வெள்ளி, டிசம்பர் 24, 2010

மேக நோயை விரட்டும் -பப்பூலாரிஷ்டம்-Baboolarishtam


மேக நோயை விரட்டும் -பப்பூலாரிஷ்டம்-Baboolarishtam

(Ref-சாரங்கதர ஸம்ஹிதா - மத்யமகண்ட)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:-

1.            கருவேலம்பட்டை பப்பூலத்வக்              10.000   கி.கிராம்
2.            தண்ணீர் ஜல                               51.200   லிட்டர்
இவைகளை கொதிக்க வைத்து 12.800 லிட்டர் ஆகக் குறுக்கி வடிகட்டி வெல்லம் 15.000 கிலோ கிராம் மற்றும்

1.            திப்பிலி பிப்பலீ            100  கிராம்
2.            ஜாதிக்காய் ஜாதீபல             50           “
3.            தக்கோலம் தக்கோல      50           “
4.            ஏலக்காய் ஏலா            50           “ 
5.            இலவங்கப்பட்டை லவங்கத்வக்  50           “
6.            இலவங்கப்பத்திரி லவங்கபத்ரி   50           “
7.            சிறு நாகப்பூ நாககேஸர         50           “
8.            இலவங்கம் லவங்க             50           “
9.            மிளகு மரீச்ச                   50           “
10.          காட்டாத்திப்பூ தாதகீபுஷ்ப       100         “

இவைகளை முறைப்படி கலந்து ஒரு மாதம் வரை வைத்திருந்து வடிகட்டவும்.

அளவும் அனுபானமும்:  
 10 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீர் கலந்து இருவேளைகள்.

தீரும் நோய்கள்: 

 வயிற்றுப் போக்கு (அதிஸார), நாட்பட்ட பேதி (அ) பெருங் கழிச்சல் (கிரஹணீ), நீரிழிவு (ப்ரமேஹ, மதுமேஹ), குட்டம் (குஷ்ட), இருமல் (காஸ), இழைப்பு (அ) இரைப்பு (ஸ்வாஸ) எலும்புருக்கி நோய் (க்ஷயம்), குருதிக் குறைபாடுகள் (ரத்த தோஷங்கள்). சீழ் மேகத்தில் (பூயமேஹ) 4 முதல் 8 மடங்கு நீரில் இதனைச் கலந்து ஆண், பெண் குறிகளைக் கழுவ உபயோகிக்கலாம்.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக