குழந்தைகளின் அனைத்து நோய்களுக்கு -ஒரே சிறந்த மருந்து
அரவிந்தாஸவம்-Aravindasavam
அரவிந்தாஸவம்-Aravindasavam
(Refn -பைஷஜ்யரத்னாவளி - பாலரோகாதிகார)
தேவையான மருந்துகளும் செய்முறையும்:-
1. நன்கு கொதித்து ஆறிய தண்ணீர் – ஜல 25.600 லிட்டர்
2. சர்க்கரை – ஸர்கரா 5.000 கிலோ கிராம்
3. தேன் – மது 2.500 “
4. திராக்ஷை – த்ராக்ஷா 1.000 “
முதல் மூன்றையும் நன்கு கலந்து அத்துடன் திராக்ஷையை இடித்துச் சேர்த்துப் பின்னர் கீழே குறிப்பிடப்படும்.
1. தாமரைப்பூ – கமல புஷ்ப (ரக்த கமல) 50 கிராம்
2. விளாமிச்சை வேர் – உஸுர 50 “
3. குமிழ் வேர் – காஷ்மரீ 50 “
4. நீல ஆம்பல்பூ – நீலோத்பல 50 “
5. மஞ்சட்டி – மஞ்ஜிஷ்டா 50 “
6. ஏலக்காய் – ஏலா 50 “
7. சிற்றாமுட்டி – பலா 50 “
8. ஜடாமாஞ்சில் – ஜடாமாம்ஸீ 50 “
9. கோரைக்கிழங்கு – முஸ்தா 50 “
10. நன்னாரி – ஸாரிவா 50 “
11. கடுக்காய்த்தோல் – ஹரீதகீ 50 “
12. தான்றிக்காய்த்தோல் – பிபீதகீ 50 “
13. வசம்பு – வாச்சா 50 “
14. நெல்லிமுள்ளி – ஆமலகீ 50 “
15. கிச்சிலிக்கிழங்கு – ஸட்டீ 50 “
16. நன்னாரி(கருப்புவகை) – க்ருஷ்ணஸாரிவா 50 “
17. அவுரிவேர் – நீலீ 50 “
18. பேய்ப்புடல் – பட்டோலா 50 “
19. பர்ப்பாடகம் – பர்பாடக 50 “
20. மருதம்பட்டை – அர்ஜுனத்வக் 50 “
21. இலுப்பைப்பூ – மதூகபுஷ்ப 50 “
22. அதிமதுரம் – யஷ்டீமது 50 “
23. மருவு – மருவக 50 “
24. காட்டாத்திப்பூ – தாதகீபுஷ்ப 800 “
முதல் இருபத்து மூன்று சரக்குகளையும் ஒன்றிரண்டாகப் பொடித்து முன் கூறியதில் போட்டுக் காட்டாத்திப்பூ சேர்த்து சீலை செய்து ஒரு மாதம் வரை வைத்திருந்து வடிகட்டவும்.
அளவும் அனுபானமும் :
15 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீருடன் இரு வேளைகள்.
தீரும் நோய்கள் :
வலுவின்மை (பலக்ஷய), இளைப்பு (கார்ஸ்ய), ஜீரணக் குறைவு (அக்னிமாந்த்ய), குளிர்ச்சி உண்டாக்கி.
குறிப்பு :
(i) குழந்தைகளுக்கு உண்டாகும் நோய்களில் இது விசேஷமாக உபயோகப்படுகிறது.
(ii) சிலர் கருஞ்சிவதையை (த்ரிவ்ருத்) சேர்ப்பது வழக்கம்.
(iii)
இப்போதெல்லாம் குழந்தைகளின் எல்லா நோய்களுக்கும் -ஆன்டி பயாடிக் என்று உடனே கொடுத்து விடுகிறார்கள் ..அது மிக பெரிய தவறு ..நோய் கட்டுக்குள் வரவில்லை ..நோயின் தீவிரம் கிருமிகளினால் ஏற்பட்டுள்ளது என்று தெரிந்து -நல்ல கைதேர்ந்த குழந்தை மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே ஆன்டி பயாடிக் கொடுக்கப்பட்ட வேண்டும் ..
உங்கள் குழந்தையின் எதிப்பு சக்தி அதிகமாக்க வேண்டுமா ?
உங்கள் குழந்தைக்கு பசி இல்லையா ?
உங்கள் குழந்தை அடிக்கடி சளி ,காய்ச்சல் வருகிறதா ?
உங்கள் குழந்தையின் நோய் உடனே சரியாகாமல் -நாள் பட்டு கஷ்டபடுத்தி குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கிறதா ?
உங்கள் குழந்தை மந்தாமாக இருக்கிறதா ?
உங்கள் வீட்டிலேயே பக்க விளைவில்லாத ,அங்கில மருந்தோடு இணைந்து கொடுத்தாலும் பிரச்சினை இல்லாத -ஆயுர்வேத குழந்தை மருந்து வேண்டுமா ?
அது தான் -அரவிந்தாசவம் -
உங்கள் குழந்தையின் எதிப்பு சக்தி அதிகமாக்க வேண்டுமா ?
உங்கள் குழந்தைக்கு பசி இல்லையா ?
உங்கள் குழந்தை அடிக்கடி சளி ,காய்ச்சல் வருகிறதா ?
உங்கள் குழந்தையின் நோய் உடனே சரியாகாமல் -நாள் பட்டு கஷ்டபடுத்தி குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கிறதா ?
உங்கள் குழந்தை மந்தாமாக இருக்கிறதா ?
உங்கள் வீட்டிலேயே பக்க விளைவில்லாத ,அங்கில மருந்தோடு இணைந்து கொடுத்தாலும் பிரச்சினை இல்லாத -ஆயுர்வேத குழந்தை மருந்து வேண்டுமா ?
அது தான் -அரவிந்தாசவம் -
1 comments:
தொடந்து பயனுள்ள மருத்துவ குறிப்புகளை, எங்களுக்காக எழுதிவரும் உங்களின் சேவைக்கு நன்றிகள் சார்.
கருத்துரையிடுக