திங்கள், டிசம்பர் 13, 2010

வாயு -வயிற்று பிரச்சனைகளை குணபடுத்தும் -அபயாரிஷ்டம்-Abayarishtam


வாயு -வயிற்று பிரச்சனைகளை குணபடுத்தும் -அபயாரிஷ்டம்-Abayrishtam
( Ref-பைஷஜ்யரத்னாவளி - அர்சோரோகாதிகார)



தேவையான மருந்துகளும் செய்முறையும்:-
1.            கடுக்காய் (விதை நீக்கியது) ஹரீதகீ   5.000 கி.கிராம்
2.            திராக்ஷை த்ராக்ஷா                   2.500     “
3.            வாயுவிடங்கும் விடங்க              0.500     “
4.            இலுப்மைப்பூ மதூகபுஷ்ப             0.500     “
5.            வெல்லம் குட                  5.000      “
6.            தண்ணீர் ஜல                   51.200   லிட்டர்


                முதல் நான்கு சரக்குகளையும் நீரில் கொதிக்க வைத்து 12.800 லிட்டர் ஆக்க் குறுக்கி வடிகட்டி வெல்லம் சேர்த்து அத்துடன்


1.            நெருஞ்சில் கோக்ஷூர                100  கிராம்
2.            கருஞ் சிவதை த்ரிவ்ருத்              100     “
3.            கொத்தமல்லிவிதை தான்யக          100     “
4.            காட்டாத்திப்பூ தாதகீபுஷ்ப             100      “
5.            பேய்த் தும்மட்டி இந்த்ரவாருணிமூல   100      “
6.            செவ்வியம் சவ்ய                    100      “
7.            சதகுப்பை - ஸதபுஷ்ப                 100         “
8.            சுக்கு சுந்தீ                           100         “
9.            நேர்வாளதேவர் தந்தீமூல             100         “
10.          இலவம்பிசின் சால்மலீநிர்யாஸ       100         “



இவைகளை ஒன்றிரண்டாகப் பொடித்து போட்டு ஒரு மாதம் வரை வைத்திருந்து வடிகட்டவும்.

அளவும் அனுபானமும்:    
15 முதல் 30 மில்லிலிட்டர் வரை சம அளவு தண்ணீருடன் இரு வேளைகள்.


தீரும் நோய்கள்: மூலம் (அர்ஷ), மலச்சிக்கல், (மலபந்த (அ) ஆனாக (அ) வர்க்கோ விபந்த), செரியாமை (அக்னிமாந்த்ய), வயிற்றுப் பொருமல் (ஆத்மான).

Post Comment

1 comments:

Chitra சொன்னது…

Thank you.

கருத்துரையிடுக