உடலை குளிர்ச்சியாக்கும் -சந்தனாதி தைலம்
(ref-பைஷஜ்யரத்னாவளி - வாஜீகரணாதிகாரம்)
தேவையான
மருந்துகளும் செய்முறையும்:
1. தண்ணீர் – ஜல 3.200 லிட்டர்
2. நல்லெண்ணெய் – திலதைல 800 கிராம்
இவைகளில்
1. வெள்ளைச்சந்தனம் – சந்தன 3.125 கிராம்
2. செஞ்சந்தனம் – ரக்த சந்தன 3.125 “
3. மஞ்சள் சந்தனம் (மரமஞ்சள்) – தாரு ஹரீத்ரா 3.125 “
4. காலீயகம் – பட்டாங்க 3.125 “
5. அகில்கட்டை – அகரு 3.125 “
6. காரகில் கட்டை – க்ருஷ்ண அகரு 3.125 “
7. தேவதாரு – தேவதாரு 3.125 “
8. ஸரளதேவதாரு – ஸரள 3.125 “
9. பதிமுகம் – பத்மகம் 3.125 “
10. தூணிகம் - 3.125 “
11. பச்சைக்கற்பூரம் – கற்பூர 3.125 “
12. கஸ்தூரி – கஸ்தூரி 3.125 “
13. கஸ்தூரி வெண்டைக்காய் விதை 3.125 “
14. ஸிஹ்லகமரத்தின் பிசின் – (Liquid
Storax) 3.125 “
15. குங்குமப்பூ – குங்குமகேஸர 3.125 “
16. ஜாதிக்காய் – ஜாதிபல 3.125 “
17. ஜாதிபத்திரி – ஜாதீபத்ர 3.125 “
18. இலவங்கம் – லவங்க 3.125 “
19. சிற்றேலம் – ஏலா 3.125 “
20. பேரேலம் – ப்ருஹத் ஏலா 3.125 “
21. தக்கோலம் – தக்கோல 3.125 “
22. இலவங்கப்பட்டை – லவங்கத்வக் 3.125 “
23. இலவங்கப்பத்திரி – லவங்கபத்ரி 3.125 “
24. சிறுநாகப்பூ – நாககேஸர 3.125 “
25. குருவேர் – ஹ்ரிவேர 3.125 “
26. விளாமிச்சவேர் – உசீர 3.125 “
27. ஜாதிமல்லி – ஜாதீ 3.125 “
28. இலவங்கப்பட்டை – லவங்கத்வக் 3.125 “
29. சடாமஞ்சில் – ஜடாமாம்ஸீ 3.125 “
30. பச்சைக்கற்பூரம் – கற்பூர 3.125 “
31. உஷ்ணா (கல்பாசி) – ஸைலேய 3.125 “
32. கோரைக்கிழங்கு – முஸ்தா 3.125 “
33. அரேணுகம் – ஹரேணுக 3.125 “
34. ஞாழல்பூ – ப்ரியாங்கு 3.125 “
35. கந்தபெரோஜா – சரளநிர்யாஸ 3.125 “
36. சுத்தி செய்த குக்குலு – குக்குலு (சுத்தி) 3.125 “
37. கொம்பரக்கு – லாக்ஷா 3.125 “
38. நகம் – நக 3.125 “
39. வெள்ளைக் குங்கிலியம் – ஸர்ஜரச 3.125 “
40. காட்டாத்திப்பூ – தாதகீ 3.125 “
41. கஸ்தூரி மஞ்சள் – வன ஹரீத்ரா 3.125 “
42. மஞ்சட்டி – மஞ்ஜிஷ்டா 3.125 “
43. கிரந்திதகரம் – தகர 3.125 “
44. தேன்மெழுகு – மதூச்சிஷ்ட 3.125 “
இவைகளைப் பச்சைக்
கற்பூரம், கஸ்தூரி, குங்குமப்பூ நீங்கலாகக் கல்கமாக அறைக்க
வேண்டியவைகளை அரைத்தும், கரைக்க
வேண்டியவைகளைக் கரைத்தும் சேர்த்துக் காய்ச்சி மத்யம பாகத்தில் இறக்கி
வடிக்கட்டவும். ஆறிய பின்னர் கஸ்தூரி, பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ
இவைகளைக் கல்வத்திலிட்டரைத்துச் சேர்க்கவும்
குறிப்பு:
இதை மிகுந்த வாசனை உள்ளதாகச் செய்ய வேறு ஓர்
முறை கையாளப்படுகின்றது.
சரக்குகளைப் போதுமான அளவு தண்ணீரில் ஒன்று
இரண்டாகப் பொடித்துப் போட்டு எண்ணெய்யையும் ஊற்றிக் கலந்து கலத்தின் வாயைப்
பொருத்தமான மூடியால் மூடிச் சீலை மண் பூசி அடுப்பிலேற்றி தினமும் ஆவிவரும் அளவு
சூடுசெய்து எரிப்பை நிறுத்தவும். இவ்விதம் 15 முதல் 20 நாட்கள் சூடுசெய்து பின்னர் எண்ணெய்யைக்
கலங்காது மேலாக எடுத்து ஜாடியிலிட்டுச் சில நாட்கள் வெய்யிலில் வைத்துப்
பத்திரப்படுத்தவும்.
நல்லெண்ணெய்க்கு பதில் தேங்காய் எண்ணெய்
சேர்த்தும் தயார் செய்யலாம்.
.
பயன்படுத்தும்
முறை:
வெளி உபயோகத்திற்கு மட்டும்.
தீரும் நோய்கள்:
ஆண்மைக்குறைவு, நபும்ஸகத் தன்மை, மலட்டுத்தன்மை, அரிப்பு, துர்நாற்றம், க்ஷயம், அதிகமாக வியர்த்தல்.
- இந்த தைலம் உடல் சூட்டை முற்றிலுமாக சரிசெய்யும்
- ஆண்மை வளர்க்கும்
- தாதுக்களுக்கு புஷ்டி தரும்
- வியர்வை நாற்றம் அழிக்கும்
- தினமும் தேய்க்கலாம்
2 comments:
நல்ல பதிவு.
நன்றி.
நண்பரே வணக்கம் ,
அருமை தொடருங்கள் என்னால் தான் உங்களை தொடர்ந்து பின்னோட்டம் தற்காலிகமாக இடமுடியவில்லை. .இந்த தைலம் எண்ணை குளியல் போல் பயன் படுத்தலாமா?
நட்புடன் ,
கோவை சக்தி
கருத்துரையிடுக