என்றும் இளமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
என்றும் இளமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, மே 16, 2020

வஜ்ரம் ( வைரம்) போன்ற உடலை பெற....*


வஜ்ரம் ( வைரம்) போன்ற உடலை பெற....*


டாக்டர்.J. பிரியங்கா ., BAMS.,

டாக்டர்.அ. முகமது சலீம் ., BAMS.,MSC., MBA.

ஆயுர்வேத மருத்துவர்கள்




நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை..

பஞ்சகர்ம சிகிச்சைகளுள் (வமனம், விரேசனம், நஸ்யம், வஸ்தி, ரக்தமோக்ஷணம்) தினமும் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுவது (தினச்சரியை அத்யாயம் மூலம்) நஸ்ய சிகிச்சை மட்டுமே ...



நாசி துவாரம் வழியாக கொடுக்கப்படும் சிகிச்சை நஸ்யம்... அதாவது எண்ணெய் துளிகள் / மூலிகை சாறு / மூலிகை பொடி / தூமம் (herbal smoke) போன்றவற்றை நாசி துவாரம் வழியாக செலுத்துவது.



கழுத்து மற்றும் சிரசில் உள்ள நோய்களை சரிசெய்ய ஆயுர்வேத ஆச்சார்யாக்கள் (முனிவர்கள்) கையாண்ட குறுக்குவழி என்றே கூறலாம்.



ப்ரதிமர்ஷ நஸ்யம் என கூறப்படும் எளிய முறை நஸ்ய சிகிச்சையை அனைவரும் அவரவர் வீடுகளில் சுயமாகவே எடுத்துக்கொள்ளலாம்.. பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை அனைத்துவயதினரும் எல்லா காலங்களிலும் வெறும் பத்தே நிமிடங்களில் தினமும் ஒன்று அல்லது இரண்டு முறை செய்துகொள்ளலாம்...




சிகிச்சை எடுத்துக்கொள்ளும் முறை...*


அதிக காற்றோட்டம் இல்லாத அறையை தேர்வு செய்துகொள்ள வேண்டும். முகம் மற்றும் கழுத்து பகுதியை தைலம் (தன்வந்தர தைலம் அல்லது கற்பூராதி தைலம் சிறந்தது) கொண்டு மிதமான அழுத்தத்துடன் மசாஜ் செய்துகொள்ளவேண்டும். மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் வரையிலான மசாஜ்க்கு பின் சுடு நீரில் முக்கி பிழியப்பட்ட பருத்தித்துணியினால் முகத்தை ஒற்றி எடுக்கவேண்டும். சௌகரியமாக படுத்துக்கொண்ட நிலையில் கழுத்தை உயர்த்தி தலையை சற்று தாழ்வாக வைத்துக்கொண்டு இரண்டு நாசிகளிலும் இரண்டு துளிகள் வீதம் தைலத்தை (அணு தைலம் சிறந்தது) விடவேண்டும். தைலம் நாசி துவாரத்தின் உள்சென்றதை உறுதிசெய்த பின் வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்பளித்து கொள்ளவேண்டும்.



கிடைக்கும் பலன்கள்...*


நாள்பட்ட நோய்கள் அதாவது முகவாதம், தலைவலி, ஒவ்வாமை, வலிப்பு, பற்கள் சம்மந்தமான அனைத்து பாதிப்புகள், முகத்தில் உண்டாகும் வீக்கம், காது சம்மந்தமான அனைத்து பாதிப்புகள், இளநரை, கண் புறை முதலான அணைத்து கண் நோய்கள், மன நோய், நாசியில் உண்டாகும் தொந்தரவுகள், கழுத்து வலி, டான்சில், தோள்பட்டை வலி, புற்றுநோய், திக்குவாய், புலன்களின் தொய்வு, தூக்கமின்மை, மனஅழுத்தம், பயம், க்ரோதம், சோகம் போன்ற மனம் சார்ந்த பாதிப்புகள், காய்ச்சல், முடியுதிர்வு...இன்னும் பலவற்றிற்கு தீர்வு .



நாசித்துவாராம் வழியாக செலுத்தப்பட்ட மருந்து எளிதாக நரம்பு மண்டலத்தை அடைவதால் உடல் முழுவதும் உள்ள நரம்புகள் பலம் பெறுகின்றன, இரத்த ஓட்ட அதிகரிப்பால் பொலிவான சருமத்துடன் எந்த நோயும் நம்மை நெருங்காது வைரம் போன்ற உடலுடன் ஆயுட்காலம் நீளுகிறது.



நோயின்றி ஆரோக்கியமானவர்களும் இச்சிகிச்சைக்கு தகுதியானவர்களே... நோய் அல்லது உடல் உபாதைகளால் பீடிக்கப்பட்டவர்கள் அருகிலிருக்கும் ஆயுர்வேத மருத்துவரை அணுகுவதால் நோய்க்கான ஆலோசனை மற்றும் சிறந்த தைலத்தை பரிந்துரைக்கப்பெறலாம்...



குறிப்பாக கொரோனா நோய்த்தொற்று காலத்தில் இச்சிகிச்சையை பின்பற்றுவது சுவாசம் வழியாக செல்லும் வைரஸ்களை தாக்கி அளித்துவிடுவதால் பாதிப்பிலிருந்து தப்பித்துவிடலாம்.



ஆலோசனைக்கு, சந்தேகங்களுக்கு அணுகவும்...

*AL SHIFA AYUSH HOSPITAL*
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
தேனி 9047277577
சென்னை 9043336000

ஆயுர்வேதம் அகிலம் அறிய பகிரலாமே

Post Comment

மனிதகுலம் நோயின்றி தழைக்க இது ஒன்று போதும்...


மனிதகுலம் நோயின்றி தழைக்க இது ஒன்று போதும்...


டாக்டர்.J. பிரியங்கா ., BAMS.,

டாக்டர்.அ. முகமது சலீம் ., BAMS.,MSC., MBA.

ஆயுர்வேத மருத்துவர்கள்


ரசாயன சிகிச்சை என்றால் என்ன  ?

ரசாயனம் என்ற சமஸ்க்ருத வார்த்தையின் பொருள் - நோய் தவிர்த்து, இளமையை நீடித்து, புலன்களை சீராகி, வீர்யத்தை ஊக்கப்படுத்தும் சிகிச்சை....என்பதாகும். இன்னும் சுருக்கமாக சொன்னால் அமிர்தம்.


*எதற்காக இச்சிகிச்சை?*

நாம் அனைவருமே வாழ்க்கை போராட்ட களத்தில் போராடிக்கொண்டிருப்பவர்களே... இதற்கிடையில் நாம் செய்யும் தவறுகள் ஆதாவது ஆரோக்கியமற்ற உணவு பழக்கம், ஓய்வின்மை, உணவு பொருட்களின் கலப்படத்தால் உடலில் சேரும் நச்சு, பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்ட காய்கறியினால் உடலில் சேரும் விஷம், இரவு நேர வேலை (தூக்கமின்மை ), பகல்தூக்கம், உடற்பயிற்சியின்மை, கவலை, கோபம், பயம், மனஅழுத்தம் போன்றவற்றால் நரம்புகள் தளர்ந்து, எலும்புகள் தேய்ந்து, எழுப்பு மஜ்ஜை வற்றி, தசைகள் வலுவிழந்து, அதிக கொழுப்பு, இரத்தகுழாய் அடைப்பு, கருத்தரிப்பின்மை, விந்து குறைபாடு, சோர்வு, இயலாமை, மறதி, பொலிவின்மை முதலான பல நோய்களுக்கு ஆளாகின்றோம்... இதனாலேயே பலருக்கும் அகால மரணம் ஏற்படுகிறது... இத்தகைய காரணங்களால் ஏற்படும் வயது முதிர்வு, நோய்த்தாக்கம், அகால மரணத்தை தவிர்க்கவே கூறப்பட்டுள்ளது ரசாயன சிகிச்சை...


என்ன பயன்?*

ரசாயன மருத்துவதினால் நரம்புகள், எலும்புகள், தசைகள், எலும்புமஜ்ஜை அனைத்தும் வலுப்பெறுகிறது, அதிக கொழுப்பு, இரத்தக்குழாய் அடைப்பை சீர்செய்கிறது, பெண்மை, ஆண்மை குறைபாட்டை நீக்கி சிறந்த ஆரோக்கியமான சந்ததியினரை பெற வழிசெய்கிறது, புத்திகூர்மை, பகுத்தாய்வு திறன் மேம்பட்டு நிம்மதியை தருகிறது... இவை எல்லாவற்றால் வயது முதிர்வு தடுக்கப்பட்டு, வாழ்நாட்கள் நீடிக்கப்படுகிறது...


சிகிச்சையை_எவ்வாறு_பெறலாம் ?*

ஆயுர்வேதத்தின் எட்டு பிரிவுகளில் ஒன்றாக விவரிக்கப்பட்டுள்ளது ரசாயன மருத்துவம்.


குடிப்பிரவேசிக ரசாயனம், ஆச்சார ரசாயனம், அசார ரசாயனம், திரவ்ய ரசாயனம் என பலவாறாக பின்பற்றப்படும் ரசாயன மருத்துவம் வகைகளுள் பின்பற்ற எளிதாய் இருப்பவை திரவ்ய ரசாயன மருத்துவம்.


குறிப்பிட்ட சில ஆயுர்வேத மருந்துகளை (அமிர்தத்திற்கு நிகரான மேன்மை குணங்களை கொண்ட மூலிகைகளால் செய்யப்பட்ட ) நாள்தோறும் குறிப்பிட்ட அளவு உண்பதினால் ரசாயன மருத்துவத்தின் பலன்களை எளிதாக பெறலாம்..


அவ்வாறான ஆயுர்வேத ரசாயன மருந்துகள்...
ச்யவனப்ராஷம்
ஹரிதகி ரசாயனம்
ப்ரம்ம ரசாயனம்
விடங்காவலேகம்
பிப்பலி ரசாயனம்
சிலாஜது ரசாயனம் மகரத்துவஜ ரஸ்
வசந்தககூஸ்மாரா ரஸ்


குழந்தைகளுக்கு கொடுக்கலாமா ?*

பிரத்யேகமாக குழந்தைகளுக்கு பரிந்துரைக்கபடுபவை..
சரஸ்வதாரிஷ்டம்
வல்லாரை கீரை சாறு
அதிமதுர சூர்ணம்
சீந்தில்கொடி சாறு
சங்குபுஷ்பி சூர்ணம்


குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் ரசாயன மருத்துவதினால் அவர்களின் ஞாபக திறன், திறமை, உடல் ஆற்றல், இளமை, பொலிவு, கவர்ச்சி, குரல் வளம், புலன் ஆரோக்கியம், மனோபலம், நேர்மை, தீய பழக்கங்களுக்கு செல்லாதிருத்தல், வாழ்நாள் போன்றவை அதிகரித்து நீள்கிறது...


எந்த வயதினருக்கும் பொருந்தும் இம்மருத்துவம் கொரோனா போன்ற நோய்த்தொற்று காலங்களில் பின்பற்றுவதால் சிறந்த நோயெதிர்ப்பு ஆற்றலை பெறுவதோடு ஆரோகியமான சமுதாயத்திற்கு துணைசெய்யலாம்... ஒவ்வொரு தனி மனித ஆரோக்கியமே நாட்டை வல்லரசு பாதைக்கு கூட்டிசெல்லும்.


எந்த மருத்துவமும் மருத்துவர் ஆலோசனைக்கு உட்பட்டு எடுப்பதே சிறந்தது...

மருத்துவ ஆலோசனைக்கு அணுகவும்...

*AL SHIFA AYUSH HOSPITAL*
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
தேனி 9047277577
சென்னை 9043336000

Post Comment

புதன், மே 31, 2017

ஆயுர்வேதத்தில் அழகியல் (நிறைவு பகுதி ) முதுமை காணாத ஆரோக்கியமான இளமை வாழ்க்கைக்கு :-

ஆயுர்வேதத்தில் அழகியல்  (நிறைவு பகுதி )
முதுமை காணாத ஆரோக்கியமான இளமை வாழ்க்கைக்கு :-


டாக்டர்.அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.,MBA
டாக்டர்.ஜீவா .,BAMS






ஆயுர்வேதம் என்றால் இங்கே சோப் ,ஷேம்ப் என்றே பலராலும் அறியப்பட்டு வருகிறது . ஆயுர்வேதம் என்கிற வாழ்க்கை அறிவியலை  மேற்கத்திய கலாசாரத்தால் இன்றைய உலகத்தில் வெறும் புற அழகுக்கு மட்டும் தான்  தவறாக விளம்பரம் செய்யபடுகிறது.


ஒரு மூலிகையை சேர்த்தால் இங்கே துணி துவைக்கும் கெமிகல் பவுடர் கூட ஆயுர்வேதம் என்று விளம்பரபடுத்த படுகிறது.


ஓரிரு மூலிகையை பயன்படுத்துவதால் மட்டுமே ஆயுர்வேத அழகு நிலையங்கள் என்று தவறாக புரிந்து கொள்ளபடுகிறது .பியூட்டி பார்லர்கள் தரும் செயற்கை அழகை ஆயுர்வேதம் என்கிற போலி பெயரில் மக்களை சென்றடைகிறது .


ஆயுர்வேதம் என்றாலே மசாஜ் சென்டர் என்கிற நிலையம் என்கிற அளவிலே தான் தமிழ் நாட்டில் அறியப்பட்டு வருகிறது .


தமிழ்நாட்டில் 5 % அளவு மக்கள் மட்டும் ஆரோக்யதிற்க்காக ஆயுர்வேதத்தை நாடுகிறார்கள் என்கிறது ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்.


21 மூலிகையை கொடுத்து வளர்த்தால்     இங்கே பிராய்லர் கோழியும் மூலிகை கோழியாகும் என்கிறது இந்த போலி வியாபர உலகம்


மூலிகை கதைகள் பார்வேர்ட் செய்யும் பலருக்கு இந்த மூலிகை எங்கே பவுடராக கிடைக்கும் என்கிறது என்பதே முதல் கேள்வியாக இருக்கிறது ..மருதாணியையும் கெமிகல் கலந்த மெஹந்தி பவுடரும் ஒன்றே என்று இந்த தமிழ் சமூகம் நம்பி கொண்டிருக்கிறது .பாக்கெட்டில் ஆயுர்வேதம் கிடைக்கும் என்று போலி லேபிளில் உண்மை என்று expiry தேதி மட்டுமே பார்க்கிறது இந்த சமூகம் .


நூறு மிலி ரோஸ் வாட்டர் எப்படி மலிவு விலையில் கிடைக்கிறது என்று கேள்வி கேட்க மறுக்கிறது இந்த சமூகம்.


கலப்படம் எப்படி செய்யலாம் என்று ஆராய்ச்சி செய்யும் இந்த உலகத்தில் ஆர்கானிக் என்கிற போர்வையில் வருகிற பூதங்களை அழகிய ஆபத்து –எது உண்மை –எது போலி என்று தெரிந்து கொள்ள மறுக்கிறது இந்த உலகம் .


அரைகுறை மூலிகை அறிவை கொண்டவர்கள் பலருக்கு திடீர் வைத்தியனாய் பரிணமித்து விடுகிறார்கள். காவி உடையும் ,தாடியும் கொண்டால் இங்கே சித்தர் என்று நம்ப பெரிய கூட்டம் இருந்து கொண்டே இருக்கிறது .


விழிப்புணர்வு ஒன்றே ஆயுர்வேத சித்த –தாய் மருத்துவத்தை எனது தாய் நாட்டு மக்களுக்கு சென்றடைய வைக்கும் என்று நம்பியவனாக இரவின் பல மணித்துளிகளை மக்களுக்கு விதைத்து கொண்டே இருக்கிறேன் –இந்த புனித ரமலான் மாதத்திலும் ஓய்வை எதிர்பார்த்து காத்திருக்கும் வேளையிலும் என் பணி பிணி நீக்க செய்வதிலே என்று தொடர் எழுத்தை அறப்போராக செய்து கொண்டே இருக்கிறேன் .


ரசாயனம் என்கிற ஆயுர்வேதத்தின் எட்டு பிரிவுகளில் ஒரு பிரிவான என்றும் ஆரோக்யமாய் –இளமையாய் ,முதுமை தொட்டு விடாமல் வாழும் ஒரு பகுதியை மக்களுக்கு சென்றைடைய வைக்க என்னால் ஆன ஒரு சிறிய முயற்சி ..

முதுமை காணாத ஆரோக்கியமான இளமை வாழ்க்கைக்கு :-

ஆயுர்வேத மூலிகைகள் :-


  • சீந்தில்
  • கடுக்காய்
  • நெல்லிக்காய்
  • கன்னிக்கொடி
  • பாலைக்கீரை
  • தண்ணீர்வீட்டான் கிழங்கு
  • பிரம்மி
  • புல்லத்தி
  • மூக்கிரட்டை



ஆயுர்வேத மருந்துகள் :-


  • ச்யவனப்ராஷம்
  • சாரஸ்வதாரிஷ்டம்
  • ப்ருங்கராஜாசவம்
  • பஞ்சாரவிந்த சூரணம்
  • சிவகுளிகா
  • ப்ரம்ம ரசாயணம்
  • நரசிம்ம ரசாயணம்
  • பிருஹத் பூர்ணசந்திர ரஸ்
  • லட்சுமிவிலாச ரஸ்



ஆயுர்வேத சிகிச்சைகள் :-



  • o இரசாயன சிகிச்சை
  • o வாஜிகரண சிகிச்சை
  • o அப்யங்கம்
  • o குடிப்ராவேஷிகம்
  • o வஸ்தி
  • o நவரக் கிழி
  • o க்‌ஷீர தாரா



வெளிபிரயோகம் மட்டும் அழகை தராது ..ஆரோக்யமான வாழ்க்கை தான் அழகின் அடிப்படை என்று மக்களே தெரிந்து கொள்ளுங்கள் .

அந்த காலத்தில் ராஜாக்களுக்கு பயன்பட்ட ராஜ வைத்தியங்கள் ஆயுர்வேதம் இன்று கடைசி குடிமகனுக்கும் சென்றடைந்து  –பலனடைய வைக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று நம்பியவனாக விழிப்புணர்வே இன்றைய தேவை –ஒன்றிணைந்து இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம் இந்திய மருத்துவத்தாலே நலம் பெறுவோம்.
சிறந்த ஆயுஷ் மருத்துவ ஆலோசனைக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை –
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
சென்னை 9043336000 ( ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை –கீழ்கட்டளை)

Post Comment

செவ்வாய், டிசம்பர் 13, 2011

அதிசயம் -வழுக்கையில் முடி வளர -ஆயுர்வேத தைலம் -நீலிபிருங்காதி தைலம் Neeli brungadhi thailam


அதிசயம் -வழுக்கையில் முடி வளர -ஆயுர்வேத தைலம் -நீலிபிருங்காதி தைலம் Neeli brungadhi thailam
 (ref-ஸஹஸ்ரயோகம் - தைலப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            அவுரிச்சாறு – நீலிஸ்வரஸ                  800 கிராம்
2.            கரிசாலைச்சாறு – ப்ருங்கராஜஸ்வரஸ        800         “
3.            முடக்கத்தான் சாறு – இந்த்ரவல்லீரஸ        800         “
4.            நெல்லிக்காய்ச்சாறு – ஆமலகீரஸ            800         “
5.            வெள்ளாட்டின் பால் – அஜக்ஷீர               800         “
6.            தேங்காய்ப்பால் – நாரிகேளக்ஷீர              800         “
7.            எருமைப்பால் – மகிஷக்ஷீர                  800         “
8.            பசுவின் பால் – கோக்ஷீர                     800         “
9.            நல்லெண்ணெய் – திலதைல                 800         “

இவைகளை ஒன்று சேர்த்து அத்துடன்

1.            அதிமதுரம் – யஷ்டீ              35 கிராம்
2.            குன்றிமணி (குண்டுமணி) – குஞ்ஜா     35           “

இவைகளை மேலே கூறிய பால் வகைகளில் சிறிதுவிட்டு அரைத்துக் கல்கமாகச் சேர்த்துக் காய்ச்சி மத்யம பாகத்தில் இறக்கி வடிக்கட்டாவும். பின்னத் இறுதியாக அஞ்சனக்கல் (அஞ்ஜன) 35 கிராம் பொடித்துப் பாத்திர பாகமாக போட்டுக் கலக்கி பத்திரப்படுத்தவும்.

குறிப்பு:    சம்பிரதாயத்தில் அஞ்சனக்கல் ¼ பங்கு உபயோகிக்கப்படுகிறது.


பயன்படுத்தும் முறை:       

தலைக்குத் தேய்க்கும் படியான (சிரோப்யங்க) வெளி உபயோகத்திற்கு மட்டும்.


தீரும் நோய்கள்: 



நரை (காலித்ய), வழுக்கை (பாலித), முடியுதிரல் (கேஸபாத), முடிவளர்ச்சி குன்றல், முடியுடர்த்தியின்மை, கண்ணெரிச்சல் (நேத்ரதாஹ), சூடு, தொடர்ந்து உபயோகிக்க உடல், முக்கியமாகக் கண் குளிரும். ஓரளவுக்கு முடியும் கருமையடையும், தலைமுடித் தைலமாக உபயோகிக்கப்படுகிறது.

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. வழுக்கை வராமல் தடுக்கும்
  2. இளநரை போக்கும்
  3. முடியின் வேருக்கு ஆற்றல் தரும்
  4. முடிக்கு போஷாக்கு தரும்
  5. பல கம்பெனிகள் தங்களது பிரான்ட் நேமுடன் இந்த தைலம் தயாரிக்கிறார்கள் -ஆனால் அதில் உள்ள பார்முலாவே வேறு ..பல பொய்யான கம்பெனிகள் நீலி பிருங்காதி தைலம் என்று -ஆயுர்வேத சித்த புத்தகம் சொல்லாத பார்முலாவை பயன்படுத்தி மக்களை முட்டாள் ஆக்குகிறார்கள் ..
  6. டிவிக்களில் விளம்பரத்தில் வரும் அந்த தைலம் ,இந்த தைலம் -அமேசான் காட்டு மூலிகை என்று அண்ட பொய் ஆகாச பொய் மூட்டைகளை சொல்லி விற்கப்படும் மூலிகை தைலத்தை விட இந்த தைலம் ஆயிரம் மடங்கு  அற்புதமானது
  7. பல கம்பெனிகள் நல்லெண்ணையில் இந்த தைலம் செய்யாமல் -தேங்காய் எண்ணையில் செய்கிறார்கள் -தேங்காய் எண்ணையில் செய்யப்படும் நீலி பிருங்காதி தைலத்தை விட நல்லெண்ணையில் செய்த தைலமே ஆற்றல் மிக்கது ..பலன் தரக்கூடியது .
  8. முடி கொட்டுவதை நிறுத்தும் ,முடி நன்றாக வளர செய்யும்
  9. ஆட்டுப்பால் ,மாட்டுப்பால் ,எருமைப்பால் -சேருவதால் -தைலம் நல்ல வாசனை இருக்காது என்றாலும் துர்நாற்றம் அடிக்காது
  10. கண்ணெரிச்சல் ,உடல் சூடு தணிக்க செய்யும்
  11. குளிப்பதற்கு முன்னும் ,குளித்த பின்னும் இந்த தைலம் ஆறு மாத காலம் உபயோகித்து வர நிச்சயம் நல்ல பலன் தரும்
  12. ஆண் ,பெண் ,குழந்தைகள் என்று எல்லோரும் உபயோக்கலாம்.
  13. நிறைய குளிர்ச்சி என்றாலும் சளி பிடிக்காது -பயம் வேண்டாம் ..
  14. எனது அனுபவத்தில் ஆயுர்வேத சாஸ்திர புத்தகம் சொல்லும் பல நூறு முடி வளர வைக்கும் மூலிகை தைலங்களில் எல்லோருக்கும் பயன்படக்கூடியது இந்த தைலம்..
  15. நண்பர்களே -பக்கத்தில் உள்ள கேட்கட்டில் எனது மருத்துவமனை விலாசம் ,எனது உண்மை பெயர் வெளிவிட வேண்டுமா ? என்று வாக்கு எடுக்கிறேன் ..உங்களது வாக்கை பதிவு செய்யுங்கள் ...
குறிப்பு
உள்ளுக்கும் மருந்து சாப்பிடுவது நல்லது
வழுக்கையில் முடி முளைக்கும் என்று யார் விளம்பரம் பண்ணினாலும் நம்பவே நம்பாதீர்கள் -அது பொய் (ஆனால் இந்த தைலம் நல்ல வழுக்கை ஏற்பாடாமல் தடுக்கும் ,முடி வளர வைக்கும் )


Post Comment

செவ்வாய், டிசம்பர் 06, 2011

சதைக்கு வலுவேற்றும் -கார்ப்பாஸாஸ்த்யாதி தைலம்


சதைக்கு வலுவேற்றும் -கார்ப்பாஸாஸ்த்யாதி தைலம்
  (ref-ஸஹஸ்ரயோகம் - தைலப்ரகரணம்)   

தேவையான மருந்துகளும் செய்முறையும்:
1.            பருத்திக்கொட்டை – கார்ப்பாஸ பீஜ           200 கிராம்
2.            சித்தாமுட்டி வேர் – பலாமூல                200         “

இவற்றை 6.400 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து 1.600 லிட்டர் ஆகக் குறுக்கி வடிக்கட்டவும்.


1.            உளுந்து – மாஷ பீஜ                   200 கிராம்
2.            கொள்ளு – குலத்தா                    200         “

இவற்றை 6.400 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து 1.600 லிட்டர் ஆகக் குறுக்கி வடிக்கட்டவும்.

இனி இவ்விரண்டு கஷாயங்களையும் ஒன்று சேர்த்து அத்துடன்

நல்லெண்ணெய் – திலதைல            800 கிராம்
வெள்ளாட்டுப்பால் – அஜக்ஷீர          800         “

ஆகியவைகளையும் சேர்த்துக் கொண்டு
1.            தேவதாரு – தேவதாரு                 12.500 கிராம்
2.            சித்தாமுட்டிவேர் – பலாமூல           12.500        “
3.            சித்தரத்தை – ராஸ்னா                 12.500        “
4.            கோஷ்டம் – கோஷ்ட                  12.500        “
5.            கடுகு – ஸர்ஸப                  12.500        “
6.            சுக்கு – சுந்தீ                           12.500        “
7.            சதகுப்பை – ஸதபுஷ்ப                 12.500        “
8.            மோடி – பிப்பலீ மூல                  12.500        “
9.            செவ்வியம் – சவ்ய                    12.500        “
10.          முருங்கப்பட்டை – சிக்ருத்வக்                12.500        “
11.          மூக்கரட்டை வேர் – புனர்னவ                12.500        “

இவைகளை அரைத்துக் கல்கமாகச் சேர்த்துக் காய்ச்சி மத்யம பாகத்தில் இறக்கி வடிக்கட்டவும்.

பயன்படுத்தும் முறை:- 

 பெரும்பாலும் நஸ்யம், பஸ்தி, அப்யங்க போன்ற புறவுபயோகத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. சில சமயங்களில் 10-15 மி.லி. அளவில் சூடான தண்ணீர் அல்லது பாலுடன் உள்ளுக்கும் தரப்படுகிறது.
தீரும் நோய்கள்: 

 பாரிச வாதம் (பக்ஷாகாத), முகவாதம் எனப்படும் முகத்தின் ஒரு பகுதியைச் செயலிழக்கச் செய்யும் ஒருவித வாதரோகம் (அர்தித), தோள் பட்டைப் பகுதி செயலிழத்தல் (அவபாஹூக) போன்ற பலவித வாதரோகங்கள் (வாதரோக).
தெரிந்து கொள்ள வேண்டியவை

  1. உடலுக்கு,மூட்டுக்கு ,முதுகுதண்டுவடத்திர்க்கு   வலுவை கொடுக்கும் அதே சமயத்தில் வலிகளை போக்கும்
  2. பொதுவான மசாஜ்க்கு இந்த தைலம் தான்வந்தரம் தைலத்திற்கு அடுத்து பயன்படும்
  3. பக்க வாதம் ,முக வாதம் போன்ற வாத நோய்களில் இந்த தைலம் சிறந்து விளங்குகிறது
  4. ஆற்றல் தரும்
  5. வலிகளை போக்கும்
  6. ப்ரும்ஹனம் என்ற உடலை தேற்ற கூடிய தன்மை இதற்க்கு உள்ளது

Post Comment

சனி, டிசம்பர் 03, 2011

தோல் நோய் தீர -எரிச்சல் மாறிட -தூர்வாதி தைலம்


தோல் நோய் தீர -எரிச்சல் மாறிட -தூர்வாதி தைலம்
                                                                                                               
தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            அருகம்புல்சாறு – தூர்வா ஸ்வரஸ      3.200 கிலோ கிராம்
2.            தேங்காய் எண்ணெய் – நாரிகேள தைல  0.800                     “
3.            தண்ணீர் – ஜல                   3.200  லிட்டர்

இவைகளை ஒன்றாகக் கலந்து அத்துடன் அதிமதுரம் (யஷ்டீ) 50 கிராம் அரைத்துக் கல்கமாகச் சேர்த்துக் காய்ச்சிக் கரபாகத்தில் இறக்கி வடிகட்டவும்.

  
பயன்படுத்தும் முறை: 
           
வெளி உபயோகத்திற்கு மட்டும்.

தீரும் நோய்கள்: 


 உடலெரிச்சல் (தாஹ), சொறி (கண்டு), சிரங்கு (பாமா), பித்தம் (பித்தாதிக்ய) சீர்கேடடைந்த தோல் நோய்கள். புண்களை வெகு விரைவில் ஆற்றி அந்தப் பகுதிகளில் திசுக்கள் தோன்றி விரைந்து வளர்வதை ஊக்குவிக்கிறது.

