வழுக்கையை தள்ளிபோடும் -
பிருங்காமலக
தைலம்
(ref-ஸஹஸ்ரயோகம் - தைலப்ரகரணம்)
தேவையான
மருந்துகளும் செய்முறையும்:
1. கரிசாலைச்சாறு – ப்ருங்கராஜ ஸ்வரஸ 800 கிராம்
2. நெல்லிக்காய்ச்சாறு – ஆமலகீ ரஸ 800 “
3. நல்லெண்ணெய் – திலாதைல 800 “
4. பசுவின் பால் – கோக்ஷீர 3.200 கிலோ கிராம்
இவைகளை ஒன்று சேர்த்து அத்துடன் 50 கிராம் அதிமதுரத்தை (யஷ்டீ) அறைத்துக்
கல்கமாகச் சேர்த்துக் காய்ச்சி மத்யம பாகத்தில் இறக்கி வடிக்கட்டவும்.
குறிப்பு: எண்ணெய்யின்
அளவில் 24-ல் 1 பங்கு அதிமதுரத்தைக் கல்கமாகச் சேர்ப்பது
சம்பிரதாயம்.
பயன்படுத்தும் முறை:
தலைக்குத் தேய்த்துக் கொள்ளவும் (சிரோப்பயங்க), மூக்கிலிடவும் (நஸ்யம்) பயன்படுகிறது.
வெளியுபயோகத்திற்கு மட்டும்.
தீரும் நோய்கள்:
குரம் கம்மல் (ஸ்வரக்ஷய), கண் பார்வை மங்கல் (அந்தத்வ), செவிட்டுத்தன்மை (பாதி ரத்வ), பல்லாட்டம் (தந்த சலன), முடிகொட்டல் (கேஸ ஸத), நரைமுடி (பாலித), வழுக்கை, தூக்கமின்மை (அநித்ரா), தலைவலி (சிரோருக்), ஒற்றைத் தலைவலி (அர்த்தாவபேதக), தலைச்சுற்றல் (ப்ரம) போன்ற கண், காது, பற்கள், தலை சம்பந்தமான
நோய்கள்.
தலைவலி, ஒற்றை தலைவலியில் இதனை நசியமிடவும். கண்ணோய்களில்
உள்ளங்கால்களில் தடவ்வும். தூக்கமின்மையில் இதனை தலைமுழுக உபயோகிக்கவும்.
தொடர்ந்து தலைக்குத் தேய்த்துவர கண் பார்வையும், ஞாபக சக்தியும் மேம்படுகிறது. நல்ல தூக்கத்தைத்
தருகிறது. தலை வலியைக் குறைக்கிறது.முடியுதிர்ந்து வழுக்கையாவதைத் தள்ளிப் போடுவதுடன்
நரையையும் ஓரளவுக்கு தடுக்கிறது.
தெரிந்து கொள்ள வேண்டியவை
- கரிசாலங்கண்ணி தைலம் என்றும் இதை அழைக்கலாம்
- வழுக்கை விழுதலை இந்த தைலம் தேய்ப்பதன் மூலம் தவிர்க்கலாம் ..
- இளநரை வராமலும் ,இளநரை வந்தாலும் -சீக்கிரமே நரைக்க விடாமல் முடியை கருப்பாக வைத்திருக்க உதவும்
- புலன் உறுப்புகளுக்கு நல்ல ஆற்றல் தரும்
- தலைவலி குறைக்கும் (பித்த தலை வலி )
- தூக்கமின்மைக்கும் பயன்படுத்தலாம் ..
- உடல் சூட்டை குறைக்கும் ..
2 comments:
நல்ல பகிர்வுசார்.
வாழ்த்துக்கள்.
பயனுள்ள பகிர்வு
கருத்துரையிடுக