புதன், டிசம்பர் 15, 2010

இதய நோய்க்கு அருமருந்தாகும் -அர்ஜுனாரிஷ்டம்-Arjuna Aristham


இதய நோய்க்கு அருமருந்தாகும் -அர்ஜுனாரிஷ்டம்(பார்த்தாத்யரிஷ்டம்)-Arjuna Arishtam-paarthaadyaarishtam

(ref -பைஷஜ்ய ரத்னாவளி ஹ்ருத்ரோகாதிகாரம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:-
 
1.            மருதம்பட்டை அர்ஜுனத்வக்     5.000     கி.கிராம்
2.            திராக்ஷை த்ராக்ஷா             2.500     “
3.            இலுப்பைப்பூ மதூகபுஷ்ப         1.000     “
4.            வெல்லம் குட            5.000     “
5.            காட்டாத்திப்பூ தாதகீபுஷ்ப       1.000     “
6.            தண்ணீர் ஜல             51.200     லிட்டர்


முதல் மூன்று சரக்குகளையும் நன்கு கொதிக்க வைத்து 12.800 லிட்டர் ஆகக் குறுக்கி வடிகட்டி வெல்லம் மற்றும் காட்டாத்திப்பூ போட்டு ஒரு மாதம் வரை வைத்திருந்து வடிகட்டவும்.


அளவும் அனுபானமும்:-     10 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீருடன் இரு வேளைகள்.


தீரும் நோய்கள்:- இதய நோய்கள் (ஹ்ருத்ரோக) மற்றும் நுரையீரல் நோய்கள் (புப்புஸரோக). பொதுவான பலவீனம் (பலக்ஷய.)
குறிப்பு:    இஃ து  பார்த்தாத்யரிஷ்ட என்ற பெயரிலும் வழங்கி வருகின்றது.


குறிப்பு -இதில் வெல்லம் சேர்ந்திருப்பதால் -சர்க்கரை இதய நோயாளிகள் இந்த அரிஷ்டத்தை உபயோகிக்கும் போது கவனம் தேவை ..

இந்த அர்ஜுனா அரிஷ்டம் -இதய அடைப்பை நீக்கவும் ,இதயத்தின் சுருங்கி விரியும் தன்மை (EJECTION FACTOR-)அதிகபடுத்தவும் பயன் படுத்த படுகிறது

Post Comment

1 comments:

கருத்துரையிடுக