வாந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஆகஸ்ட் 06, 2013

எச் .பைலோரை என்னும் வயிறு புண்ணை ஏற்படுத்தும் கிருமியை அழிக்க வல்ல - லீலாவிலாஸ ரஸ -LEELA VILASA RASA


எச் .பைலோரை என்னும் வயிறு புண்ணை ஏற்படுத்தும் கிருமியை அழிக்க வல்ல -
லீலாவிலாஸ ரஸ   -LEELA VILASA RASA                     
(Ref-பைஷஜ்யரத்னாவளி - அம்லபித்தாதிகார)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            சுத்தி செய்த ரஸம் – ஷோதித ரஸ           10 கிராம்
2.            சுத்தி செய்த கந்தகம் – ஷோதித கந்தக       10           “
இவைகளை நன்கு அறைத்துக் கறுத்த கஜ்ஜிளி செய்து கொண்டு அத்துடன்
3.            தாமிரபற்பம் – தாம்ர பஸ்ம            10 கிராம்
4.            அப்பிரக பற்பம் – அப்ரக பஸ்ம         10           “
5.            அயபற்பம் – லோஹ பஸ்ம            10           “

இவைகளையும் சேர்த்தரைத்து,

6.            நெல்லிக்காய்ச்சாறு – ஆமலகீ ஸ்வரஸ  போதுமான அளவு
7.            தான்றிக்காய் கஷாயம் – பிபீதகீ கஷாய போதுமான அளவு கொண்டு மூன்று
                                                                               
நாட்கள் அரைத்துப் பின்னர்     
                                                                                         
8.            கரிசலாங்கண்ணி சாறு – ப்ருங்கராஜஸ்வரஸ கொண்டு ஒரு முறை பாவனை செய்து உலர்த்திப் பதத்தில் ரவைகளாக்கி 100 மி.கி. மாத்திரைகள் ஆக்கவும்.

அளவு:           

1 முதல் 4 மாத்திரைகள்.

தீரும் நோய்கள்:
 
வயிற்றில் புளிப்பு நீர் (அமிலம் அதிகமாக சுரத்தல் (அம்ல பித்தம்), வாந்தி (சர்தி), மார்பு எரிச்சல் (ஹ்ருத்தாக).




தெரிந்து கொள்ள வேண்டியவை ..

1. அதிகமான வாய் புளிப்பு -புளிப்பு சுவைக்கு இந்த மருந்தை -காமதுக  ரச மற்றும் பாஸ்கர லவன சூரணத்துடன் கலந்து தந்து நல்ல பலனை பெறலாம் ..

2.கரிசாலை சாறு உள்ளதால் நிச்சயமாக எந்த பக்க விளைவுகளும் ஏற்படுத்தாது ..

3.வயிற்று  புண்ணை  ஏற்படுத்துவதாக கருதப்படும் எச் .பைலோரை என்னும் பாக்டீரியாவை அழிக்க  இந்த மருந்துக்கு சக்தி உள்ளது என்பது நிச்சயம் ..

4.நெஞ்சு வலி போல் தோன்றும் வயிறு புண்ணுக்கு தக்க துணை மருந்தோடு தர நல்ல பலன் தரும்

Post Comment

வியாழன், ஜனவரி 19, 2012

உணவு விஷமானதால் ஏற்படும் -காய்ச்சல் மற்றும் வாந்தி பேதிக்கு - ஸஞ்சீவினீ வடி -Sanjeevani vati


உணவு விஷமானதால் ஏற்படும் -காய்ச்சல் மற்றும் வாந்தி பேதிக்கு -
ஸஞ்சீவினீ வடி -Sanjeevani vati
(ஸாரங்கதரஸம்ஹிதா - மத்யமகண்ட)

தேவையான மருந்துகள்:

1.            வாயுவிடங்கம் – விடங்க                         10 கிராம்
2.            சுக்கு – சுந்தீ                                     10 கிராம்
3.            திப்பிலி – பிப்பலீ                                  10           “
4.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) – ஹரீதகீ பலத்வக்       10           “
5.            தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) – பிபீதகீ பலத்வக்     10           “
6.            நெல்லிமுள்ளி – ஆமலகீ பலத்வக்                 10           “
7.            வசம்பு – வச்சா                                  10           “
8.            சீந்தில் கொடி – குடூசீ                             10           “
9.            சேராங்கொட்டை (சுத்தி செய்தது) – ஷோதித பல்லாதக   10           “
10.          நாபி (சுத்தி செய்தது) – ஷோதித வத்ஸநாப              10           “

