளுக்கு வலுவூட்டுவதுடன் மாதாந்திர ருதுப் போக்கை ஒழுங்கு படுத்துகிறது.

Post Comment

6 comments:

Chitra சொன்னது…

நிறைய தகவல்கள்.... பகிர்வுக்கு நன்றி.

மச்சவல்லவன் சொன்னது…

நிறைய மருத்துவ குறிப்புகள் தொடந்து எழதிவரும் உங்களின் சேவைக்கு, மிக்க நன்றி சார்.

Gayathri சொன்னது…

மிகவும் உபயோகமான குறிப்பு, இவை அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்குமா

curesure Mohamad சொன்னது…

@Gayathri
நன்றி எல்லா சித்த ஆயுர்வேத மருந்து கடைகளில் கிடைக்கும் ..மருந்தை குறைந்த பட்சம் மூன்று மாதமாவது சாப்பிடனும் ...

curesure Mohamad சொன்னது…

@மச்சவல்லவன்நன்றி பாராட்டுக்கள் ஊக்கபடுத்துகின்றது

Jayakumar சொன்னது…

very very thanks for ur website..

கருத்துரையிடுக