வியாழன், டிசம்பர் 09, 2010

ஓமவாட்டர் என்ற பெயரில் கடைகளில் கிடைப்பது என்ன ?

ஓமவாட்டர் என்ற பெயரில் கடைகளில் கிடைப்பது என்ன ?-Oma water

பொதுவாக ஓமத்தை -நாம் மேலே சொன்ன அர்க்கமாக்கும் நிகழ்ச்சியில் சொன்னது போல் தயாரிக்கவேண்டும் .
அதாவது அஜமோதார்க்கம் என்னும் ஆயுர்வேத மருந்தே ஓம வாட்டர் அல்லது ஓமதீநீர் என்பதாகும் ...

ஆனால் உண்மையில் மார்க்கெட்டில் கிடைப்பது என்ன ?..
நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் ஓம உப்பை -வெந்நீரில் கலந்து (ஓமத்தை தண்ணீரில் கலந்து -ஆவியாக்கி பதங்கமாக்காமல் -அர்க்க எந்திரம் இல்லாமல் )-சர்வ சாதாரணமாக விற்று விற்கிறார்கள் .நல்ல ஓம உப்பாவது பரவாயில்லை -தைமால் போன்ற வேதி பொருள் அடங்கிய -கெமிக்கலை தான் இப்போது எசன்ஸ் கடைகளிலும் விற்கிறார்கள் ..

இதனால் பக்க விளைவுகள் உண்டா என்று -ஆராச்சியில் தான் தெரிய வேண்டும் .
ஆனால் நிச்சயம் எந்த விளைவை நினைத்து குடிக்கிறோமோ அது நிச்சயம் பலிக்கபோவதில்லை ..

எல்லாம் ஏமாற்று வேலை ஆகி விட்டது -
பொய் உண்மை போல் ஆகிவிட்டது ..

குழந்தைகளுக்கு வயிற்று போக்கு -மாந்தம் என்று -இந்த கலப்பட ஓம வாட்டரை என்ன கொடுத்தால் தகுமா ?

Post Comment

4 comments:

கருத்துரையிடுக