வியாழன், நவம்பர் 03, 2011

தலை பிரச்சனைக்கு - அஸனவில்வாதி தைலம்


தலை பிரச்சனைக்கு - அஸனவில்வாதி தைலம்
  (ஸஹஸ்ரயோகம் தைல ப்ரகரணம்)


தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            வேங்கை அசன               200 கிராம்
2.            வில்வவேர் பில்வமூல       200         “
3.            சித்தாமுட்டி வேர் பலாமூல     200         “
4.            சீந்தில்கொடி குடூசி           200         “
5.            தண்ணீர் ஜல              12.800 லிட்டர்

                இவைகளைக் கொதிக்க வைத்து 3.200 லிட்டர் ஆகக் குறுக்கி வடிக்கட்டி அத்துடன்

1.            நல்லெண்ணெய் திலதைல 800 கிராம்
2.            பசுவின் பால் கோக்ஷீர     800         “

சேர்த்து அதில்

1.            அதிமதுரம் யஷ்டீ                                 26.500 கிராம்
2.            சுக்கு சுந்தீ                                          26.500       “
3.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீ பலத்வக்       26.500       “
4.            தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) பிபீதகீ பலத்வக்     26.500       “
5.            நெல்லிமுள்ளி ஆமலகீ பலத்வக்                     26.500       “

                இவைகளை அரைத்துக் கல்கமாகச் சேர்த்துக்காய்ச்சி மத்யம பாகத்தில் இறக்கி வடிகட்டவும்.


பயன்படுத்தும் முறை:       

மேற்பூச்சாக (அப்யங்க) வெளி உபயோகத்திற்கு மட்டும் குளிப்பதற்கு முன்

தீரும் நோய்கள்:  

பொதுவான கண்ணோய்கள் (நயன ரோக), காது நோய்கள் (கர்ண ரோக), தலை நோய்கள் (சிரோரோக). வாத உபத்திரவத்தைக் குறைக்க வல்லது.

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. இந்த தைலத்தில் -அதிமதுரம் ,சுக்கு போன்றவைகள் உள்ளதாலும் -பொதுவாக தலைக்கு எண்ணை தேய்த்து குளிக்கவும் ,மண்டை பீனசம் வராமலும் தடுக்கவும் இந்த மருந்து உதவும்
  2. கண்ணுக்கு ,காதுக்கு -நல்ல ஆற்றலை தரும் ..
  3. தலை சார்ந்த நோய்களை -பீனசம் ,தலை வலி போன்றவற்றுக்கும் பயன்படுத்தலாம் ..
  4. அசன வில்வாதி புத்தியையும் -அறிவு கூர்மையையும் வளர்க்கும் ..
  5. பிரமீ தைலம் ,சுக்குதைலம் ,பீனச தைலம் போன்ற  பல தைலங்களில் சிறந்த தலையில் தேய்க்கும் மருந்துகளில் சிறந்த மருந்து



Post Comment

0 comments:

கருத்துரையிடுக