செய்முறை:     

 இவைகளைச் சேராங்கொட்டை, நாபி நீங்கலாகப் பொடித்துச் சலித்துக் கல்வத்திலிட்டு பசுவின் மூத்திரம் (கோமூத்திர) கொண்டு அரைக்கவும். சேராங்கொட்டை, நாபி இவைகளைத் தனியே சிறிது கோமூத்திரத்தில் ஊறவைத்து நன்கு அரைத்துச் சேர்த்து எல்லாவற்றையும் பசுவின் மூத்திரம் விட்டரைத்து 50 மில்லி கிராம் மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி பத்திரப்படுத்தவும்

.
தீரும் நோய்கள்:  



செரியாமை (அஜீர்ண), குன்மம் (குல்ம), வாந்திபேதி (விஷுஸிகா), காய்ச்சல் (ஜ்வர), பாம்புக்கடி (ஸர்ப்பதம்ஷ்ட்ட).

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. புட் பாய்சன் என்னும் உணவு நஞ்சாகி போதலால் ஏற்படும் காய்ச்சல் ,வாந்தி பேதி போன்றவற்றை சரி செய்யும்
  2. நாள்பட்ட காய்ச்சலுக்கும் இந்த மருந்து நன்றாக வேலை செய்யும்
  3. சேராங்கொட்டை இருப்பதால் இந்த மருந்து -கட்டிகளை குறைக்க -இன்பெக்டட் காயங்கள் இந்த மருந்தால் மாறும்
  4. ஆண்டி பயாடிக் போல இந்த மருந்து பயன்படும்

Post Comment

செவ்வாய், மே 24, 2011

மசக்கைக்கு மருந்தாகும் -மாதுலுங்க ரசாயனம்


மசக்கைக்கு மருந்தாகும் -மாதுலுங்க ரசாயனம்

(மாதீபல ரஸாயனம்)
                                                                                                    
தேவையான மருந்துகள்:

1.            துருஞ்சிப்பழச் சாறு – மாதுலங்க ரஸ   - 500 கிராம்
2.            எலுமிச்சம் பழச்சாறு – ஜம்பீர ரஸ - 500    “
3.            இஞ்சிச் சாறு – ஆர்த்ரக ரஸ      - 125    “
4.            இந்துப்பு – ஸைந்தவலவண       - 50       “
5.            சர்க்கரை – ஸர்க்கர               - 1250  “

செய்முறை:      

சாறு வகைகளை தனித்தனியே வடிகட்டிக் கலந்து சர்க்கரை சேர்த்துச்சிறிது சூடாக்கி வடிகட்டிக் கொதிக்க வைத்துப் பானகபாகத்தில் இறக்கி ஆறிய பின்னர் பொடித்து சலித்த இந்துப்பு சேர்த்து வைத்துக் கலந்து பத்திரப்படுத்தவும்.


அளவும் அனுபானமும்:    

5 முதல் 10 கிராம் வரை தண்ணீருடன் இரு வேளைகள் உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன்னர்.


தீரும் நோய்கள்:  

செரியாமை (அஜீர்ண), பசியின்மை (அக்னிமாந்த்ய), ருசியின்மை (அரோசக), வாந்தி (சர்தி), குமட்டலும், மயக்கம் (அ) தலைசுற்றலும் (ப்ரம), பித்தம் அதிகரித்தல், அதிக உமிழ்நீர் ஊறுதல் (ப்ரஸேக).