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. அருகம் தைலம் என்றும் இதை அழைக்கலாம்
  2. தோல் நோய்களை ,அரிப்பை சரி செய்கிறது
  3. தோலில் வயதாவதால் ஏற்படும் சுருக்கம் வராமல் இருக்க -இந்த தைலத்தை தேய்த்து குளிக்கலாம்
  4. சித்த மருந்துகளில் மத்தன் தைலத்தோடு சேர்த்து போட ஆறாபுண்ணும் ஆறும்

Post Comment

வெள்ளி, நவம்பர் 11, 2011

வழுக்கையை தள்ளிபோடும் - பிருங்காமலக தைலம்


வழுக்கையை தள்ளிபோடும் - பிருங்காமலக தைலம்
 (ref-ஸஹஸ்ரயோகம் - தைலப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            கரிசாலைச்சாறு – ப்ருங்கராஜ ஸ்வரஸ       800 கிராம்
2.            நெல்லிக்காய்ச்சாறு – ஆமலகீ ரஸ      800         “
3.            நல்லெண்ணெய் – திலாதைல                800         “
4.            பசுவின் பால் – கோக்ஷீர               3.200 கிலோ கிராம்

                                 
இவைகளை ஒன்று சேர்த்து அத்துடன் 50 கிராம் அதிமதுரத்தை (யஷ்டீ) அறைத்துக் கல்கமாகச் சேர்த்துக் காய்ச்சி மத்யம பாகத்தில் இறக்கி வடிக்கட்டவும்.

     
குறிப்பு:    எண்ணெய்யின் அளவில் 24-ல் 1 பங்கு அதிமதுரத்தைக் கல்கமாகச் சேர்ப்பது சம்பிரதாயம்.
                            
பயன்படுத்தும் முறை:      

 தலைக்குத் தேய்த்துக் கொள்ளவும் (சிரோப்பயங்க), மூக்கிலிடவும் (நஸ்யம்) பயன்படுகிறது. வெளியுபயோகத்திற்கு மட்டும்.

தீரும் நோய்கள்: 

       
குரம் கம்மல் (ஸ்வரக்ஷய), கண் பார்வை மங்கல் (அந்தத்வ), செவிட்டுத்தன்மை (பாதி ரத்வ), பல்லாட்டம் (தந்த சலன), முடிகொட்டல் (கேஸ ஸத), நரைமுடி (பாலித), வழுக்கை, தூக்கமின்மை (அநித்ரா), தலைவலி (சிரோருக்), ஒற்றைத் தலைவலி (அர்த்தாவபேதக), தலைச்சுற்றல் (ப்ரம) போன்ற கண், காது, பற்கள், தலை சம்பந்தமான நோய்கள்.

                                தலைவலி, ஒற்றை தலைவலியில் இதனை நசியமிடவும். கண்ணோய்களில் உள்ளங்கால்களில் தடவ்வும். தூக்கமின்மையில் இதனை தலைமுழுக உபயோகிக்கவும். தொடர்ந்து தலைக்குத் தேய்த்துவர கண் பார்வையும், ஞாபக சக்தியும் மேம்படுகிறது. நல்ல தூக்கத்தைத் தருகிறது. தலை வலியைக் குறைக்கிறது.முடியுதிர்ந்து வழுக்கையாவதைத் தள்ளிப் போடுவதுடன் நரையையும் ஓரளவுக்கு தடுக்கிறது.

 தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. கரிசாலங்கண்ணி தைலம் என்றும் இதை அழைக்கலாம்
  2. வழுக்கை விழுதலை இந்த தைலம் தேய்ப்பதன் மூலம் தவிர்க்கலாம் ..
  3. இளநரை வராமலும் ,இளநரை வந்தாலும் -சீக்கிரமே நரைக்க விடாமல் முடியை கருப்பாக வைத்திருக்க உதவும்
  4. புலன் உறுப்புகளுக்கு நல்ல ஆற்றல் தரும்
  5. தலைவலி குறைக்கும் (பித்த தலை வலி )
  6. தூக்கமின்மைக்கும் பயன்படுத்தலாம் ..
  7. உடல் சூட்டை குறைக்கும் ..
குறிப்பு -தலையில் தேய்க்கும் தைலங்கள் -இது போன்று பலவகை உள்ளது ,வரக்கூடிய பதிவுகளில் அதை பார்த்து எது உங்களுக்கு ஏற்றதோ அதை நல்ல மருத்துவரின் மேற்பார்வையின் பெயரில் உபயோகிப்பது நல்லது ..

                               

Post Comment