தெரிந்து கொள்ள வேண்டியது ..
  1. தயாரிப்பது மிக எளிது
  2. கர்ப்பிணிகளின் முதல் நான்கு மாத காலத்தில் வரக்கொடிய குமட்டல் ,வாந்தி ,பசியின்மை போன்ற உபாதைகளை முற்றிலும் சரி செய்யும் -பக்க விளைவுகள் இல்லாத மருந்து
  3. கர்ப்பிணிகள் எந்த விதமான ஆங்கில மருந்தை -போலிக் ஆசிட் மாத்திரைகள் ,கால்சியம் மாத்திரைகள் சாப்பிடும் போதும் இதை பயம் இல்லாமல் சாப்பிடலாம்
  4. எனக்கு தெரிந்த பல ஆங்கில மகப்பேறு மருத்துவர்கள் -தனக்காகவும் ,தன்னுடைய மகள் ,பேத்திகளுக்காகவும் -எங்களிடம் வாங்கி உபயோகித்ததுண்டு ..(ஆனால் அவர்கள் அவர்களுடைய நோயாளிகளுக்கு ஆங்கில மருந்தை தான் வாந்தி நிற்க பயன் படுத்துகிறார்கள் )

Post Comment

திங்கள், ஏப்ரல் 18, 2011

குழந்தை மருத்துவத்தில் உதவும் நல்ல மருந்து -ச்ருங்கியாதி சூர்ணம்- Srungyaadhi choornam


குழந்தைகளின் நோய் போக்கும் -குழந்தை மருத்துவத்தில் உதவும் நல்ல மருந்து -ச்ருங்கியாதி சூர்ணம்- Srungyaadhi choornam
  (ref-சாரங்கதர சம்ஹிதா - மத்யமகண்ட)


தேவையான மருந்துகள்:
1.            கர்கடகசிருங்கி – கற்கடச்ருங்கி         1 பாகம்

2.            அதிவிடயம் – அதிவிஷா               1  பாகம்

3.            திப்பிலி – பிப்பலீ                      1   பாகம்



செய்முறை:     

 இவைகளை நன்கு பொடித்துச் சலித்து ஒன்று கலந்து பத்திரப்படுத்தவும்.


அளவும் அனுபானமும்:      

1-2 கிராம் வரை தேனுடன் இரு வேளைகள் கொடுக்கவும்.


தீரும் நோய்கள்: 

  
முக்கியமாகக் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் (காஸ),  






காய்ச்சல் (ஜ்வர),  

வாந்தி (சர்தி).


குழந்தைகளின் முக்கியமாக -ஒரு வயது அல்லது மூன்று வயதுக்குள் உள்ள குழந்தைகளின் பொதுவாக அடிக்கடி ஏற்படும் ,இருமல் ,காய்ச்சல் ,செரியாமை ,செரியா வாந்தி போன்ற பிரச்னைகளுக்கு இது அற்புத மருந்து ..

ஆயுர்வேதத்தில் சிறு குழந்தைளின் நோய்களை இந்த ஒரு மருந்தை கொண்டே நீக்கி விட முடியும்  என்பது திண்ணம் ..

குறிப்பு -

அதி விடயம் என்ற அற்புத மருந்து -மிக மிக விலை உயர்ந்து ..அதாவது ஒரு கிலோ குறைந்த பட்சம் நாலாயிரத்தை தாண்டும் ,கலப்பட வாதிகள் இதற்க்கு பதில் நாபி கிழங்கை தந்து ஏமாற்றிவிடவும் வாய்ப்பு அதிகம் எனவே -எச்சரிக்கை தேவை ..என்னிடம் உள்ள அதி விடய கிழங்கின் படங்களை வருகிற பதிவில் காலம் கருதி வெளிவிடுகிறேன் ..

விலை உச்சத்தின் காரணமாக -கிலோ வெறும் இருபது ரூபாய்க்கு கிடைக்கும் கோரை கிழங்கை -சேர்க்கும் பல கம்பெனிகளை எனக்கு தெரியும் (இப்படி சேர்த்தால் மருந்து எப்படி வேலை செய்யும்).

அதிவிடயம் பல மருந்துகளில் ,மகா ராச்னாதி கசாயம் ,இன்னும் பல பல மருந்துகளில் முக்கியமான பொருளாக சேர்வதுண்டு
.

அதிவிடயத்தை -நீர்வாதத்திர்க்கு -ஆம வாதம் ,வாத ரக்தம் -போன்றவற்றிற்கு நாங்கள் விலை கருதாது பயன்படுத்துவததுண்டு .

 

Post Comment